உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 28, 2010

வள்ளலார் பிறந்த தைப்பூசம் : தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை அறிவிக்க கோரிக்கை

கடலூர்:

           வடலூர் வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் அவதரித்த தைப்பூச தினத்தில், தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று, திருவருள்பிரகாச வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க நெறிபரப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  

திருவருள்பிரகாச வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க நெறிபரப்பு சங்கத்தின் நிறுவனர் கே.மணிவண்ணன் தமிழக முதல்வருக்கு சனிக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:  

             தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்க்கும் வகையில், கடலூர் மாவட்டத்தில் அவதரித்த வள்ளலார் ராமலிங்க அடிகளார், திருவருட்பாவை இயற்றினார். திராவிடர் கழகத்தை தோற்றுவித்த தந்தை பெரியார், சாமிகள் இல்லை. உருவ வழிபாடு கூடாது.  நாம் அனைவரும் மனித இனம், சாதி மத பேதம் கூடாது என்று கூறினார்.  ஆனால் பெரியாருக்கு முன்னரே, ராமலிங்க சுவாமிகள் தெய்வம் எந்த உருவத்திலும் இல்லை. கோயிலிலும் இல்லை. சாதி மத பேதமில்லை. 

                 கடவுள் ஒருவரே. அவர் ஜோதி வடிவாக எங்கும் நிறைந்து இருக்கிறார் என்று கூறி சத்தியஞான சபையை வடலூரில் நிறுவினார். தைப்பூச நட்சத்திர தினத்தில், ஜோதி தரிசனம் செய்யவும் வழிவகை செய்தார்.  தைப்பூச தினத்தன்று, கடலூர் மாவட்டத்தில் அரசு விடுமுறை விடப்படுகிறது. மனிதனும் இறைவனாக முடியும் என்ற தத்துவத்தை, அறிவியல் முறைப்படி உலகுக்கு எடுத்துக்காட்டிய வள்ளலார் ராமலிங்க சுவாமிகளுக்கு, பெருமை சேர்க்க தைப்பூச தினத்தன்று தமிழகம் முழுவதும், அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார். 

Read more »

பண்ருட்டி அருகே தொகுப்பு வீட்டில் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்து சிறுமி படுகாயம்



பண்ருட்டி : 

            கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, தொகுப்பு வீட்டின் சிமென்ட் காரை விழுந்ததால், 5 வயது சிறுமி படுகாயமடைந்தார். 

             பண்ருட்டி அடுத்த பண்டரக்கோட்டை காலனி மாரியம்மன் கோவில் தெருவில், தொகுப்பு வீட்டில் வசித்து வருபவர் தணிகைவேல். இவர் நேற்று முன்தினம் இரவு மனைவி செல்வி, மகன் உத்திரவேல், மகள்களுடன் தூங்கி கொண்டிருந்தார். இரவு வீட்டின் மேல் உள்ள சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது. இதில் சிறுமி ஆர்த்தீஸ்வரியின் (5) வயிற்றில் விழுந்து கிழித்து, குடல் வெளியே வந்தது. சிறுமி "108' ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொகுப்பு வீட்டில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டதால், இப்பகுதியில் உள்ள 50 தொகுப்பு குடியிருப்புவாசிகள் பீதியடைந்துள்ளனர்.

Read more »

காட்டுமன்னார்கோவில் பகுதியில் வெள்ளத்தால் பாதிப்பு ரூ.4.5 கோடி நிவாரணம்

சிதம்பரம் : 

               காட்டுமன்னார்கோவில் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் 4.5 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கும் பணி துவங்கியது. மழை, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதியில் ஏற்கனவே 22 கிராமங்களில் பாதிப்புகள் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டு 4.5 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படுகிறது. நேற்று முதல் நிவாரணம் வழங்கும் பணி துவங்கியது. தாசில்தார் மேற்பார்வையில் இப்பணி நடந்து வருகிறது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior