உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 15, 2010

கேமரூனை வென்றது ஜப்பான் (1-0)


புளோயம்பாண்டீன்:
 
           உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஜப்பான் (1-0) கேமரூனை வென்றது.இவ்விரு அணிகள் மோதிய ஆட்டம் இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினாலும் முதல் 35 நிமிடங்கள் வரை இரு அணிகளுக்கும் கோல் கிடைக்கவில்லை. முதல் பாதி நேரத்தில் இரு அணிகளுக்கும் கோல் கிடைக்காது என்று ரசிகர்கள் நினைத்திருந்தபோது ஆட்டத்தின் 39-வது நிமிடத்தில் ஜப்பானின் கெய்சுகே ஹோண்டா கோல் அடித்து ஜப்பானுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தினார். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் கோல் கிடைக்கவில்லை. இறுதியில் ஜப்பான் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. கோலடிக்க எடுத்த முயற்சியில் 72-வது நிமிடத்தில் கேமரூனின் நிக்கோலஸýம், 90-வது நிமிடத்தில் ஜப்பானின் யூகியும் மஞ்சள் அட்டையால் எச்சரிக்கப்பட்டனர்.

Read more »

விழுப்புரம் அருகே தண்டவாளம் தகர்ப்பு கடலூர் மாவட்டத்தில் போலீஸ் ரோந்து தீவிரம்

கடலூர்:

                    வி ழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் வெடிவைத்துத் தகர்க்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு போலீசார்ரின் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு இருந்தனர். அனைத்து போலீஸ் சோதனைச் சாவடிகளிலும் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

                சந்தேகப்படும் நபர்கள் தீவிர விசாரணைக்குப் பின்னரே விடுவிக்கப்பட்டனர். நெடுஞ்சாலை ரோந்துப் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ரயில் நிலையங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. தண்டவாளங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டன. மாவட்டத்தில் உள்ள அனைத்து லாட்ஜுகளும் போலீஸôரால் சோதனையிடப்பட்டன. அவற்றில் தங்கி இருந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. மாவட்டத்தில் தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இடம் பெற்று இருப்பவர்கள், அவர்களுடன் தொடர்பு வைத்து இருப்பவர்கள், கியூ பிரிவு போலீஸôரால் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள வெடிமருந்து கிடங்குகள் சோதனையிடப்பட்டன. நாட்டு வெடி தயாரிப்போரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

விருத்தாசலம்: 

                   விருத்தாசலம் சந்திப்பில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் ஞாயிற்றுக்கிழமை தீவிர ஆய்வு செய்தனர். விழுப்புரத்தை அடுத்த சித்தணி கிராமத்தில் சனிக்கிழமை, தண்டவாளம் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் ரயில்வே போலீஸôர் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன்படி விருத்தாசலம் சந்திப்பில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டு வரும் பொருள்களை தீவிர ஆய்வு செய்தனர். மேலும் ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்புப் பணியில் போலீஸôர் ஈடுபட்டு வருகின்றனர்.

Read more »

விரக்தியின் உச்சத்தில் என்எல்சி தொழிலாளர்கள்

நெய்வேலி:

                என்எல்சி தொழிலாளர்களுக்கான ஊதியமாற்று ஒப்பந்தத்துக்கான  பேச்சுவார்த்தை இன்று முடியும், நாளை முடியும் என்று ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்திருந்து 6 மாதங்களாகிவிட்ட நிலையிலும் இதுவரை ஒப்பந்தம் ஏற்படாததால் தொழிலாளர்கள் விரக்தியின் உச்சத்துக்கே சென்று, எங்களுக்காக தொழிற்சங்கங்கள் பேசியது போதும், நிர்வாகமே தானாக வழங்கினால் கூட பரவாயில்லை என்ற நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

                 01-01-2007 முதல் என்எல்சி தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தில் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்டத் தொழிற்சங்க நிர்வாகிகள் நிர்வாகத்துடன் கடந்த 6 மாதமாக நெய்வேலி மற்றும் சென்னையில் பலச்சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் இப் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க வகையில் சில முன்னேற்றங்களை கண்ட போதிலும் அலவன்சு மற்றும் இன்கிரிமென்ட் ஆகியன முன்தேதியிட்டு பெறுவதில் தொழிற்சங்கங்கள் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.÷ஆனால் நிர்வாகமோ ஒப்பந்தம் ஏற்படக்கூடிய தினத்திலிருந்தே வழங்க முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

                    இந்நிலையில் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் ஒப்பந்தத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தி மே 29-ல் நிர்வாகத்திடம் ஸ்டிரைக் நோட்டீஸ் வழங்கியுள்ளது.இதையடுத்து நிர்வாகத்துக்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே சமரச முயற்சி ஏற்படுத்தும் விதமாக மத்திய தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் சென்னையில் ஜூன் 11-ல் நடந்த பேச்சில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.÷இதையடுத்து திங்கள்கிழமை மீண்டும் நெய்வேலி என்எல்சி தலைமை அலுவலகத்தில் பேச்சு நடைபெறவுள்ளது. ஸ்டிரைக் நோட்டீஸ் வழங்கி 15 தினங்களுக்கு மேலானதால், தொழிற்சங்கங்கள் எந்நேரத்திலும் ஸ்டிரைக் அறிவிக்க நேரிடும் என்பதால், நிர்வாகம் ஜூன் 14 முதல் ஊழியர்கள் எவருக்கும் விடுப்பு அளிக்கக் கூடாது துறைவாரியாக மேலாளர்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.

                   இந்நிலையில் தொழிலாளர்களுக்கான ஊதியமாற்று ஒப்பந்தப் பேச்சுவார்த்தை முடிவு தெரியாமல் நீண்டு கொண்டு செல்லும் வேளையில், அதிகாரிகளுக்கான ஊதியமாற்று ஒப்பந்தம் முடிவுற்று அவர்கள் கடந்த ஓராண்டாக 6-வது ஊதியக் குழு பரிந்துரையின் பேரில் புதிய ஊதியம் பெற்று வருகின்றனர். மேலும் ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் சிறப்பு ஊதியமாக பணிச் செயல்பாடுகளுக்கேற்ப ஊதியத்தையும் ஜூன் 11-ல் பெற்றுள்ளனர். இவ்வாறாக அதிகாரிகள் தொடர்ந்து பணப்பயன் பெற்றுவரும் வேளையில், அவர்களுக்கு கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பயன்கள் கானல் நீராகி வருவது கண்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தற்போதைய நிலையில் ஊதியமாற்று ஒப்பந்தம் ஏற்படுகிறதோ இல்லையோ, நிர்வாகம் தானாகவே முன்வந்து வழங்கினால்கூட அதைப் பெற்றுக் கொள்ளும் நிலைக்கு தொழிலாளர்கள் தயாராகியுள்ளனர். தொழிற்சங்கங்கள் விரைந்து விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior