உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், செப்டம்பர் 22, 2011

கடலூர் சிறையில் திருச்சி மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வேட்பு மனுவில் கையெழுத்து

கடலூர்:

         கடந்த சட்டசபை தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட மரியம்பிச்சை வெற்றி பெற்று அமைச்சராக பொறுப்பேற்றார். சென்னைக்கு காரில் சென்றபோது விபத்தில் சிக்கி பலியானார்.  அதையடுத்து திருச்சி மேற்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்தமாதம் 13-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. நேற்று முன்தினம் வேட்பு மனுதாக்கல் தொடங்கியது.

             இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் பரஞ்ஜோதி நேற்று மனுதாக்கல் செய்தார். தி.மு.க. சார்பில் ஏற்கனவே அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த முன்னாள் அமைச்சர் நேரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  நேரு நில அபகரிப்பு வழக்கில் கைதாகி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   அதனைத்தொடர்ந்து கே.என்.நேருவின் வக்கீல்கள் ரமேஷ், பாஸ்கர் ஆகியோர் நேற்று மாலை கடலூர் ஜெயிலுக்கு சென்றனர். சிறை அதிகாரிகள் அனுமதி பெற்று திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் கே.என்.நேருவிடம் கையெழுத்து பெற்று சென்றனர். 
 
 
 
 
 

Read more »

கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் செப்டெம்பர் 25ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கடலூர்:

          கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 25ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

        தமிழகத்தில் தனியார் முன்னணி நிறுவனங்களுக்குத் தேவையான பணியாளர்கள் நிரப்பப்படவுள்ளனர். அதையொட்டி வரும் 25ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. 

பங்கேற்கும் நிறுவனங்களும், ஊதிய விவரமும்:

ஜெ.கே., டயர் - 
சிவில் மற்றும் கம்ப்யூட்டர் தவிர அனைத்து டிப்ளமோ இன் இன்ஜினியரிங், வயது 18 முதல் 22 வரை இருக்க வேண்டும். 
மாத ஊதியம் 7,500 ரூபாய்.

செயின்ட் கோபைன் கண்ணாடி தொழிற்சாலை, 

10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி
வயது 18 - 20, 
உதவித்தொகை மாதம் 5,000 ரூபாய். 

டாடா நிறுவனம்

12ம் வகுப்பு தேர்ச்சி,
வயது 18 - 20 வரை, 
மாதம் 6,900 ரூபாய். 

ஏர்டெல் நிறுவனத்தில் 

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிகிரி, ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக், 
வயது 18 - 35,
கல்வித் தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கப்படும். 
குறைந்த பட்சம் மாதம் 7,000 ரூபாய்.

ஐ.எஸ்.எஸ்.எஸ்.டி.பி., 

செக்யூரிட்டி சர்வீஸ்,
அனைத்து கல்வித் தகுதிகளும்,
வயது வரம்பு இல்லை. 
கல்வித்தகுதிக் கேற்ற ஊதியம். 
குறைந்தபட்சம் 7,195 ரூபாய்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.














Read more »

இலவச மடிக்கணினியை கொண்டு மாணவர்கள் உலக நடப்புகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்: அமைச்சர் எம்.சி.சம்பத்

விருத்தாசலம்:

             மடிக்கணினியை கொண்டு மாணவர்கள் உலக நடப்புகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம் அரசு பள்ளியில் சனிக்கிழமை நடந்த மடிக்கணினி வழங்கும் விழாவில் அமைச்சர் சம்பத் பேசினார்.

           இதில் சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம், சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத் துறை அமைச்சர் சம்பத் ஆகியோர் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினர்.

விழாவில் அமைச்சர் செல்விராமஜெயம் பேசியது: 

            இந்த மடிக்கணினியை பயன்படுத்தி தங்கள் கல்வி அறிவை பெருக்கிக்கொள்ள வேண்டும். எனது பிள்ளைகள் கூட மடிக்கணினி கேட்டார்கள். என்னால் அப்போது வாங்கித்தர முடியவில்லை. ஆனால், இன்று ஜெயலலிதா அன்னையாக இருந்து மடிக்கணினி வழங்கி இருக்கிறார். அவருக்கு நன்றி விசுவாசத்துடன் இருக்க வேண்டும் என்றார்.

மைச்சர் சம்பத் பேசியது: 

               மடிக்கணினி வழங்கும் திட்டம் மகத்தான திட்டமாகும். ஏழை மாணவர்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட திட்டமாகும்.  முதல்வர் உங்களுக்கு உற்றத்தாயாக இருந்து மடிக்கணினி வழங்குகிறார். பாடங்களில் உள்ள சந்தேகங்களை கண்டறிந்து நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும். மாணவர்கள் இடைநிற்கக்கூடாது. அதற்காகத்தான் இந்த மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி மாணவர்களைவிட நீங்களும் சிறப்பாக பயின்று தேர்ச்சிபெற முடியும். மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணினியில் தனியாக சிப் பொருத்தப்பட்டுள்ளது. இதை யார் வாங்கிப் பயன்படுத்தினாலும் கண்டுபிடித்துவிடுவோம். மாணவர்கள் மடிக்கணினியை பயன்படுத்தி உலக நடப்புகளைக் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

                    மாவட்ட ஆட்சியர் அமுதவல்லி, முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், மாவட்டக் கல்வி அலுவலர் பத்ரூ உள்பட பலர் கலந்துகொண்டனர்.








Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior