உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 28, 2011

கடலூர் மாவட்டத்தில் இலவச அரிசி தடையின்றி வழங்க ஏற்பாடு : மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன்

 கடலூர்:

             அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச அரிசி தடையின்றி வழங்கும் வகையில், நியாய விலைக் கடைகளுக்கு 100 சதவீத அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார்.   

ஆட்சியர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

             முதல்வரின் உத்தரவுப்படி 1-6-2011 முதல், கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்கப்படும். இதற்காக ரேஷன் கடைகளில் பதிவு செய்யப்பட்டுள்ள ரேஷன் கார்டுகளுக்கு தேவையான 100 சதவீத அரிசி ஒதுக்கீடு நடப்பு மாதத்தில் செய்யப்பட்டுள்ளது.    

                இத்திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. எனவே மாதம் முழுவதும் தரமான அரிசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தகுதிக்கு ஏற்ப அளவு அரிசி இலவசமாக வழங்கப்படும்.  எனவே ரேஷன் கார்டுதாரர்கள் ஒரே நாளில் சென்று அரிசி வாங்க வேண்டும் என்று எண்ணாமல், வசதிப்படி தங்கள் பகுதி ரேஷன் கடைக்குச் சென்று, இலவச அரிசியைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஆட்சியரின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. 



Read more »

பண்ருட்டியில் வேலைவாய்ப்பு பதிவை தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ.பி.சிவக்கொழுந்து

பண்ருட்டி:
 
            பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் வேலைவாய்ப்பு பதிவை சட்டப் பேரவை உறுப்பினர் பி.சிவக்கொழுந்து, வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். 2010-2011-ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு மார்ச்சில் அரசு பொதுத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வின் முடிவு மே 9-ம் தேதி வெளியானதை தொடர்ந்து புதன்கிழமை முதல் அந்தந்த பள்ளியில் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் விநியோகிக்கப்படுகிறது.

              மேலும் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் வேலைவாய்ப்பு பதிவை அந்தந்த பள்ளி வளாகத்திலேயே ஆன்-லைன் மூலம் பதிவு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் வேலை வாய்ப்பு பதிவை பண்ருட்டி சட்டப் பேரவை உறுப்பினர் பி.சிவக்கொழுந்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.சுப்பிரமணியன், பள்ளி வளர்ச்சிக் குழுத் தலைவர் பஞ்சவர்ணம், பெற்றோர்-ஆசிரியர் சங்க பொருளாளர் சக்திவேல், பள்ளி வளர்ச்சிக் குழு உறுப்பினர் யூசுப், உதவி தலைமையாசிரியர்கள் தீனதயாளன், பற்குணன், என்.சி.சி. அலுவலர்  ஜெ.பாலசந்தர், என்.சி.சி., அலுவலர் மோகன்குமார், தேமுதிக நகரத் தலைவர் அக்பர் அலி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



Read more »

சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடிப்பு

சேத்தியாத்தோப்பு:

       சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்ததால், 80 லட்சம் ரூபாய்  மதிப்புள்ள மொலாசஸ் நாசமானது. கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலையில், கடந்த மார்ச்சில், 17 லட்சம் ரூபாய் செலவில் ஒரு பாய்லர் புதுப்பிக்கப்பட்டது. இந்த பாய்லரில், 3,440 டன் மொலாசஸ் இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 2.30 மணிக்கு பாய்லரின் அடிப்பகுதி திடீரென வெடித்தது. பாய்லரில் இருந்த மொலாசஸ், ஆலையின் பின்புற பகுதி முழுவதும், குழம்பாக பரவியது. இதில், 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மொலாசஸ் நாசமானது.




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior