உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 24, 2011

பண்ருட்டி கஸ்தூரிபாய் வீதியில் அடிக்கடி பழுதாகும் ஆழ்குழாய்க் கிணறு






பண்ருட்டி:

           பண்ருட்டி கஸ்தூரிபாய் வீதியில் உள்ள ஆழ்குழாய்க் கிணறு போர் அடிக்கடி பழுதடைந்து விடுவதால் தண்ணீரின்றி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

            பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்குண்டான நடவடிக்கை கூட நகர நிர்வாகம் எடுக்கவில்லை என அப்பகுதி கவுன்சிலர் துரை.ராமகிருஷ்ணன் வேதனையுடன் கூறினார். பண்ருட்டி நகரின் மையப் பகுதியில் கஸ்தூரிபாய் வீதி அமைந்துள்ளது. இங்குள்ள ஆழ்குழாய்க் கிணறு மூலம் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நகர நிர்வாகம் தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது.

             கடந்த ஒரு மாதகாலமாக இந்த ஆழ்குழாய்க் கிணற்றில் பொருத்தப்பட்ட மோட்டார் அடிக்கடி பழுதடைந்து விடுவதால், கஸ்தூரிபாய் வீதி, பனங்காட்டு தெரு, தனபால்செட்டி தெரு, சோமேஸ்வரன் கோயில் வீதி, பழைய மார்க்கெட் வீதி, மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தண்ணீரின்றி அவதி அடைந்து வருகின்றனர்.

             கஸ்தூரிபாய் வீதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்ட போர் மூலம் நகர நிர்வாகம் தண்ணீர் விநியோகம் செய்து வந்தது. இதில் இருந்த 12 எச்.பி. மோட்டார் பழுதடைந்ததைத் தொடர்ந்து நகர நிர்வாகம் 6 எச்.பி. மோட்டாரை பொருத்தியது. இதனால் குடியிருப்புப் பகுதிகளுக்கு போதுமான அளவு தண்ணீர் விநியோகம் செய்ய முடியவில்லை. மேலும் பழுதி நீக்கி பொருத்தப்படும் மோட்டார்கள் ஒரு சில நாள்களிலேயே பழுதடைந்து விடுகிறது.

                ஆழ்குழாய்க் கிணற்றில் என்ன குறை? ஏன் அடிக்கடி மோட்டார் பழுதடைகிறது? என அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. திட்டமிடப்படாத பணியால் பொது மக்களின் வரிப்பணம் வீண் விரையமாகிறது. கடந்த ஒரு மாத்தில் மட்டும் இந்த போது பலமுறை பழுதாகிவிட்டது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

            இது குறித்து நகராட்சி அதிகாரிகளோ, நகரமன்ற உறுப்பினர்களோ கண்டுக் கொள்ளவில்லை. ஆழ்குழாய்க் கிணறு இல்லாதவர்கள் தண்ணீருக்கு கஷ்டப்படுகின்றனர். நகர நிர்வாகம் லாரி மூலம் கூட தண்ணீர் விநியோகம் செய்ய முன்வரவில்லை என வேதனையுடன் கூறினர்.

 இது குறித்து நகரமன்ற உறுப்பினர் துரை.இராமகிருஷ்ணன் கூறியது: 

            "இப்பகுதியில் உள்ள போர் சரியில்லை, இதனால் அடிக்கடி பழுதடைகிறது. இது குறித்து நகர நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் தண்ணீர் விநியோகிக்கும் லாரியும் பழுதாகி உள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதியில் தண்ணீர் விநியோகம் செய்யவில்லை என தெரிய வருகிறது' என கூறினார்.






Read more »

டான்செட் 2011-12 தேர்வு முடிவு வெளியீடு

            "டான்செட்' தேர்வு முடிவு அண்ணா பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  

             அண்ணா பல்கலைக்கழகம், அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலான எம்.இ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ. உள்ளிட்ட முதுநிலை பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு "டான்செட்' அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படுகிறது.  2011-12 கல்வியாண்டுக்கான "டான்செட்' தேர்வு அண்மையில் நடத்தப்பட்டது. இதில் 95 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.  

     இந்த தேர்வுக்கான முடிவு வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக இணைய தளம்  




மூலம் தேர்வு முடிவை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.


Read more »

பண்ருட்டி நகர பகுதியில் வீதிகளில் குப்பைகள்

ண்ருட்டி:

      பண்ருட்டி நகர நிர்வாகம் நகர பகுதியில் குப்பைகளை அகற்றாததால் நகரத்தில் உள்ள 33 வார்டு வீதிகளில் எங்கும் குப்பைகள் காற்றில் பறந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

           பண்ருட்டி நகராட்சியின் 33 வார்டுகளில் இருந்து நாள் ஒன்றுக்கு 17 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இக்குப்பைகளை கொட்ட உரிய இடத்தை நகர மற்றும் மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்து தராததால் கடந்த பல ஆண்டுகளாக நகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் புகழ்பெற்ற கெடில நதியில் கொட்டியும், பள்ளம் தோண்டி புதைக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. இதனால் சுற்றுசூழல் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

           இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நகரப் பகுதியில் குப்பைகள் அள்ளப்படுவதில்லை. நகராட்சியில் துப்புரவுப் பணியாளர்கள் 110-க்கும் மேற்பட்டோர் இருந்து, நகரப் பகுதியில் குப்பை அள்ளுதல், கழிவுநீர் கால்வாய் பராமரிப்பு உள்ளிட்ட எந்த பணியியும் பெயரளவில் கூட நடைபெறவில்லை. இதனால் நகரப் பகுதியின் வீதிகள், பள்ளிகள், அரசு துறை அலுவலகங்கள், மருத்துவமனை என எங்கு பார்த்தாலும் குப்பைகள் காற்றில் பறந்துக் கொண்டுள்ளது. 

          மேலும் சில இடத்தில் தேங்கிய குப்பைகளை நகராட்சிப் பணியாளர்கள் தீயிட்டு கொளுத்தி சுற்றுச்சூழலை பாதிப்படைய செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பொதுமக்கள் இடத்தில் இருந்து பல்வேறு புகார்கள் மனுக்கள் வந்த போதும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். 

இது குறிதது நகராட்சி அலுவலக ஊழியர்கள் கூறியது 

             நகரப் பகுதியில் குப்பைகள் அள்ளுவதற்கு 8 வாகனங்கள் இருந்தன. கடந்த சில ஆண்டுகளாக வாகனங்கள் பராமரிப்பு என தீர்மானம் நிறைவேற்றி பணம் எடுத்ததுடன் சரி வாகனத்தை பழுது பார்க்கவோ, பராமரிக்கவோ இல்லை. இதனால் வாகனங்கள் மிகமோசமான நிலையில் ஓடாமல் ஓரம்கட்டி நிறுத்தப்பட்டுள்ளது. எஞ்சிய ஓரிரு வாகனம் மட்டும் இயங்குவதால் 33 வார்டு பகுதியிலும் குப்பைகள் அகற்ற முடியவில்லை என கூறினர். பண்ருட்டி நகர நிர்வாகம் சீர்கெட்டு பொது மக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை தேவை மற்றும் வசதிகளை நிறைவேற்றவில்லை.

            து குறித்து நகர மற்றும் மாவட்ட அதிகாரிகளும் கவலைப்படவில்லை என்பதே உண்மை. பண்ருட்டி நகர நிர்வாகம் புத்துயிர் பெற அதிகாரிகள் முன்வருவார்களா?





Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior