உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 21, 2011

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இட்லி மாவு நவீன தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்து இலவச பயிற்சி

சிதம்பரம் : 

          இட்லி மாவு நவீன தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்து இலவச பயிற்சி முகாமில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் பொருளாதாரத்துறை முதன்மை ஆராய்ச்சியாளர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: 

               சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் பொருளாதாரத்துறையில் மத்திய உயிர் தொழில் நுட்பவியல் துறை நிதி உதவியுடன் வரும் ஜனவரி 10ம் தேதியில் இருந்து 12ம் தேதி வரை 3 நாட்கள் இட்லி மாவு நவீன தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்து முகாம் இலவசமாக நடத்தப்பட உள்ளது.

பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயர், முகவரி, கல்வித்தகுதி, புகைப்படம், தொலைபேசி எண் மற்றும் 5 ரூபாய்க்கான தபால் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட உறையுடன்

முதன்மை ஆராய்ச்சியாளர் (உணவு பதப்படுத்துதல்), 
வேளாண் பொருளாதாரத்துறை, 
வேளாண் புலம், 
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
அண்ணாமலை நகர் 

என்ற முகவரிக்கு வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

முல்லை பெரியாறு அணை பிரச்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடலூரில் ஆர்ப்பாட்டம்

 
 http://mmimages.mmnews.in/Articles/2011/Dec/b316b2c5-6651-4209-9469-fb62c17b59a8_S_secvpf.gif
 
கடலூர்:

     முல்லை பெரியாறு அணை பிரச்சினையால் கேரளாவில் வசிக்கும் தமிழர்கள் தாக்கப்பட்டனர். அதையடுத்து தமிழகத்தில் பல இடங்களில் கேரள நிறுவனங்கள் மற்றும் கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. திங்கட்கிழமை  கடலூர் லாரன்ஸ் சாலையில் கேரள மாநிலத்திற்கு சொந்தமான நகைக்கடையை சிலர் முற்றுகையிட போவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே அந்த பகுதியில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.  

         போலீஸ் பாதுகாப்பையும் மீறி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் அறிவுடைநம்பி தலைமையில் சுமார் 50 பேர் அந்த நகை கடையை முற்றுகையிட முயற்சித்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து வேனில் ஏற்றினர்.  அந்த நேரத்தில், நாம் தமிழர் கட்சியினர் சுமார் 30 பேர் அந்த நகை கடையை முற்றுகையிட கோஷம் போட்டுக்கொண்டே ஓடிவந்தனர். சுதாரித்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். உடனே நாம் தமிழர் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் உருவானதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நகைக்கடை முற்றுகைக்கு முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

செவ்வாய், டிசம்பர் 20, 2011

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில், விளையாட்டு வீரர்கள் தங்கும் விடுதி : ரூ.60 லட்சம் ஒதுக்கீடு

கடலூர் :

          கடலூர் அண்ணா விளையாட்டரங்கில், விளையாட்டு வீரர்கள் தங்கும் விடுதி அமைக்க அதிகாரிகள் இடத்தை ஆய்வு செய்தனர். 

            தமிழக முதல்வர் ஜெயலலிதா அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள் தங்கும் விடுதி கட்டப்படும் என அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் விடுதி கட்ட 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கடலூர் அண்ணாவிளையாட்டு அரங்கில் தெற்கு பகுதியில் கூடைப்பந்து அரங்கின் அருகே உள்ள இடத்தை தேர்வு செய்து அளந்தனர். பின்னர் அதிகாரிகள் இது குறித்து ஆலோசனை நடத்தினர். இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பொறியாளர் விஜயகுமார், தலைமை அலுவலக மேலாளர் சாந்தன், மண்டல முதுநிலை மேலாளர் துரைசிங்கம் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் உடனிருந்தனர்.













Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior