உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 24, 2011

கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் (சில்வர் பீச்) வடமாநில சுற்றுலாப் பயணிகள் வருகை


ஆர்ப்பரிக்கும் அலைகளை பொருட்படுத்தாமல் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் குளிக்கும் வடமாநில சுற்றுலாப் பயணிகள். (வலது படம்) கடல் சீற்றம் காரணமாக
கடலூர்:
            வங்கக் கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்ததால், கடலூர் மீனவர்கள் புதன்கிழமை 3-வது நாளாக மீன்பிடிக்கச் செல்லவில்லை. வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் வங்கக் கடலில் அலைகளின் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. 20 அடி உயரம் வரை அலைகள் எழும்பி ஆர்ப்பரிப்பதாக மீனவர்கள் கூறுகின்றனர். கடல் நீரோட்டம் பெரிதும் மாறியுள்ளது என்றும் தெரிவித்தனர். கடந்த 3 நாள்களாக அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் கடலூர் மாவட்ட மீனவர்கள் புதன்கிழமை 3-வது நாளாக மீன் பிடிக்கக் கடலுக்குள் செல்ல வில்லை. 20 முதல் 30 கி.மீ. தொலைவில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பெரிய விசைப் படகுகளும் செவ்வாய்க்கிழமை கரை திரும்பின. 
இதுகுறித்து மாவட்ட மீனவர் பேரவைத் தலைவர் சுப்புராயன் கூறுகையில்,
            கடலூர் மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் கடந்த 3 மாதங்களாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.வடகிழக்குப் பருவமழை காலம் தொடங்கிய பிறகு நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. கடந்த 3 நாள்களாக கடல் சீற்றம் மிக அதிகமாக உள்ளது. வியாழக்கிழமையும் இதே நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கிறோம். மத்தி மீன்கள் பிடிக்கும் 100 படகுகள் மற்றும் வஞ்சரம், பாறை உள்ளிட்ட மீன்கள் பிடிக்கும் கட்டுவலைப் படகுகளும் கடந்த 3 மாதங்களாக மீன்பிடிக்கச் செல்லவில்லை. இப்போது ஏற்பட்டு இருக்கும் கடல் சீற்றம் மற்றும் நீரோட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, சிறிய படகுகளும் மீன் பிடிக்க முடியவில்லை. இதனால் மீன் விலை உயர்ந்துள்ளது. 















Read more »

கடலூரில் 28 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வளாகம்: பொதுப்பணித்துறை அதிகாரி ஆய்வு

கடலூர் : 

           கடலூரில் 28 கோடி ரூபாய்மதிப்பில் ஒருங்கிணைந்த கூடுதல் கலெக்டர் அலுவலகம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளர்  ஆய்வு செய்தார். 

              கடலூர் மாவட்டத் தலைநகரான அரசு அலுவலகங்கள் பல்வேறு இடங்களில் இயங்கி வருகின்றன. பல அலுவலகங்கள் தனியார் கட்டடங்களிலும், அரசு கட்டடங்களில் போதிய இடவசதி இல்லாமலும் இட நெருக்கடியில் இயங்கி வருகின்றன. வெவ்வேறு இடங்களில் அரசு அலுவலகங்கள் இயங்கி வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனைத் தவிர்க்க மற்ற மாவட்டங்களில் உருவாக்கியது போல் அனைத்து அரசு அலுவலகங்களும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் பெருந்திட்ட வளாகத்தை ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன.

               அதன்பேரில் தற்போது கலெக்டர் அலுவலகம் இயங்கி வரும் இடத்தில் உள்ள குளத்தை மூடி, ஒருங்கிணைந்த கூடுதல் கலெக்டர் அலுவலகம் கட்ட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. தற்போதைய கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள இடத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் 6 அடுக்கு கட்டடம் கட்ட கலெக்டர் அமுதவல்லி ஆலோசனையின் பேரில் பொதுப்பணித் துறை சார்பில் பூர்வாங்க திட்ட வரைபடத்துடன் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 13 மற்றும் 14ம் தேதிகளில் சென்னையில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில், கடலூரில் 28 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த கூடுதல் கலெக்டர் அலுவலகம் கட்டப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.












Read more »

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.7.77 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

கடலூர் : 

            கடலூர் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசு மானியமாக 7 கோடியே 77 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
 
கலெக்டர் அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

             கடலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த நிதியாண்டிற்கான நிதிக்குழுவின் இரண்டாம் தவணையாக 7 கோடியே 77 லட்சத்து 4,840 ரூபாய் தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த நிதியை மின் கட்டணம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய செலவினத்திற்காக ஊராட்சி நிதி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. ஊராட்சித் தலைவர்கள் தங்கள் ஊராட்சி நிர்வாகம் செலுத்த வேண்டிய மின் கட்டணம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளை செலுத்திட அறிவுறுத்தப்படுகின்றனர் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior