உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 22, 2011

கடலூரில் நாணமேடு வெங்காய விதைக்கு கிராக்கி


கடலூர் அருகே உச்சிமேடு கிராமத்தில் பயிரிடப்பட்டுள்ள சின்ன வெங்காயம்.
கடலூர்:

               கடலூரில் வெங்காய விதைகள் தயாரிக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்படுகின்றன. நாணமேடு வெங்காயம் என்ற உள்ளூர் வகை வெங்காயம் கடலூரை அடுத்த நாணமேடு, உச்சிமேடு, உப்பளவாடி, கண்டக்காடு, தேவனாம்பட்டினம், கிள்ளையை அடுத்த கிராமங்கள் மற்றும் வல்லம்படுகை உள்ளிட்ட கிராமங்களில் பயிரிடப்படுகிறது.

                 இதன் அளவு சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட நிலையில் இருப்பதாலும், குறிப்பிடத்தகுந்த சுவையாலும் நாணமேடு வெங்காயத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.வெங்காயம் பயிரிட்டு 120 நாள்களில் அறுவடைக்கு வரும்.10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலும் கடலோர கிராமங்களில் வெங்காயம் 1,000 ஏக்கர் அளவுக்குப் பயிரிடப்பட்டு வந்தது.ஆனால் நிலத்தடி நீர் உவர் நீராக மாறி வருவதாலும், நோய் தாக்குதல் காரணமாகவும் கடலூர் மாவட்டத்தில் வெங்காயம் பயிரிடும் பரப்பளவு குறைந்து வருகிறது.

             எனினும் 25 ஆண்டுகளுக்கு மேலாக வெங்காயம் பயிரிடும் விவசாயிகளும் இங்கு உள்ளனர்.ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கும் என்றும் விவசாயிகள் கூறுகிறார்கள். வெங்காயத்துக்கு கிராக்கி அதிகம் இருக்கும் ஆண்டுகளில் ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் வரைகூட வருவாய் கிடைத்து இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.ஆனால் வெங்காய விலையில் உள்ள ஏற்ற இறக்கம் காரணமாக, விவசாயிகள் பலர் தற்போது வெங்காய விதை உற்பத்திக்கு மாறி உள்ளனர்.

              கடலூரில் உற்பத்தி ஆகும் வெங்காய விதைகளுக்கு கோவை, திருப்பூர், பல்லடம், உடுமலைப்பேட்டை, திண்டுக்கல் பகுதிகளில் நல்ல கிராக்கி இருப்பதாக கடலூர் விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.மேற்கண்ட பகுதிகளில் நாணமேட்டு வெங்காய விதைகளுக்கு, நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது. தரமான விதையாக இருந்தால் கிலோ ரூ. 1,000 வரை விலை போகும் என்றும், குறைந்தபட்சம் கிலோ ரூ. 500  நிச்சயம் கிடைக்கும் என்றும் விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

சாகுபடி குறைவு ஏன்?

இது குறித்து 25 ஆண்டுகளாக வெங்காய விவசாயம் செய்து வரும் நாணமேடு விவசாயி ராஜாராம் கூறுகையில்,

              "கடலூர் பகுதியில் 300 ஏக்கருக்கு மேல் நாணமேடு வெங்காயம் பயிரிடப்பட்டு வந்தது.தற்போது 30 ஏக்கராக குறைந்து விட்டது. காரணம் நிலத்தடி நீர் உவர் நீராக மாறி வருவதுதான். மேலும் கடலூர் பகுதியில் வெங்காயப் பயிரில், நோய் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதற்கு மருந்து இல்லை' என்கிறார்கள் வேளாண் அதிகாரிகள். இதன் காரணமாக வெங்காய விவசாயிகள் பலர், வெங்காய விதை உற்பத்திக்கு மாறிவிட்டனர். நோய் தாக்குதல் இன்றி தரமான விதை கிடத்தால், கிலோ ரூ. 1,000 வரை விற்பனை செய்ய முடியும்.ஏக்கருக்கு 300 கிலோ விதை தாராளமாகக் கிடைக்கும். 

            கடலூர் மாவட்டத்தில், ஆண்டுக்கு 3 ஆயிரம் கிலோ வெங்காய விதை உற்பத்தி செய்யப்படுகிறது.நாணமேடு வெங்காய விதைக்கு திண்டுக்கல், கோவை, திருப்பூர், பல்லடம், உடுமலைப்பேட்டை பகுதிகளில் நல்ல வரவேற்பு உள்ளது' என்றார் ராஜாராம்.

தொழில்நுட்ப ஆலோசனை

இது குறித்து கடலூர் வேளாண் துறை தெரிவிக்கும் தகவல்கள்: 

               கடலூர் மாவட்ட கடலோரப் பகுதிகளில் வெங்காய உற்பத்திக்கு நிறைய வாய்ப்பு உள்ளது. ஆனால் நமது விவசாயிகள் பாரம்பரிய முறை விவசாயத்திலேயே உள்ளதால், தரமான வெங்காயம், வெங்காய விதை மற்றும் கூடுதல் உற்பத்திக்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது. வேளாண் விதை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வெங்காய விவசாயிகள் முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.வேளாண் துறையில் இருந்து வழங்கப்படும் நவீன தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெற்று விவசாயம் செய்தால், சான்று பெற்ற வெங்காய விதைகளை விற்பனை செய்தால் கிலோ ரூ. 1,000-க்கு மேல் விலை கிடைக்கும் என்றும் வேளாண் அலுவலர்கள் தெரிவித்தனர்.

Read more »

பண்ருட்டியில் இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி

பண்ருட்டி:
 
           இணையதளத்தின் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம் என பண்ருட்டி செயற்பொறியாளர் கா.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.  

பண்ருட்டி செயற்பொறியாளர் கா.பழனியப்பன்  விடுத்துள்ள செய்திக்குறிப்பு 

                 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நுகர்வோர்கள் அனைவரும் தங்கள் மின் இணைப்புகளுக்கான மின் கட்டணத்தை இணையதளம் மூலம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.  மின் நுகர்வோர்கள் இணையதள முகவரியில் இந்த சேவையை பயன்படுத்தி தங்கள் மின் கட்டணத்தை செலுத்தலாம் என கா.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

Read more »

வெள்ளி, ஜனவரி 21, 2011

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்


வட​லூர் சத்​திய ஞான​ச​பை​யில் தைப்​பூ​சத்தை முன்​னிட்டு ​ ஜோதி தரி​ச​னம்.​ செய்​யும் வள்​ள​லார் அன்​பர்​கள்.
 
நெய்வேலி:
 
            வள்ளலார் வாழ்ந்த வடலூரில் உள்ள சத்தியஞான சபையில் தைப்பூசத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை 7 திரைகளை நீக்கி 6 காலங்களில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
 
            இந்த ஜோதி தரிசனத்தைக் காண 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் திரண்டிருந்தனர். கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் ஒவ்வொரு ஆண்டு தைப்பூசத்தினத்தன்று ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. இந்த ஜோதி தரிசனத்தைக் காண தமிழகம் மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான வள்ளலார் பக்தர்கள் வடலூருக்கு வருவர். இதையொட்டி வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாகமும் தைப்பூச விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.
 
             அதன்படி வியாழக்கிழமை காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 10, பிற்பகல் 1, இரவு 7, 10 மற்றும் வெள்ளிக்கிழமை காலை 6 மணி என ஆறு காலங்களில் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது.இதில் 10 மணிக்கு நடைபெற்ற ஜோதி தரிசனத்தில் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன், எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ், டி.ஐ.ஜி. மாசானமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனர்.
 
             தைப்பூச விழாவை ஒட்டி, வடலூர் தருமச்சாலை பிரசங்க மேடையில் ஊரன் அடிகளார் தலைமையில் சன்மார்க்க கருத்தரங்கம் நடைபெற்றது. வடலூரில் நடைபெறும் தைப்பூச விழாவை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தைப்பூச ஜோதி தரிசனத்தைக் காண வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நெய்வேலி டி.எஸ்.பி. மணி தலைமையில் 500 போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 
               இதைத்தொடர்ந்து சனிக்கிழமை பிற்பகல் 12 முதல் மாலை 6 மணி வரை வள்ளலார்  அருட்பெருஞ்ஜோதியாகிய மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகை திருஅறை தரிசனம் நடைபெறுகிறது.வடலூர் சத்திய ஞானசபையில் தைப்பூசத்தை முன்னிட்டு  ஜோதி தரிசனம். செய்யும் வள்ளலார் அன்பர்கள்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior