உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 18, 2011

விருத்தாசலம் நகரம் மற்றும் ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் விவரம்

விருத்தாசலம்:

 கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் நகரம் மற்றும் ஒன்றியத்தில் திங்கள்கிழமை நடந்த உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவில்,  பதிவான வாக்குகள் விவரம்.

விருத்தாசலம் நகரம்: 
பதிவான வாக்குகள்-

ஆண்கள் 14,936,
பெண்கள் 17,030, 
மொத்த சதவீதம் 74.98.

விருத்தாசலம் ஒன்றியம்: 

பதிவான வாக்குகள்- 

ஆண்கள் 30,431, 
பெண்கள் 29,218, 
சதவீதம் 76.

மங்கலம்பேட்டை பேரூராட்சி: 

பதிவான வாக்குகள்- 4461,
சதவீதம் 80.47.

பெண்ணாடம் பேரூராட்சி: 

பதிவான வாக்குகள்- 9920. 
சதவீதம் 78.

நல்லூர் ஒன்றியம்: 

சதவீதம்- 70.

மங்களூர் ஒன்றியம்: 

சதவீதம்- 69.


Read more »

உள்ளாட்சி தேர்தல் : கடலூர் மாவட்டத்தில் 5 பேரூராட்சிகளில் 81.4 சதவீதம் வாக்குப் பதிவு

கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடந்த உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவில், 5 பேரூராட்சிகளில் 81.4 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

                    திங்கள்கிழமை மேல்பட்டாம்பாக்கம், தொரப்பாடி, மங்கலம்பேட்டை, பெண்ணாடம், கங்கைகொண்டான் பேரூராட்சிகளுக்கு வாக்குப் பதிவு நடந்தது. இதில் 5 பேரூராட்சிகளிலும் 81.4 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.

பேரூராட்சிகள் வாரியாக வாக்குப் பதிவு விவரம் வருமாறு:

மேல்பட்டாம்பாக்கம்: 

மொத்த வாக்குகள் 4,579. 
பதிவானவை 4,005.
87 சதவீதம் வாக்குப் பதிவு.

தொரப்பாடி: 

மொத்த வாக்குகள் 5,375. பதிவானவை 4,618. 85.9 சதவீதம் வாக்குப் பதிவு

மங்கலம்பேட்டை: 

மொத்த வாக்குகள் 5,520.
பதிவானவை 4,461. 
80.4 சதம் வாக்குப் பதிவு.

பெண்ணாடம்: 

மொத்த வாக்குகள் 12,772.
பதிவானவை 9,923.
78 சதவீதம் வாக்குப் பதிவு.

கங்கைகொண்டான்: 

மொத்த வாக்குகள் 9,211. 
பதிவானவை 7,188.
77 சதம் வாக்குப் பதிவு.






Read more »

விருத்தாசலம் அருகே உள்ளாட்சி தேர்தலைப் புறக்கணித்த கண்டப்பங்குறிச்சி கிராமம்

நெய்வேலி:

          விருத்தாசலம் தாலுக்காவுக்குட்பட்ட கண்டப்பங்குறிச்சி கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வலியுறுத்தி, கிராம மக்கள் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணித்தனர்.

             விருத்தாசலம் தாலுக்காவுக்குட்பட்ட கண்டப்பங்குறிச்சி கிராமம் கோ.கொத்தனூர் எனும் ஊராட்சியோடு இணைக்கப்பட்டுள்ளது. தங்களது கிராம மக்கள்தொகை 1700 பேர் உள்ளனர் என்றும், மொத்த வாக்காளர்கள் 599 பேர் உள்ளதாகவும், இதில் 200 வாக்காளர்கள் பெயர் விடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டும் கிராம மக்கள், கண்டப்பங்குறிச்சியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்று விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், கிராம மக்கள் திங்கள்கிழமை நடந்த உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் தெரிவித்தார்.

            இக்கிராம மக்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது. வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தாலும், கிராம மக்கள் யாரும் வாக்களிக்க வரவில்லை. வாக்குச்சாவடியில் இருந்த அலுவலர்கள் மாலை 5 மணி வரை காத்திருந்து, காலி வாக்குப் பெட்டியை சீல் வைத்து எடுத்துச் சென்றனர்.








Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior