உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், நவம்பர் 30, 2010

நந்தலாலா திரைப்படத்தோடு என் அனுபவம்


           நேற்று (29/11/2010) சிறு  பிரச்னை, அதை  மறக்க நீண்ட நாட்களுக்கு சினிமா செல்லலாம் என்று நினைப்போடு திரை அரங்கத்திற்கு சென்றேன்.  கடந்த வாரம் திரையிடப்பட்ட நந்தலாலா திரைப்படத்திற்கு அனுமதி சீட்டு கிடைத்தது.

            திரைப்படம் தொடங்கியதிலிருந்தே ஒரு சின்ன எதிர்பார்ப்பு, கதையும் கதைக்கான  கருப்பொருளும் சற்று வித்தியாசமானதாய் அமைந்திருந்தது. 

கதையின் சுருக்கம்:




                தாயை தேடி செல்லும் ஒரு ஐந்து வயது பள்ளி சிறுவன் அந்த சிறுவனுக்கு உதவியாக ஒரு மன நலம் சரியில்லாத ஒரு மனிதர்.     தாயை தேடி செல்லும்வழியில் அச்சிறுவனும் மன நலம் சரியில்லாத மனிதரும் சந்திக்கும் நபர்கள், பிரச்சனைகள்தான்  கதையின் சுருக்கம்.  தாயின் பாசத்திற்காக ஏங்கும் ஒரு குழந்தையின் உணர்வுகளை அழகாக இயக்குனர் சொன்னவிதம் சற்றே வித்தியாசம்.     

நம் தளத்தின் வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள்

            பிரமாண்டம் எனும் பெயரில் கோடி கோடியாய் செலவழித்து தமிழ் சினிமாவை சிதைப்பவர்கள்  மத்தியில் இதுபோல் உணர்வின் வெளிப்பாட்டை வெளிப்படுத்தும் ஒரு சில படங்களை வரவேற்போம், உங்களால் முடிந்தால் இந்த படத்தை பார்த்து உங்களின் கருத்துக்களை  சொல்லுங்கள்.   

               படம் முடிந்து வெளியில் வந்த பிறகு என் பிரச்சனைக்கும் ஒரு தீர்வு கிடைத்தது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் 17,502 ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியது: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

குமராட்சி ஒன்றியத்தில் வெள்ளநீர் சூழ்ந்துள்ள பூலாமேடு கிராமத்துக்கு படகு வழங்கப்பட்டுள்ளதை திங்கள்கிழமை பார்வையிடுகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
சிதம்பரம்:

                   கடலூர் மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் 17,502 ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

                     கடலூர் மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஆட்சியர் பெ.சீதாராமனுடன் சென்று திங்கள்கிழமை பார்வையிட்டார். காட்டுமன்னார்கோவில் வட்டம் எள்ளேரி (கிழக்கு), சர்வராஜன்பேட்டை, வீரநத்தம், திருநாரையூர், கீழவன்னியூர், குமராட்சி, கோ.பாடி, மெய்யாத்தூர், சிதம்பரம் வட்டத்தில் தவிர்த்தாம்பட்டு, புதுபுலாமேடு, நாஞ்சலூர், சிவாயம், மும்முடிசோழபுரம், கத்தாழை, விருத்தாசலம் வட்டத்தில் தர்மநல்லூர், நல்லாத்தூர், க.இளமங்கலம், வெள்ளூர், ஊ.மங்களம் உள்ளிட்ட மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

                 பொதுமக்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் காட்டுமன்னார்கோவில் குமராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளதை பார்வையிட்டு நிரந்தர தீர்வு காண்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  கூறியது:

                    மழையால் இதுவரை கடலூர் மாவட்டத்தில் 1,167 குடிசைகள் முழுமையாகவும், 8,166 குடிசைகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. 12 மாடுகள், 12 ஆடுகள் உயிரிழந்துள்ளன. மழையால் இதுவரை 17,502 ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளது. மழையால் பழுதடைந்துள்ள சாலைகள், அரசுக் கட்டடங்கள் ஆகியவற்றை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கும், கால்நடைகளுக்கும் உரிய நிவாரணம் உடனடியாக வழங்கப்படும்.

                  பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பெய்து வரும் மழைநீர் கடலூர் மாவட்டம் வழியாக வடிவதால் ஆண்டுதோறும் விவசாய நிலங்களும், வீடுகளும் பாதிக்கப்படுகின்றன. பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு, வெள்ளாறு, கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது, கடலூர் மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு முதல்வர் கருணாநிதி நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.301 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும்.

                   திருநாரையூர் கிராமத்தில் வெள்ளியங்கால் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மணவாய்க்கால் மூலம் தண்ணீர் ஓடுவதால் விளை நிலங்கள், குடிசைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.  எனவே திருநாரையூர் கிராமத்தில் வெள்ளியங்கால் ஓடையில் புதிய பாலம் கட்டுவதற்கு மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரையிலும் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தமிழக அரசு கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. 

                மழையால் பாதிக்கப்பட்ட திட்டக்குடி, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் ஆகிய வட்டங்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு 30 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளன என்றார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். ஆய்வின்போது காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் துரை.ரவிக்குமார், குமராட்சி ஊராட்சி ஒன்றியத் தலைவர் இரா.மாமல்லன், கோட்டாட்சியர் அ.ராமராஜூ, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் எஸ்.செல்வராஜ், மனோகரன், மக்கள்-தொடர்பு அலுவலர் பொ.முத்தையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Read more »

மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளி மாணவர் தேர்வு

சிதம்பரம்:

                   சிதம்பரம் அருகே உள்ள கூடுவெளிச்சாவடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பரமசிவத்தின் மகன் ராஜேஷ், டிசம்பர் மாதம் விருதுநகரில் நடைபெறவுள்ள மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

                       இவர் சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். தினசரி வீடுகளிலும், டீக்கடைகளிலும் வீணாக வெளியில் கொட்டப்படும் டீத்தூள் கழிவுகளை மக்கச்செய்து உரமாக பயன்படுத்தினால் நல்ல விளைச்சலைப் பெறலாம் என்பது மாணவர் ராஜேஷின் கண்டுபிடிப்பாகும்.

               சமீபத்தில் கடலூரில் நடைபெற்ற கடலூர் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்று "வீணாகும் பொருளிலிருந்து வளம் காணலாம்" என்ற தலைப்பிலான இவரது காட்சிப் பொருள் அனைவரையும் பெரிதும் கவர்ந்தது." 

                   விவசாய தொழில்நுட்பம்' என்ற தலைப்பில் இடம்பெற்ற இவரது காட்சிப் பொருள் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்டு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட மாணவர் ராஜேஷ் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் எம்.கே.பன்னீர்செல்வம், எம்.சிவகுரு, ஜே.பி.சங்கரன், என்.சுரேஷ்குமார் ஆகியோரை பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள் ரத்தின.பாலசுப்பிரமணியன், ரத்தின. திருநாவுக்கரசு, தலைமைஆசிரியர் ஆர்.ரவிசங்கர் ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior