உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 15, 2010

கடலூர் பகுதியில் கடல் மட்டம் குறித்து இந்திய நில அளவை மையம் ஆய்வு



கடலூர் : 

                    கடலில் ஏற்படும் மாற்றத்தினால் கரையோரம் குடியிருப்போர் பாதிப்பைத் தடுக்கும் வகையில் கடலூர் பகுதியில் கடல் மட்டம் குறித்து இந்திய நில அளவை மையம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

                   உலக அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பின் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக பூமியில் ஏற்படும் நச்சுத்தன்மை கொண்ட வாயுக்கள், புகை, மாசு காரணமாக ஓசோன் படலத்தில் ஒட்டை விழுந்துள்ளது. இதனால் பூமியில் தட்பவெப்ப நிலைகள் மாற்றம் ஏற்பட்டு, வறட்சி, அதிக மழை போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்கிறது.

                 மேலும், ஓசோன் படலத்தில் விழுந்துள்ள ஓட்டை காரணமாக சூரிய ஓளி நேரடியாக பூமிக்கு வருவதால் அண்டார்டிகாவில் உள்ள பனிக்கட்டிகள் உருகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடலில் நீர் மட்டம் உயர்வதால் கடலோர கிராமங்கள் கடல் நீர் புகுந்து அழியும் நிலை ஏற்படும் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். கடலோர பகுதிகளை பாதுகாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு பகுதியிலும் கடல் மட்டம் கணக்கிடப்பட்டு அதற்கு தகுந்தாற்போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள, திட்டங்கள் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

                       இந்தியா முழுவதும் கடலோர கிராமங்களை பாதுகாக்கும் வகையில் இந்திய நில அளவை மையம் கடலின் நீர் மட்டம், கரையின் மட்டம் ஆகியவை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். கடலூரில் பெண்ணையாற்று பாலத்திலிருந்து கடலூர் முதுநகர் வரையில் சாலைகள் கடல் மட்டத்திலிருந்து எவ்வளவு உயரத்தில் உள்ளது என அதிகாரிகள் கணக்கெடுக்கம் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து வான் வழியாக ஹெலிகாப்டர் மூலம் படம் பிடிக்கப்பட்டு கணக்கிடப்படும் என தெரிவித்தனர்.

Read more »

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பி.லிட்., தேர்வு: முடிவு வெளியீடு


              மதுரை காமராஜ் பல்கலையில் நவம்பரில் நடந்த இளநிலை பி.லிட்., (பருவமுறை) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதை இணையதளத்தில் www.mkuniversity.org அறிந்து கொள்ளலாம். மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், மதிப்பெண் பட்டியல் வரும்வரை காத்திராமல், இணையதளத்திலேயே விண்ணப்பத்தை பெற்று, டிச. 27க்குள் தேர்வாணையர் அலுவலகத்தில் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும். மறுமதிப்பீடு கட்டணத்தை டிமாண்ட் டிராப்டாக மட்டுமே அனுப்ப வேண்டும்.

Read more »

கடலூரில் பா. ம. க. , பயிற்சி பாசறையில் மாணவ, மாணவியர்களுக்கு இலவச பயிற்சி

கடலூர் : 

                   கடலூரில் பா. ம. க. , பயிற்சி பாசறை சார்பில் துவங்கவுள்ள இலவச பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவியர்கள் சேர்ந்து பயன்பெற எம்.எல்.ஏ. , வேல்முருகன் கேட்டுக் கொண்டார்.

கடலூரில்  நேற்று  எம். எல். ஏ. , வேல்முருகன் கூறியது:

                  பொருளாதாரத்தில் பின் தங்கிய அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பயிற்சி பாசறை கடலூரில் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இப்பயிற்சி பாசறையில் ஐ. ஏ. எஸ். , - ஐ. பி. எஸ். , -  டி. என். பி. எஸ். சி. , குரூப் 1, 2, வி. ஏ. ஓ. , வங்கி, ரயில்வே காவலர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இப்பயிற்சியில் பயின்ற 8 பேர் சப் இன்ஸ்பெக்டர் தேர்விலும், 48 மாணவர்கள் காவலர்களாகவும் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன ஆணைக்காக காத்திருக்கின்றனர்.  

                மீண்டும் அதே வகுப்புகள் கல்லூரி மாணவர்களின் வசதிக்கேற்ப காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் நடத்தப்படுகின்றன. இவ்வகுப்புகளில் கம்ப்யூட்டரில் வீடியோ ஆடியோ காட்சிகள் மூலமும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.  இதற்காக பிரத்யேக நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.  

                தற்போது டி. என். பி. எஸ். சி. , சுகாதார புள்ளியியல் ஆய்வாளர், வனத்துறை உதவி ஆய்வாளர் தேர்வுகளுக்கான வகுப்புகள், பி. எஸ்சி. , அறிவியல், கணிதம், கணிப்பொறியியல், மண்ணியல், புள்ளியியல் மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் 19ம் தேதி துவங்க உள்ளது. இந்த வகுப்புகளில் சேர விரும்பும் மாணவ, மணவியர்கள் கடலூர் பா.ம க. , அலுவலக செயலரிடம் விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior