உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 09, 2010

கடலூர் மாவட்டத்தில் 100 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு


ஞாயிற்றுக்கிழமை அடித்த ஜல் புயலில், கடலூர் அருகே எஸ்.புதூரில் ஒடிந்து விழுந்து கிடக்கும் வாழை மரங்கள்.
 
கடலூர்:

             "ஜல்' புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் ஒடிந்து விழுந்ததால், 100 கிராமங்களில் திங்கள்கிழமை 2-வது நாளாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. 500 ஏக்கரில் வாழை, கரும்பு, உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தன.

                 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் பலத்தக் காற்றுடன் மழை பெய்ததால், கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி ஆகிய பகுதிகளில் புயலின் தாக்கம் கடுமையாக இருந்தது. மின்கம்பங்கள் சாய்ந்தன புயல் தாக்கியதும் முதல் பாதிப்பு மின்சாரம் துண்டிக்கப்பட்டதுதான். கடலூர், கேப்பர் மலை உள்ளிட்ட பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் ஒடிந்து விழுந்ததில் திங்கள்கிழமை 2-வது நாளாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் உயர் அழுத்த மின் கம்பங்களும் ஒடிந்து விழுந்தன. 

                   பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்ததால், மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி நகரங்களில் காலை முதல் இரவு வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது. சில இடங்களில் இரவு 8 மணிக்கு மேல் மின் இணைப்பு வழங்கப்பட்டது. 

விவசாயப் பயிர்கள் பாதிப்பு:

                        புயல் காரணமாக கேப்பர் மலைப் கிராமங்கள் மற்றும் நெல்லிக்குப்பம் பண்ருட்டி பகுதிகளில் வாழை மரங்கள் ஒடிந்து விழுந்தன. கரும்பு, ரோஜா, மல்லிகை பூந்தோட்டங்கள் பலவும் சேதம் அடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். தென்னை, மா, பலா, தேக்கு உள்பட 1000-க்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்து விட்டன. கரும்புப் பயிர்களும் சாய்ந்தன.

இது குறித்து கடலூரை அடுத்த ராமாபுரம் ஊராட்சி மன்றத் தலைவரும் விவசாயியுமான ஞானசேகரன் கூறுகையில், 

                    "100 ஏக்கரில் ரோஜா மற்றும் மல்லிகை தோட்டங்கள் சேதம் அடைந்து உள்ளன. இனி இவற்றில் புதிதாகத் தளிர் வந்த பிறகுதான், பூக்களைக் காண முடியும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது' என்றார். 

பெண்ணை ஆற்றில் வெள்ளம்

                         நட்டு 10 நாள்கள் ஆன சம்பா நெல் வயல்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டு இருக்கிறது.

Read more »

மர வியாபாரியின் குடோனாக மாறிய நெல்லிக்குப்பம் ஜீவா நகர் பஸ் நிறுத்த நிழற்குடை

நெல்லிக்குப்பம்:

                     நெல்லிக்குப்பம் ஜீவா நகர் பஸ் நிறுத்தம் தனியார் மரம் வியாபாரியின் குடோனாக மாறியதால் மக்கள் சிரமப்படுகின்றனர். நெல்லிக்குப்பம் நகராட்சி ஜீவா நகர் அருகே மின்வாரிய அலுவலகம் இரண்டு முக்கிய தனியார் மருத்துவமனைகள், சர்க்கரை ஆலை அலுவலகம், கல்வியியல் கல்லூரியும் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். 2,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் பஸ் நிறுத்தம் வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் தனர். பஸ் நிறுத்தம் கட்டினால் பஸ் கள் நிறுத்தப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

                     இதனைத் தொடர்ந்து டாக்டர் சடகோபன் நினைவாக டாக்டர் கிருஷ் ணகோபால் தனது செலவில் நமக்கு நாமே திட்டத்தில் சாலையின் இருபுறமும் இரண்டு பயணிகள் நிழற்குடைகளை கட்டினார். 2001ம் ஆண்டு அப்போதைய கலெக்டர் சந்தீப் சக்சேனா திறந்து வைத்தார்.விழாவில் பங்கேற்ற போக்குவரத்துத் துறை மற்றும் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் இனி இங்கு பஸ்கள் நிற்கும் என கூறினர். ஓரிரு மாதங்கள் பஸ்கள் நின்றன. அதன்பிறகு பஸ்கள் நிற்பதில்லை. பஸ் நிறுத்தத்தை மர வியாபாரி ஒருவர் குடோனாக பயன் படுத்த துவங்கினார்.

                       மற்றொரு பஸ் நிறுத் தம் பகலில் மீன் கடையாகவும் இரவில் சமூக விரோதிகள் கூடாரமாகவும் மாறியது.அப்பகுதி மக்கள் கலெக்டர், முதல்வர், கவர்னர் என பலருக்கு தொடர்ந்து மக்கள் மனு அனுப்பி வந்தும் பஸ்களை நிறுத்த நடவடிக்கை இல்லை.பயணிகள் நிழற்குடை கட்டினால் பஸ்கள் நிறுத் தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததால் நிழற்குடை கட்டப்பட்டது. ஆனால் அதிகாரிகள் கூறியது போல் பஸ்கள் நிற்பதில்லை. மனுக்கள் கொடுத்து நடவடிக்கை இல்லாததால் பஸ்கள் நிறுத்த வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் மனு கொடுத்துள்ளனர்.

Read more »

அரசு தொழில் நுட்பத் தேர்வு நாளை முதல் துவங்குகிறது

கடலூர் :  

               அரசு தொழில் நுட்பத் தேர்வு நாளை 10ம் தேதி துவங்குகிறது. 

இதுகுறித்து அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனரின் செயலாளர் இந்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

                   அரசு தொழில் நுட்பத் தேர்வுகளான விவசாயம், கைத்தறி நெசவு மற்றும் அச்சுக் கலைப்பிரிவு பாடங்களுக்கான தேர்வுகள் நாளை 10ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடக்கிறது. அதில் விவசாய பிரிவு தேர்வு கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களைச் சேர்ந்த 5,401 பேருக்கு கடலூர் நகராட்சி பள்ளியில் நடக்கிறது.  அதேப் போன்று அச்சுக்கலை தேர்வு விருத்தாசலம் பாத்திமா மேல்நிலைப் பள்ளியிலும், கைத்தறி நெசவு தேர்வு சேலம் மாவட்டம் வேம்படித்தலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நடக்கிறது. அச்சுக்கலை மற்றும் கைத்தறி நெசவுப் பிரிவு தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை (ஹால் டிக்கெட்) நாளை முதல் தேர்வு மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior