உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், செப்டம்பர் 14, 2011

நாகப்பட்டினத்தில் ரூ.30 கோடி மதிப்பில் மீன்வளப் பல்கலைக்கழகம்

                  நாகப்பட்டினத்தில் ரூ.30 கோடி மதிப்பில் மீன்வளப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

 சட்டப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் செவ்வாய்க்கிழமை அவர் படித்த அறிக்கை:

              தமிழகம் 1,076 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது. 591 கடல் மீனவ கிராமங்களில், சுமார் 9 லட்சம் மீனவ மக்கள் உள்ளனர். 6,200 மீன்பிடி விசைப் படகுகளும், 50 ஆயிரம் பாரம்பரிய கலன்களும் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளன.

             தமிழகத்தில் கடல் மீன் உற்பத்தி 4 லட்சம் டன்னாகும். தமிழகத்தில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள கடல் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன .இதைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் இரண்டாவது மீன்வளக் கல்லூரி 1977-ல் தூத்துக்குடியில் நிறுவப்பட்டது. தமிழகத்தில் மீன்வளத்தைப் பெருக்குவதில் பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை எடுத்து வரும் அதே வேளையில், அதற்குத் தேவையான கல்வி அறிவைப் பெருக்குவதற்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அரசு முடிவெடுத்துள்ளது.

                இந்த அடிப்படையில், மீன் வளத்துக்கென மீன்வளப் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவ அரசு முடிவெடுத்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் 188 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது. மீன் பிடித்தல், உலர் மீன் உற்பத்தி, இறால் வளர்ப்பு ஆகியவை அந்த மாவட்டத்தின் முக்கியமான பொருளாதார நடவடிக்கைகள். அந்த மாவட்டத்தில் 9 ஆயிரம் மீன்பிடிக் கலன்கள் மீன் பிடிப்பில் ஈடுபட்டுள்ளன.

              நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, மீன்வளப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு நாகப்பட்டினம் மிகவும் உகந்த இடமாக உள்ளதால் அங்கு அந்தப் பல்கலைக்கழகம் அமைக்கப்படுகிறது. நாகப்பட்டினம் தாலுகாவில் பனங்குடி, நாகூர் கிராமங்களில் 85 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் ரூ.30 கோடி மதிப்பில் மீன்வளப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். 

 பல்கலைக் கழகத்தில் இணைக்கப்படுவது எவை? 

 முதல்கட்டமாக, தூத்துக்குடியில் உள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்,

மீன்வளத் துறையின் ஆராய்ச்சிப் பிரிவு, 

சென்னையில் உள்ள மீன்வளத் தொழில்நுட்பப் பயிற்சி நிலையம், 

சென்னையில் உள்ள மீன்வளப் பணியாளர் பயிற்சி நிலையம், 

தமிழ்நாடு கடல்சார் கழகம் 

                  ஆகியன புதிய பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும்.இந்தப் பல்கலைக்கழகத்தில் இறால் வளர்ப்பு, கெண்டை மீன் வளர்ப்பு, வண்ண மீன் வளர்ப்பு, மீன் பதப்படுத்துதல், மீன் மதிப்பு கூட்டியப் பொருள்கள் உற்பத்தி, மீன்பிடி படகு மற்றும் இயந்திர பராமரிப்பு ஆகிய பாடப் பிரிவுகளில் பட்டங்கள் மற்றும் பட்டயங்கள் வழங்கப்படும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.










Read more »

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்போர் 68 லட்சம் பேர்

              வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை 68 லட்சத்து 5 ஆயிரம் பேர் ஆகும்.

            இந்தத் தகவல், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுகுறித்த விவரம்

             வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தல், புதுப்பித்தல், பதிவு அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்ட முக்கியப் பணிகள் அனைத்தும் கம்ப்யூட்டர் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன.

           மாநிலத்திலுள்ள 37 வேலைவாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. 

           

2010-ம் ஆண்டில், 11 லட்சத்து 54 ஆயிரத்து 121 பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். 

             கடந்த மார்ச் நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 68 லட்சத்து 5 ஆயிரத்து 248 ஆகும்.

                நடப்பாண்டு பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாகவே வேலைவாய்ப்பு பதிவினை ஆன்-லைன் வசதியைப் பயன்படுத்தி இணையதளத்தில் பதிந்து கொண்டனர்.

                   இத்தகைய முறையால், பிளஸ் 2 மாணவர்கள் 4 லட்சத்து 78 ஆயிரத்து 717 பேரும், 10-ம் வகுப்பு மாணவர்கள் 7 லட்சத்து 2 ஆயிரத்து 962 பேரும் தங்களது பதிவினை ஆன்-லைன் மூலம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.









Read more »

கடலூர் மாவட்டத்தில் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பிப்போர் புதிய படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்

கடலூர்:

          பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்கள் வரும் 19ம் தேதி முதல் புதியதாக வடிவமைக்கப்பட்ட மனுவை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
 
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பாஸ்போர்ட் மையத்தில் 19ம் தேதி முதல் பாஸ்போர்ட் கோரி பெறப்படும் மனுக்கள் தொடர்பாக பின்பற்றப்படும் நடைமுறைகள் வருமாறு:

              புதியதாக வடிவமைக்கப்பட்ட படிவத்தில் மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும். புதிய விண்ணப்பப்படிவம் வெளிவிவகாரத் துறை அமைச்சக இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

               மாவட்ட பாஸ்போர்ட் மையத்தில் 18 வயதுக்குட்பட்டவர் உட்பட அனைவருக்கும் புதிய பாஸ்போர்ட் கோரும் விண்ணப்பங்கள் மட்டும் பெறப்படும். விண்ணப்பத்தாரர்கள் புதிய படிவத்தில் பேனாவால் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். பழைய படிவத்தில் பூர்த்தி செய்து அளிக்கப்படும் மனுக்கள் பெறப்படமாட்டாது.விண்ணப்பக் கட்டணம் மண்டல கடவுச்சீட்டு அலுவலர், சென்னை என்ற முகவரியிட்டு சென்னையில் பெறத்தக்க வகையிலான வரைவு கேட்போலையாக மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்.

                 பாஸ்போர்ட் மையத்தில் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களின் நிலை குறித்து மண்டல பாஸ்போர்ட் அலுவலக கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும் புதிய 15 இலக்க கோப்பு எண் விவரம் இளையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.மாவட்ட பாஸ்போர்ட் மையங்களில் 15ம் தேதி வரை மட்டுமே பழைய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும். 

இதர சேவை வேண்டுவோர் 

சாலிகிராமம், 
நெல்சன் மாணிக்கம் சாலை, 
தாம்பரம் 

பாஸ்போர்ட் மையங்கள்


No. 1, Bhanumathi Ramakrishna Road, Saligramam, Chennai






Navins Presidium, No. 103, Nelson Manickam Road, Aminjikarai, Chennai 


Claret Complex, Duraisamy Reddy Street, Tambaram, Chennai


ஆகிய பாஸ்போர்ட் மையங்களில் நேரடியாக சென்று விசாரித்துக் கொள்ளலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


MORE DETAILS






 Form Download 



 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior