உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 23, 2011

கடலூர் மாவட்டத்தில் தே.மு.தி.க. செல்வாக்கு - ஒரு அலசல்

கடலூர்:
             கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதியில் கடந்த தேர்தலில் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்று, அக்கட்சியின் முதல் பிரதிநிதியாக சட்டப் பேரவைக்குத் தேர்வு செய்யப் பட்டார்.  
             விருத்தாசலம் தொகுதியில் கடந்த தேர்தலில் பா.ம.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. என்ற மும்முனைப் போட்டி ஏற்பட்டது. இதில் அவரை அடுத்து வந்த பா.ம.க. வேட்பாளர் டாக்டர் ஆர்.கோவிந்தசாமியை விட 13,777 வாக்குகள் அதிகம் பெற்று விஜயகாந்த் வெற்றி பெற்றார். இத்தொகுதியில் போட்டியிட்டு 3-வது இடத்தைப் பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் காசிநாதன் 35,876 வாக்குகளைப் பெற்றார்.  
                இந்தத் தொகுதியில் பா.ம.க.வில் வேறு வேட்பாளர் நிறுத்தப்பட்டு இருந்தாலோ, தி.மு.க.வுக்கு ஒதுக்கி இருந்தாலோ விஜயகாந்த் வெற்றி பெற்று இருக்க முடியாது என்று அப்போது கூறப்பட்டது. இந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விருத்தாசலம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார். எனவே இந்தத் தேர்தலிலும் மும்முனைப்போட்டி உறுதியாகி விட்டது.  

                கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயகாந்த் 61,337 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் எம்.சி. தாமோரன் 13,914 வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறார். இதில் இருந்து பார்க்கும்போது விருத்தாசலம் தொகுதியில் தே.மு.தி.க. செல்வாக்கு வளர்ந்து இருப்பதாகக் கணக்கில் கொள்ள முடியாது.  
              கடந்த 2006 சட்டப் பேரவைத் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் தே.மு.தி.க. போட்டியிட்டது. பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்ட பண்ருட்டி ராமச்சந்திரன் பெற்ற 30,133 வாக்குகள் உள்பட கடந்த தேர்தலில் கடலூர் மாவட்டம் முழுவதிலும் தே.மு.தி.க. 1,41,574 வாக்குகள் பெற்றுள்ளன. இது பதிவான மொத்த வாக்குகளில் சுமார் 8 சதவீதம் ஆகும்.  கடந்த தேர்தலில் ஒரு தொகுதியில் வெற்றிபெற்ற தே.மு.தி.க.வுக்கு, இந்தத் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், திட்டக்குடி, பண்ருட்டி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 
                 கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருப்பதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் தே.மு.தி.க. வுக்கு செல்வாக்கு அதிகரித்து இருப்பதாகவே விஜயகாந்த் சார்ந்துள்ள அ.தி.மு.க. கூட்டணி கருதுகிறது.  தனித்து கடலூர் மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு பெற்ற வாக்குளைவிட, கூட்டணியில் அக்கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்குமா அல்லது அது அ.தி.மு.க. கூட்டணிக்குக் கைகொடுக்குமா? தனித்துப் போட்டியிடுவதைவிட, கூட்டணியில் போட்டியிடுவதால் வாக்குகள் குறையுமா கூடுமா என்பதை வர இருக்கும் தேர்தல்தான் தீர்மானிக்கும்.  
                       எனினும் தே.மு.தி.க. ஒரு கூட்டணியில் சேர்ந்து விட்டதால் தனிப்பட்ட முறையில் அந்தக் கட்சி பெறும் வாக்குகளைத் தீர்மானிக்க முடியாது. அது அந்தக் கூட்டணியின் வெற்றி தோல்வியைப் பொறுத்ததாகவே அமையும்.

Read more »

கடலூர் மாவட்டத்தில்முந்திரி மகசூல் அமோகம்


கடலூர் அருகே ராமாபுரத்தில் பூவும் பிஞ்சுமாக பூத்துக் குலுங்கும் முந்திரி.
 
கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் தற்போது முந்திரி மரங்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டு இருக்கும் நிலை, பார்ப்போர் கண்களுக்கு இதமாகவும், விவசாயிகள் மனதில் மகிழ்ச்சி பொங்கும் விதமாகவும் உள்ளது.  கடலூர் மாவட்டத்தில் 70 ஆயிரம் ஏக்கரில் முந்திரி மரங்கள் பயிரிடப்பட்டு உள்ளன. பண்ருட்டி பகுதியில் மட்டும் 30 ஆயிரம் ஏக்கரில் முந்திரி பயிரிடப்பட்டு உள்ளது.  ஒரு காலத்தில் முழுவதும் மானாவாரிப் பயிராக இருந்த முந்திரி சாகுபடி இன்று, இறவைப் பயிராகவும், பல்வேறு உயர் விளைச்சல் தரும் ஒட்டு ரகங்களை பயிரிட்டு மகசூலை அதிகரிக்கும் வணிகப் பயிராகவும் மாறியிருக்கிறது.  

                 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் முந்திரி மரங்கள் பூக்கத் தொடங்கி, ஏப்ரல் மாதத்தில் அறுவடை தொடங்கி, ஜூன் முதல் வாரத்தில் அறுவடை முடிந்து விடும்.  மே மாதத்தில் அறுவடை உச்ச நிலையில் இருக்கும். ஜனவரி மாதத்தில் மழை இருந்தால் முந்திரி மரங்கள் பூப்பதில் சிக்கல் ஏற்படும் என்கிறார்கள்.  கடலூர் மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் மழை இல்லாததால், தற்போது எங்கு பார்த்தாலும் முந்திரி மரங்கள் பூவும் பிஞ்சுமாகக் காட்சி அளிப்பது மனதுக்கு ரம்மியமான தோற்றம்.  

                விவசாயிகளைப் பொருத்தவரை இந்த ஆண்டு முந்திரி மகசூல் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். கடந்த ஆண்டு அறுவடை தொடங்கும் நேரத்தில் பெய்த மழையால் முந்திரி மகசூல் பெரிதும் பாதிக்கப்பட்டது.  விளைந்த முந்திரிக் கொட்டைகள், மரங்களின் அருகே தேங்கிய நீரில் விழுந்து, முந்திரிக் கொட்டையின் தரத்தை சேதப்படுத்திய நிலை இருந்தது.  முந்திரி பூக்கும் காலத்தில் அதிகமாக பனி பெய்தால், பூங்சாணம் நோய்கள் தாக்குதலுக்கு உள்ளாகி மகசூல் பெருமளவு பாதிக்கும். 

           ஆனால் இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகம் இல்லாததால், முந்திரி மரங்கள் பாதிப்பில் இருந்து தப்பியதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.  கடலூர் மாவட்டத்தில் மானாவாரி முந்திரி மகசூல் ஏக்கருக்கு 4 முதல் 5 மூட்டைகள் (80 கிலோ) வரையிலும், இறவை மற்றும் ஒட்டுரக முந்திரியில் மகசூல் அதிகம் கிடைக்கும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.  எனவே இந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் டன்னுக்கு மேல் முந்திரிக் கொட்டை கிடைக்கும் என்று, விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.  

இது குறித்து வேளாண் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் ராமலிங்கம் கூறுகையில்,

              "கடந்த ஆண்டைக் காட்டிலும், இவ்வாண்டு முந்திரி மரங்கள் வளமாகப் பூத்து இருக்கின்றன. இதுவரை பூச்சி, பூஞ்சாணத் தாக்குதல் இன்றி நன்றாக உள்ளன. தொடர்ந்து இதே நிலை நீடித்தால், கடலூர் மாவட்டத்தில் முந்திரி மகசூல் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  முந்திரிக் கொட்டை விலை தற்போது மூட்டை ரூ. 7 ஆயிரமாக உள்ளது.  முந்திரி ஏற்றுமதி வாய்ப்பை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவும், அரசு நிதி உதவி மற்றும் தனியார் நிறுவன பங்களிப்புடன் காட்டாண்டிக்குப்பத்தில், முந்திரி ஏற்றுமதி மையம் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது.  

           இங்கு முந்திரிக் கொட்டைகளை உடைத்து பதப்படுத்துவதற்கான இயந்திரங்கள் உள்ளிட்ட வசதிகள்  உள்ளன.  ÷கொட்டையை உடைத்து பதப்படுத்தும் தொழில் கடலூர் மாவட்டக் கிராமங்களில் குடிசைத் தொழிலாக நடந்து வருகிறது என்றார்.  

பத்திரக்கோட்டை விவசாயி தேவராசு கூறுகையில் 

               "முந்திரி விவசாயத்தில் போதிய லாபம் இல்லை. தற்போது செலவு அதிகம். ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் செலவு.  ÷மகசூல் வரவு ரூ. 20 ஆயிரம்தான். வேலைக்கு ஆள்கள் கிடைப்பது இல்லை. வெளி மாநிலத்தினர் வந்து இங்கு முந்திரி பதப்படுத்தும் தொழில் செய்வதால், முந்திரி ஏற்றுமதி மையமும் சரியாக செயல்படவில்லை'  என்றார்.  

Read more »

அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சிதம்பரம்:

           சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தொலைதூரக்கல்வி மையத்தில் கீழ்கண்ட படிப்புகளுக்கு டிசம்பர்-2010 ல்,தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை, கீழ்கண்ட இன்டெர்நெட் முகவரி மற்றும் வாய்ஸ்நெட் தொலைபேசி, எஸ்எம்எஸ் மூலம் மார்ச் 23-ம் தேதி முதல் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.  

இன்டர்நெட் முகவரிகள்:
 

  ஆகிய முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

வாய்ஸ்நெட் தொலைபேசி எண்கள்:

 சிதம்பரம் கோடு எண்: 04144 -237356 /237357/237357/ 237358/237359. 

               மேலும் மொபைல் போனில் RCQ Enr.no RCQ Reg.no என டைப் செய்து 9442551111 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினால் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.  

வெளியிடப்படும் முடிவுகள்: 

           பி.ஏ.(அனைத்துப் பிரிவுகள்), பி.எஸ்சி.(அனைத்துப் பிரிவுகள்), பி.காம்(அனைத்துப் பிரிவுகள்), பி.பி.ஏ(அனைத்துப் பிரிவுகள்), பி.பி.எஸ்., பி.எம்.எம்., பி.மியூசிக்.,பி.டான்ஸ்.,பி.பி.எல்.,பி.சி.ஏ.,எம்.பி.ஏ.(ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட்),எம்.எஸ்சி(கெமிஸ்டரி),எம்.ஹெச்.எஸ்சி(டையாபட்டாலஜி), பிரிவென்டிவ் கார்டியாலஜி., எம்.ஃபில் (ஆங்கிலம்,வரலாறு), கடல்வாழ் உயிரியல் மற்றும் பிஜி டிப்ளமா,டிப்ளமா,சான்றிதழ் வகுப்புகள்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior