உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஆகஸ்ட் 12, 2010

ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல்

            ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சர்கள் குழு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

            டிசம்பரில் தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கும் பணி தொடங்கும்போது ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளலாம் எனவும் அமைச்சரவைக்கு அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

              இது தொடர்பாக முடிவெடுக்க பிரணாப் முகர்ஜி தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு புதன்கிழமை கூடியது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தலாம் என இந்தக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பான இறுதி முடிவை அமைச்சரவை விரைவில் அறிவிக்கும் எனவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. அமைச்சர்கள் குழுவில் பிரணாப் முகர்ஜி தவிர, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறை அமைச்சர் பரூக் அப்துல்லா, வேளாண் அமைச்சர் சரத் பவார், ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

               ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கோரி ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜவாதி கட்சி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கடந்த நாடாளுமன்றத் கூட்டத் தொடரில் கடும் அமளியில் ஈடுபட்டன. அதன் பின்னர் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படாததால் அமைச்சர்கள் குழு ஜூன் மாதம் அமைக்கப்பட்டது.  ஜூலை 1-ம் தேதி நடைபெற்ற அமைச்சர்கள் குழுவின் முதல் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து இப் பிரச்னை தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் பிரணாப் முகர்ஜி கடிதம் எழுதியிருந்தார்.ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு காங்கிரசும், பாரதிய ஜனதா கட்சியும் சம்மதம் தெரிவித்தன. பெரும்பாலான கட்சிகள் சம்மதம் தெரிவித்த நிலையில், புதன்கிழமை கூடிய அமைச்சர்கள் குழு ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல் அளித்தது.

Read more »

வாழைப் பாதுகாப்பில் புதிய தொழில்நுட்பம்



கிழக்கு ராமாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஞானசேகரனின் தோட்டத்தில் நைலான் கயிறுகளால் கட்டப்பட்ட வாழைமரங்கள்.
கடலூர்:
 
             வாழைப் பாதுகாப்பில் புதிய தொழில்நுட்பத்தை விவசாயிகள் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.
 
              தமிழ்நாட்டில் 83 ஆயிரம் ஹெக்டேரில் வாழை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்டங்களில் வாழை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் முட்லூர், வல்லம்படுகை, கடலூரை அடுத்த கேப்பர் மலை கிராமங்களில் 4 ஆயிரம் ஹெக்டேரில் வாழை பயிரிடப்பட்டு உள்ளது.
 
             வாழை சாகுபடியில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு | 50 ஆயிரத்துக்கு மேல் லாபம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. வாழைப் பயிரில் நோய்த் தாக்குதல் பெருமளவுக்கு ஏற்படுவதில்லை. எனினும், சூறாவளிக் காற்று பல நேரங்களில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி விடுகிறது.  சவுக்கு, யூகலிப்டஸ் உள்ளிட்ட மரக்கழிகளை வாழை மரங்களுக்கு முட்டுக் கொடுத்து, காற்றில் விழுந்து விடாதவாறு பாதுகாக்கும் முறை, காலம் காலமாக விவசாயிகளால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கான கழிகள் வாங்க ஏக்கருக்கு | 20 ஆயிரம் செலவாகிறது. 
 
              கயிறு உள்ளிட்ட பொருள்கள் மற்றும் கட்டுக்கூலி ஆகியவற்றுடன் சேர்த்துப் பார்க்கும்போது, ஏக்கருக்கு | 25 ஆயிரம் செலவாகிறது. இதற்காக வங்கிகள் ஏக்கருக்கு | 25 ஆயிரம் வரை கடன் வழங்குகின்றன. வாழை மரங்களை நைலான் கயிறுகளால் இணைத்துக் கட்டிவிடும் புதிய தொழில்நுட்பம், நல்ல பலனைத் தருவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். ஒவ்வொரு வாழை மரத்தைச் சுற்றியும், ஒரு நைலான் கயிற்றை தொய்வாகக் கட்டிவிட்டு, அதில் இருந்து 4 புறமும் வாழைகளை நீண்ட நைலான் கயிறுகளால் இணைத்து, இறுதியாக மின்கம்பங்களுக்கு ஸ்டேவயர் கட்டுவதுபோல் நிலத்தில் இழுத்துக் கட்டிவிடும் புதிய முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
 
              கழிகளை முட்டுக் கொடுக்கும் பாதுகாப்பு முறையைவிட, இவ்வாறு நைலான் கயிறுகளால் வாழைகளை பிணைத்துக் கட்டுவதால், சூறாவளிக் காற்றில் இருந்து 100 சதவீதம் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். கழிகளுக்கு ஆகும் செலவைவிட நைலான் கயிறுகளுக்கு செலவு குறைவாகவும், ஒருமுறை பயன்படுத்திய நைலான் கயிறுகளை,  8 ஆண்டுகள் வரை கூட தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு ஏக்கருக்கு | 13 ஆயிரம்தான் செல்வாகிறது என்றும் விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.
 
டலூர் அருகே கிழக்கு ராமாபுரம் ஊராட்சி மன்றத் தலைவரும் முன்னோடி விவசாயியுமான ஞானசேகரன் கூறியது,
 
               தனது வாழைத் தோட்டங்களில் 3 ஏக்கரில் மட்டும் நைலான் கயிறுகளால் பிணைத்துக் கட்டும் புதிய தொழில்நுட்பத்தைப் பின்பற்றி இருக்கிறார்.÷இதனால் இரு தினங்களுக்கு முன் இப்பகுதியில் அடித்த சூறைக்காற்றில், 250 ஏக்கரில் வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்த போதிலும், தனது வாழை மரங்கள் முழுமையாகத் தப்பியதாக ஞானசேகரன் தெரிவித்தார். கடலூர் மாவட்டத்தில் முதல்முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை 3 ஏக்கரில் மட்டும் பயன்படுத்தியவர் ஞானசேகரன். 
 
                    பிற மாவட்டங்களில் தலா 30 அல்லது 40 ஏக்கரில் மட்டும் பிரபலமாகி இருக்கும் இந்த புதிய பாதுகாப்பு முறையை, மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் ஆலோசனை தெரிவித்தார்.மேலும் வாழைமரங்களின் பழங்கள், நார் ஆகியவற்றைக் கொண்டு, புதிய பொருள்களை உருவாக்கி விவசாயிகள் தங்கள் வருவாயை உயர்த்த முடியும் என்றும் அவர் கூறினார்.

Read more »

நெய்வேலிவாசிகளுக்கு மறுக்கப்படும் அரசின் கலர் டி.வி



நெய்வேலி:
 
             நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன ஊழியர்களுக்கும் அவர்களைச் சார்ந்து வாழ்பவர்களுக்கும் தமிழக அரசால் வழங்கப்படும் இலவச கலர் டி.வி. உள்ளிட்ட அனைத்து நலத்திட்ட உதவிகளும் மறுக்கப்படுவதால் அவர்கள் விரக்தியில் உள்ளனர்.
 
           கடலூர் மாவட்டத்தின் மையப் பகுதியில் சுமார் 25 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நெய்வேலியில் 20 ஆயிரம் என்எல்சி ஊழியர்களின் குடும்பத்தினரும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களின் குடும்பத்தினரும், அவர்களைச் சார்ந்து வாழும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் உள்ளனர். நெய்வேலி நகரத்தின் மின்சாரம், குடிநீர், சுகாதாரம், சாலை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் என்எல்சி நிர்வாகமே செய்து வருகிறது.
 
            இந்நிலையில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் வரை குறிஞ்சிப்பாடி தொகுதியில் அங்கம் வகித்த நெய்வேலி நகரம், தற்போது தொகுதி மறு சீரமைப்பு காரணமாக புதிய நெய்வேலி தொகுதியாக உருவெடுத்துள்ளது. என்எல்சியின் சுற்றுப்புற மேம்பாட்டு நிதி மூலமாக அருகில் 10 கி.மீ. தொலைவுக்குள் உள்ள கிராமங்களின் சாலை வசதி, பள்ளிக் கட்டடம், நூலகம், பாலம், ஆழ்துளைக் கிணறு அமைப்பது, மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி போன்ற பணிகளை செய்து கொடுக்கப்படுவதால், மாவட்ட நிர்வாகத்தின் பணியையும் என்எல்சி நிர்வாகம் செய்து வருகிறது. இதுமட்டுமல்லாமல் என்எல்சியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் (2,490 மெகாவாட்) சரி பாதி தமிழகத்துக்கு மிகக் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. மேலும் நெய்வேலியில் உள்ள 3 காவல் நிலையங்களுக்கும் வாகன வசதி, இலவச மின்சாரம், |40 லட்சம் செலவில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் என பல சலுகைகளையும் என்எல்சி செய்து கொடுத்துள்ளது.
 
             ந்நிலையில் பல கோணங்களிலும் தமிழக அரசுக்கு துணையாக விளங்கும் என்எல்சி நிறுவனத்தின் ஊழியர்கள் அரசின் நலத்திட்ட உதவிகோரி மாவட்ட நிர்வாகத்தை அணுகினால், "நலத்திட்ட உதவிகள் நெய்வேலிக்கு இல்லை' என்று கூறி திருப்பி அனுப்பிவிடுகின்றனர். வாக்களிக்கும் எங்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட நிர்வாகம் வழங்க மறுப்பது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்புகின்றனர் என்எல்சி ஊழியர்கள்.
 
ஆட்சியர் விளக்கம்: 
 
              தற்போது கிராம பஞ்சாயத்து, ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கலர் டி.வி. வழங்கியிருக்கிறோம். அடுத்து நகராட்சிப் பகுதிகளுக்கு வழங்கும் போது நெய்வேலி டவுன்ஷிப் பகுதிக்கும் வழங்கப்படும் என ஆட்சியர் சீதாராமன் தெரிவித்தார். ஆனால், கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம் நகராட்சிப் பகுதிகளில் இலவச கேஸ் அடுப்பு மற்றும் இலவச கலர் டி.வி. ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior