உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 29, 2010

கடலூர் மாவட்டத்தில் ஏழை ஆதிதிராவிடர்கள் இறுதிச் சடங்கு உதவித்தொகை அதிகரிப்பு

கடலூர்:

            ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர்கள் இறந்தால், இறுதிச் சடங்குக்காக அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன்  வெளியிட்ட செய்திக் குறிப்பு:

               ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர்கள் இறந்தால், அவரது குடும்பத்தினருக்கு இறுதிச் சடங்குக்காக ரூ. 500 வழங்கப்பட்டு வந்தது. இந்தத் தொகை தற்போது ரூ. 2,500 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்துக்கு 2010-11-ம் ஆண்டுக்கு ரூ. 8.44 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

             கடலூர் மாவட்டத்தில் தகுதி உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம்  மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர்கள் யாரேனும் இறந்தால், அன்னாரின் இறுதிச் சடங்குக்காக (அக்குடும்பத்தின் ஆண்டு வருவாய் ரூ. 24 ஆயிரத்துக்கு மிகாமல் இருப்பின்) ரூ. 2,500 உதவித்தொகை பெற, சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரிடம் விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

பண்ருட்டி தென்பெண்ணையாற்றில் மணல் கொள்ளை: பாலத்திற்கு ஆபத்து





கடலூர்:

               கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த, தென்பெண்ணையாற்றின் புதிய மற்றும் பழைய பாலம் அருகில், தினமும், 200 மாட்டு வண்டிகள் மூலம் மணல் எடுப்பதால், மண் அரிப்பு ஏற்பட்டு, பாலத்திற்கு ஆபத்து உருவாகும் நிலை உள்ளது.

               சமீபத்தில் பெய்த கன மழையால், ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி, தமிழகத்தில் பெரும்பாலான மணல் குவாரிகள் முடப்பட்டன. இதனால், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது தண்ணீர் வடிந்து வரும் நிலையில், பண்ருட்டி அடுத்த தென்பெண்ணையாறு, கெடிலம், மலட்டாறு பகுதியில், டிப்பர் லாரிகள் மூலம் மணல் கடத்தல் நடந்து வருகிறது. அரசியல் தலையீடு காரணமாக, வருவாய்த் துறையினர் கண்டுகொள்வதில்லை. 

            லாரிகளை பிடித்து விŒõரிப்பது, உயரதிகாரிகளுக்கு தெரிந்தால், வழக்கு பதிவு செய்வது, இல்லையெனில், "மாமூல்' பெற்றுக் கொண்டு கண்டுகொள்ளாமல் போலீசார் விட்டு விடுகின்றனர். இந்நிலையில், தொடர் மணல் தட்டுபாடு காரணமாக, மாட்டு வண்டிக்கு ஏக கிராக்கி ஏற்பட்டுள்ளது. பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை தென்பெண்ணையாறு புதிய மற்றும் பழைய பாலம் அருகில், தினமும் 200 மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளப்படுகிறது. இதனால் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

Read more »

இளைஞர்களின் ஆராய்ச்சி ஆர்வம் : மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்



   
சிதம்பரம் : 

                சந்திராயன் வெற்றிக்குப் பிறகு, விண்வெளி ஆராய்ச்சி செய்ய இளைஞர்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளதாக, சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணா துரை பேசினார்.

                 இந்திய வேதிப் பொறியாளர் 63வது ஆண்டு மூன்று நாட்கள் கருத்தரங்கு அண்ணாமலைப் பல்கலைக் கழக சாஸ்திரி அரங்கில், நேற்று முன்தினம் துவங்கியது.

கருத்தரங்கில் பெங்களூர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய சந்திராயன் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, "சந்திரனில் இந்தியா' என்ற தலைப்பில் பேசியது: 

              சந்திரனைப் பற்றி 1960ம் ஆண்டில் தான், முதன் முதலாக ஆராயத் தொடங்கினர். 1980ம் ஆண்டில் தான் ஒவ்வொரு நாடாக ஆராய்ந்தது. எல்லா நாடுகளும் சந்திரனில் ஒரு பகுதியை தான் பார்த்துள்ளனர். ஆனால் சந்திராயன்-1 செயற்கை கோள் மூலம் சந்திரனின் அனைத்து பகுதியையும் பார்த்தது இந்தியா மட்டும் தான்.அங்கு என்னென்ன கனிம பொருட்கள் உள்ளது. என, தெளிவாக ஆய்வு மேற்கொண்டது. மூன்று மைக்ரான் அளவில் கண்ணால் பார்க்க முடியாத வேதிப் பொருட்களும், தண்ணீர் இருப்பதற்கான ஆதாரமும் கண்டறியப்பட்டுள்ளது.

             நாம் எதிர்பார்த்ததை விட அதிக பலன் கிடைத்தது. நாங்கள் பட்ட கஷ்டங்கள் சவாலோடு கொண்ட பலன் சந்திராயன் -1 வெற்றி மூலம் கிடைத்தது.இந்த வெற்றி உலக நாடுகள் சந்திரனை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ள, ஒரு அடித்தளமாக அமைந்தது. இளைஞர்களின் ஆராய்ச்சி ஆர்வத்தை அதிகரித்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி செய்ய 250 விண்ணப்பங்கள் கூட வருவது கடினம். ஆனால் சந்திராயன் வெற்றிக்கு பிறகு ஒரு லட்சம் பேருக்கு மேல் ஆர்வம் காட்டுகின்றனர். சந்திராயன்-1 வெற்றி சந்திராயன் -2ன் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior