உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 28, 2011

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற பதவிகளின் விபரம்

                  தமிழ்நாட்டில் 10 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12,524 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன.

                இந்த உள்ளாட்சி அமைப்பில் மொத்தம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 401 பதவி இடங்கள் உள்ளன. இதில் 19 ஆயிரத்து 646 பேர் போட்டியின்றி தேர்ந்துஎடுக்கப்பட்டனர். மீதமுள்ள இடங்களுக்கு தேர்தல் நடந்தது.

மாநில தேர்தல் வெளியிட்ட தகவலின்படி 
           
            அ.தி.மு.க. 9806 உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றியுள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை, வேலூர், நெல்லை, சேலம், தூத்துக்குடி, திருப்பூர், ஈரோடு ஆகிய 10 மாநகராட்சிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியது.

                        10 மாநகராட்சிகளில் உள்ள மொத்த வார்டுகளில் அ.தி.மு.க. 579 வார்டுகளை கைப்பற்றியது. தேர்தல் நடத்த 124 நகராட்சியில் அ.தி.மு.க. 89 நகராட்சி தலைவர் பதவியை பிடித்தது. 1680 நகராட்சி வார்டுகளும் அந்த கட்சிக்கு கிடைத்தது. 285 பேரூராட்சிகளையும், 2849 பேரூராட்சி வார்டுகளையும் அ.தி.மு,க, கைப்பற்றியது.

                மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் 569 பதவிகளையும், பஞ்சாயத்து யூனியன் வார்டுகளில் 3745 பதவிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றியது.   அ.தி.மு.க.வுக்கு அடுத்தப்படியாக தி.மு.க. 4023 உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றியது. 23 நகரசபைகளும், 121 பேரூராட்சிகளும் அந்த கட்சிக்கு கிடைத்தது. 10 மாநகராட்சி வார்டுகளில் 128 பதவிகளையும், நகரசபை வார்டுகளில் 963 பதவிகளையும், பேரூராட்சி வார்டுகளில் 1820 பதவி களையும், மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளில் 26 பதவிகளையும், பஞ்சாயத்து யூனியன் வார்டில் 942 பதவி களையும் தி.மு.க. கைப்பற்றியது.

                  3-வதாக சுயேட்சைகள் உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றினர். மொத்தம் 3309 பதவிகள் சுயேட்சைகளுக்கு கிடைத்தது. இதில் 5 நகர சபையும், 64 பேரூராட்சியும், மாநகராட்சியில் 55 வார்டு களும் அடங்கும். தே.மு.தி.க. 855 பதவிகளை பிடித்து 4-வது இடத்தை கைப்பற்றியது. இதில் 2 நகரசபையும், 3 பேரூராட்சியும், மாநகராட்சியில் 8 வார்டுகளும் இதில் அடங்கும்.

                      காங்கிரஸ் கட்சிக்கு 737 பதவிகள் கிடைத்தது. இதில் 24 பேரூராட்சி அடங்கும்.அந்த கட்சிக்கு ஒரு நகரசபை கூட கிடைக்கவில்லை. பா.ம.க. 395 பதவிகளையும், பாரதிய ஜனதா 2 நகரசபை உள்பட 270 பதவிகளையும், ம.தி.மு.க. ஒரு நகரசபை உள்பட 193 பதவிகளையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2 நகரசபை உள்பட 159 பதவிகளையும், இந்திய கம்யூனிஸ்டு 99 பதவிகளையும் பிடித்தன. மற்றவைகள் 47 பதவிகளை பிடித்தன.
 
 
 
 
 
 

Read more »

விருத்தாசலம் அருகே எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு

விருத்தாசலம்:

              விருத்தாசலம் அருகே கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு எம்.ஜி.ஆர். சிலை நிறுவப்பட்டிருந்தது. இந்த நிலையில் நள்ளிரவு விஷமிகள் யாரோ எம்.ஜி.ஆர். சிலையின் இடதுகையை உடைத்து சேதப்படுத்தி இருந்தனர். இன்று காலை இதனை பார்த்த அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்தனர்.

              இதுகுறித்து கம்மாபுரம் கிளை ஜெயலலிதா பேரவை துணை தலைவர் ஆறுமுகம் கம்மாபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரில், எம்.ஜி.ஆர் சிலையை உடைத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிலைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

வியாழன், அக்டோபர் 27, 2011

உள்ளாட்சி தேர்தலில் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம்

  http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/b04547bb-42e0-470b-b75e-06e7a6f8c01e_S_secvpf.gif

          நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., பா.ஜ.க., இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மட்டும் தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டது.
 
            இந்த தேர்தலில் அ.தி.மு.க. அனைத்து மாநகராட்சிகளை கைப்பற்றியதுடன் பெரும்பாலான உள்ளாட்சி பதவிகளில் வெற்றி பெற்று அசுர பலத்துடன் உள்ளது. தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியான நிலையில் அரசியல் கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதத்தை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி ஆளுங்கட்சியான அ.தி.மு.க. 39.02 சதவீத ஓட்டுகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

               அ.தி.மு.க.வுக்கு கிராமப் பகுதிகளில் 39.24 சதவீத ஓட்டுகளும், நகரப் பகுதியில் 38.69 சதவீத ஓட்டுகளும் கிடைத்துள்ளன. இதன்மூலம் கிராமங்களில் அதி.மு.க. செல்வாக்கு அதிகரித்துள்ளது. மேலும் சமீபத்திய சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. 38.4 சதவீத ஓட்டுகள் பெற்று இருந்தது. அதன்பிறகு 4 மாதத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 39.02 சதவீத ஓட்டுகள் கிடைத்துள்ளது. 4 மாத இடைவெளியில் அ.தி.மு.க.வுக்கு 0.62 சதவீத ஓட்டு அதிகரித்து இருக்கிறது. அரசின் செயல்பாடுகள் மீது மக்கள் நம்பிக்கை அதிகரித்து இருப்பதையே இது காட்டுகிறது.

             உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 26.09 சதவீத ஓட்டுகளை பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அந்த கட்சிக்கு கிராமப் பகுதியில் 25.71 சதவீதமும், நகரப்பகுதியில் 26.67 சதவீத ஓட்டும் கிடைத்துள்ளது. சட்டசபை தேர்தலில் 22.38 சதவீத ஓட்டுகளே பெற்ற தி.மு.க. உள்ளாட்சி தேர்தலில் 26.1 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. இதன்மூலம் தி.மு.க.வுக்கு 3.72 சதவீத ஓட்டுகள் அதிகரித்துள்ளது.

             தே.மு.தி.க. உள்ளாட்சி தேர்தலில் பெற்ற இடங்களின் அடிப்படையில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டாலும் ஓட்டு சதவீத அடிப்படையில் 3-வது இடத்தில் உள்ளது. அந்த கட்சிக்கு 10.11 சதவீத ஓட்டு கிடைத்துள்ளது. தே.மு.தி.க. தனித்து போட்டியிட்டபோது 2006 சட்டசபை தேர்தலில் 8.38 சதவீதமும், 2009 பாராளுமன்ற தேர்தலில் 10.08 சதவீத ஓட்டும் பெற்று இருந்தது. தற்போது அதன் ஓட்டு 10.11 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2011 சட்டசபை தேர்தலில் மட்டும் தே.மு.தி.க. அ.தி. மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது. தற்போது உள்ளாட்சி தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்தித்து 10.11 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது.

               தே.மு.தி.க.வுக்கு கிராமப் பகுதிகளில் 11.93 சதவீதமும், நகரப்பகுதியில் 7.4 சதவீத ஓட்டும் கிடைத்துள்ளது. இதன்மூலம் தே.மு.தி.க. தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. தனித்துப் போட்டியிட்ட பாரதீய ஜனதா 2006 சட்டசபை தேர்தலில் 2.02 சதவீத ஓட்டுக்களையும், 2009 பாராளுமன்ற தேர்தலில் 2.34 சதவீத ஓட்டுக்களையும் பெற்றது. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் 1.35 சதவீத வாக்குகளை மட்டும் அக்கட்சி பெற்றுள்ளது. இதன் மூலம் பாரதீய ஜனதாவுக்கு ஓட்டு சதவீதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.

             பா.ம.க. 1998 பாராளுமன்ற தேர்தல் முதல் தி.மு.க. அல்லது அ.தி.மு.க. அணியில் மாறிமாறி கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது. உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 3.5 சதவீத ஓட்டுகளை பெற்று காங்கிரசுக்கு அடுத்தப்படியாக 5-வது இடத்தில் உள்ளது. பா.ம.க.வுக்கு கிராமப் பகுதிகளில் 4.63 சதவீத ஓட்டுகளும், நகரப் பகுதியில் 1.93 சதவீத ஓட்டுகளும் கிடைத்துள்ளன. நகரங்களில் பா.ம.க.வுக்கு ஆதரவு இல்லை. கடந்த சட்டசபை தேர்தலை புறக்கணித்த ம.தி.மு.க. உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 1.7 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது.

             தனித்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டுக்கு 0.71 சதவீத வாக்குகளும், தே.மு.தி.க.வுடன் இணைந்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 1.02 சதவீத ஓட்டுகளும் கிடைத்துள்ளன. தனித்துப்போட்டியிட்ட காங்கிரஸ் 5.71 சதவீத ஓட்டுகள் பெற்று தே.மு.தி.க.வுக்கு அடுத்தப்படியாக 4-வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு கட்சியும் தனித்து போட்டியிட்டதன் மூலம் அந்த கட்சிகளுக்கு செல்வாக்கு என்ன என்பது வெட்ட வெளிச்சமாகியது.

கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம்:-

அ.தி.மு.க. 39.02

தி.மு.க. 26.09

தே.மு.தி.க. 10.11

காங்கிரஸ் 5.71

பா.ம.க. 3.55

ம.தி.மு.க. 1.70

பா.ஜனதா 1.35

மார்க்சிஸ்ட் கம்யூ. 1.02

இந்திய கம்யூ. 0.71 மற்ற கட்சிகள் 1.28

சுயேச்சைகள் 9.46
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior