உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 10, 2011

கடலூர் மாவட்டத்தில் பதட்டம் மிகுந்த ஓட்டுச் சாவடி பாதுகாப்பு பணியில் மாணவர்கள்

கடலூர் : 

              மாவட்டத்தில் பதட்டம் நிறைந்த ஓட்டுச் சாவடிகளில் ஓட்டுப் பதிவை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் ஈடுபடவுள்ளனர்.

               மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக அமைக்கப்பட்டுள்ள 1,945 ஓட்டுச் சாவடிகளில் 1,165 பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள் ளது.இந்த ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவை முழுமையாக கண்காணிக்கும் பொருட்டு "வெப் கேமரா' மூலம் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில் நுட்பம் படிக்கும் மாணவர்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

                அதன்படி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக துணைவேந்தர், பதிவாளர் மற்றும் தொழில் நுட்பத்துறை அதிகாரியும் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் சீத்தாராமன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், பல்கலைக் கழகத்தில் எம்.சி.ஏ., மற்றும் எம்.இ., படிக்கும் மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோரை "லேப்-டாப்' சாதனத்துடன் பதட்டம் நிறைந்த ஓட்டுச் சாவடிகளில் பணிக்கு அனுப்ப பல்கலை நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஓட்டுச்சாவடி பணியில் ஈடுபடவுள்ள மாணவர்களுக்கு கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீரராகவராவ் பயிற்சி அளிக்க உள்ளார்.

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் உலக மகளிர் தினம் மாணவிகள் உறுதிமொழி

விருத்தாசலம் : 

               விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் மகளிர் தினத்தையொட்டி உறுதிமொழி எடுக்கப்பட்டது.விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் 100வது மகளிர் தினத்தையொட்டி கல்லூரி மாணவிகள் உறுதிமொழி எடுத்தனர். கல்லூரி முதல்வர் மனோன்மணி தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் ராணி, புவனேஸ்வரி, வேணி முன்னிலை வகித்தனர்.கல்லூரி மாணவிகள் பெண் கல்வியின் முக்கியத்துவம், பெண்கள் முன்னேற்றம், சமுதாயத்தில் கிடைக்க வேண்டிய தகுதிகள் குறித்து உறுதி மொழி எடுத்தனர். தமிழ்த் துறையை சேர்ந்த இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு பணி தீவிரம்

கடலூர் : 

            தமிழகத்தில் புதிய வாக்காளர்கள் சேர்க்க ஆணையம் அவகாசம் அளித்துள்ளதால் பொது மக்களிடமிருந்து மனுக்கள் குவிந்துள்ளன. கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் சேர்த்து 16,45,143 வாக்காளர்கள் உள்ளனர். புதிய வாக்காளர்கள் சேர்க்க வரும் 14ம் தேதி வரை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
 
                கடைசி நேரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பொது மக்களிடமிருந்து ஏராளமான மனுக்கள் குவிந்து வருகின்றன. அதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் 49,000 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் 32,000 பேர் மனு செய்துள்ளனர். இவற்றை குறிப்பிட்ட தேதிக்குள் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதால் 15 கம்ப்யூட்டர்கள் வாங்கப்பட்டு தனியாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior