உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 12, 2011

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி அலைகள் தாக்கின

             ஜப்பானின் வடக்கு பகுதியில் நேற்று  பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 8.8 ஆக பதிவாகி உள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் அலைகள் 20 மீட்டர் உயரம் வரை ஆர்ப்பரித்து கொண்டுள்ளது. 

            ஜப்பான் நேரப்படி 11.03.2011 அன்று பிற்பகல் 2.45 மணி அளவில் ஜப்பானில் மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. ஹொன்சு மாகாணத்தில் உள்ள சென்டாய் நகரில் இருந்து 81 கி.மீ. தொலைவில் பூகம்பம் மையம் கொண்டது. பூமிக்கு கீழே 15 மைல் ஆழத்தில் தோன்றிய அந்த பூகம்பம், ரிக்டர் அளவு கோலில் 8.9 ஆக பதிவானது. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டதால் ஜப்பானே குலுங்கியது.

        இதற்கு முன் 1933 ம் ஆண்டு ஜப்பானில் 8.1 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட பூகம்பத்துக்கு 3 ஆயிரம் பேர் பலியாகினர். தற்போது, அதை விட பயங்கரமான பூகம்பம் தோன்றியுள்ளது. முதலில், 8.9 ரிக்டரில் பதிவான பூகம்பத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 18 முறை பூமி குலுங்கியது. திடீர் என பூமி குலுங்கியதால் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சுரங்க ரெயில்களில் பயணம் செய்தவர்கள், ஒருவர் மீது ஒருவர் உருண்டு விழுந்தனர். பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகள் மற்றும் மண் சரிவுகளில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர்.

             ஜப்பானில் 140 ஆண்டுகளுக்கு பிறகு, மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளது. 1923 ம் ஆண்டு 7.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்துக்கு டோக்கியோ மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் பலியாகினர். இது போல 1995 ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தினால் ரூ.5 லட்சம் கோடி சேதம் ஏற்பட்டது. தற்போது, நிகழ்ந்த தொடர் பூகம்பத்தால், சுனாமியும் அடுத்தடுத்து தோன்றியது. எனவே, ஜப்பான் மக்கள் அனைவரும் பீதியில் உறைந்துள்ளனர். மொத்த சேத மதிப்பும் உடனடியாக தெரியவில்லை. எனினும், நிதி நெருக்கடி ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜப்பான் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

           இத்தகைய சூழ்நிலையில், டோக்கியோவை மையமாக கொண்டு மீண்டும் ஒரு பெரிய பூகம்பம் ஏற்படும் என புவியியல் ஆய்வு அறிஞர்கள் எச்சரித்துள்ளனர். ஆயிரக்கணக்கானோரின் உயிரை பலி வாங்கும் அளவுக்கு அந்த பூகம்பம் இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானில் சுனாமி: 100 பேருடன் சென்ற கப்பல் மாயம்

            ஜப்பானில் பயங்கர பூமி அதிர்ச்சியை தொடர்ந்து சுனாமி அலைகள் தாக்கின. இதில் பேரழிவு ஏற்பட்டது. லட்சக்கணக்கான வீடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.  சைதாமே, இவாதே போன்ற இடங்களில் ஏராளமான பாலங்கள் நொறுங்கி விழுந்தன. ஆமோரி அருகே உள்ள ஹச்சினோகே என்ற இடத்தில் ஒரு கப்பலையே சுனாமி அலை உருட்டி விட்டது. இதனால், தண்ணீருக்குள் அந்த கப்பல் குப்புற கவிழ்ந்தது. ஹோன்சு தீவு மற்றும் இஷினோமாகி, ஆமோரி போன்ற துறைமுகங்களில் கப்பல்கள் அடித்துச் செல்லப்பட்டு தெருக்களில் வந்து சேர்ந்தன.

               ஆமோரி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் சென்ற 5 கப்பல்களை சுனாமி அலைகள் சுக்கு நூறாக உடைத்து வீதிகளுக்கு கொண்டு வந்தன. ஏற்கனவே, வீதிகளில் நின்ற கார்களும் சேர்ந்ததால் வீதிகளில் கப்பலின் பாகங்களும் கார்களும் ஒன்றாக மிதந்து கொண்டிருந்தன. மேலும், மரங்கள் உள்ளிட்ட பொருட்களும் சேர்ந்து சகதி ஆறாக ஓடின. இதனால், ஜப்பானில் உள்ள அனைத்து துறைமுகங்களும் மூடப்பட்டுள்ளன. ஜப்பானின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து 100 பயணிகளுடன் கடலுக்குள் சென்ற ஒரு கப்பல், சுனாமியில் சிக்கி தூள் தூளானது. அதில், இருந்தவர்களின் நிலைமை தெரியவில்லை.

Read more »

கடலூர் சட்டமன்றத் தொகுதி பார்வை


கடலூர்
  
தொகுதி பெயர் : 
கடலூர்
தொகுதி எண் : 
155 
அறிமுகம் : 

               மாவட்டத் தலைநகரம். மூன்றில் ஒரு பங்கு நகர்ப்புற வாக்குகள் நிறைந்த, ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள தொகுதி. 1952-ம் ஆண்டு தேர்தலில் இரு உறுப்பினர் தொகுதியாக இருந்து, 1957 முதல் ஒரு உறுப்பினர் தொகுதியாக மாற்றப்பட்ட, பழமையான தொகுதி.

எல்லை : 

                தொகுதிகள் சீரமைப்பின்போது, கடலூர் தொகுதியில் சேடப்பாளையம், காரைக்காடு, செம்மங்குப்பம், பச்சாங்குப்பம், குடிகாடு, அன்னவல்லி, அரிசிபெரியாங்குப்பம், கரையேறவிட்டகுப்பம் ஆகிய 8 ஊராட்சிகளைச் சேர்ந்த கிராமங்கள், கடலூர் தொகுதியில் இருந்து தற்போதைய குறிஞ்சிப்பாடி தொகுதிக்கு மாற்றப்பட்டு விட்டன. கடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 45 வார்டுகளைக் கொண்ட கடலூர் நகராட்சி, 38 ஊராட்சிகளைக் கொண்ட கடலூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றைக் கொண்ட தொகுதியாக மறுசீரமைப்பு செய்யப்பட்டு உள்ளது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் : 

 நகராட்சி: 

கடலூர் நகராட்சி : 45 வார்டுகள்

கடலூர் ஊராட்சி ஒன்றியம்: (38)

                  கடலூர் துறைமுகம், மேலக்குப்பம், நல்லாத்தூர், தூக்கணாம்பாக்கம், தென்னம்பாக்கம், செல்லஞ்சேரி, புதுக்கடை, வடபுரம் கீழ்பாதி, கிளிஞ்சிக்குப்பம், சிங்கிரிகுடி, மதலப்பட்டு, கீழ் அழிஞ்சிப்பட்டு, நாகப்பனூர், மேல் அழிஞ்சிப்பட்டு, ஒடலப்பட்டு, கீழ் குமாரமங்கலம், காரணப்பட்டு, பள்ளிப்பட்டு, மலையப் பெருமாள் அகரம், உள்ளேரிப்பட்டு, திருப்பணாம்பாக்கம், களையூர், அழகியநத்தம், இரண்டாயிரம் விளாகம், வெள்ளப்பாக்கம், மருதாடு, நத்தப்பட்டு, வெளிச்செம்மண்டலம், சின்னகங்கனாங்குப்பம், சுபஉப்பளவாடி, குண்டு உப்பளவாடி, உச்சிமேடு, பெரியகங்கனாங்குப்பம், கோண்டூர், தோட்டப்பட்டு, செஞ்சி குமராபுரம், வரகால்பட்டு, காராமணிக்குப்பம்.

வாக்காளர்கள் : 

ஆண் - 88,650
பெண் - 88,716
மொத்தம் - 1,77,366
  
வாக்குச்சாவடிகள் :  

மொத்தம் : 
208 

 தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண்: 
கோட்டாட்சியர் வி.முருகேசன், 9445000425

Read more »

கடலூர் மாவட்டத்தில் 4,801 பேனர்கள் அகற்றம்: மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன்


பெ.சீதாராமன்
கடலூர்:
 
      தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, கடலூர் மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
 
கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
 
             தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் மாவட்ட வளர்ச்சி மன்றக் கூடத்தில் ஆட்சியர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. 
 
கூட்டம் முடிந்ததும் ஆட்சியர் கூறியது: 
 
                கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் 11 ஆயிரம் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்று வருகிறது. 
 
             எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 3 ஆயிரம் பேர், தேர்தல் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, 9,954 நபர்களுக்கான பட்டியல் இறுதி செய்யப்பட்டு உள்ளது.9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 1,945 வாக்குச் சாவடிகளுக்கான பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.நாகாலாந்து மாநிலத்தைச் சேர்ந்த காமே என்பவர் கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் செலவினப் பார்வையாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
 
              மற்ற தேர்தல் பார்வையாளர்கள் விரைவில் நியமிக்கப்பட்டு, 17-3-2011 அன்று பொறுப்பு ஏற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தேர்தல் நடத்தை விதிமுறைகள், முழுமையாக செயல்படுத்துவது குறித்து, விடியோ பார்வைக் குழு, கணக்குக் குழு, விடியோ கூர்ந்தாய்வுக் குழு, பறக்கும் படை, ஊடகச் சான்று மற்றும் மேற்பார்வைக் குழு ஆகிய குழுக்களுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.கடலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டு இருந்த 4,801 விளம்பர பேனர்கள், சுவர் விளம்பரங்கள் ஆகியன இதுவரை அகற்றபட்டு உள்ளன. 
 
                மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அனைத்து நிதிஉதவிகளும் நிறுத்தப்பட்டு விட்டன. தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் இயங்கும் மகளிர் சுயழுதவிக் குழுக்களுக்கும் எவ்வித நிதி உதவியும் வழங்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஊரக வளர்ச்சித் துறை மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள 683 ஊராட்சிகளிலும் எவ்வித புதிய பணிகளும் தொடங்கக் கூடாது என்றும், தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் தொடங்கிய பணிகளை மட்டுமே செயல்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
                 கிராமங்களில் உள்ள நூலகக் கட்டடங்கள், ஊராட்சி மன்றக் கட்டங்கள் மற்றும் ஏனையக் கட்டடங்களில் விளம்பரம் செய்யக்கூடாது.அரசு அலுவலகக் கட்டடங்களை அரசியல் கட்சிகள் பயன்படுத்தக் கூடாது. மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் தொடங்கப்பட்ட பணிகளை மட்டுமே தொடர வேண்டும்.புதிதாக எந்தப் பணிகளும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட தொகையை வேலைக்கு ஏற்றார்போல் வழங்க வேண்டும்.
 
                கூடுதலாக தொகை வழங்கக் கூடாது என்று, ஊராட்சி மன்றத் தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.புதிய ஒப்பந்தப் புள்ளிகள் மற்றும் ஏலங்கள் கோரக் கூடாது. ஏற்கெனவே ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு இருந்தால், அவற்றை ஆய்வு செய்து வைக்க வேண்டுமே தவிர, பணி ஆணைகள் வழங்கக் கூடாது.தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior