உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 09, 2012

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு மாணவர்கள் போராட்டம்

சிதம்பரம்:

          சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவ, மாணவிகள் புதன்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

           பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்போக்கு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர் கூட்டமைப்பு சார்பில் தலைவர் வினோத் தலைமையில் புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்து பூமா கோயில் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக மானியக்குழு ஆணையின்படி பேராசிரியர் மற்றும் ஆசிரியர் தேர்வு தகுதியில் பிளஸ் 2, இளங்கலை, முதுகலை என்ற முறையை பயன்படுத்துவதை போல், ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பை இளங்கலைக்கு நிகரானது என்ற அரசாணையுடன் பிளஸ் 2, முதுகலை என்கிற முறையை பல்கலைக்கழக மானிய குழுவின் பரிந்துரையின் படி புதிய அரசாணையை அரசு பிறப்பிக்க வேண்டும்.

          ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பை இளங்கலை மற்றும் முதுகலையென இரண்டாக சரியான முறையில் பிரித்து வழங்குமாறு அண்ணாமலைப் பல்கலைக்கு அரசு ஆணையிட வேண்டும், மூப்பு அடிப்படையிலான வேலைவாய்ப்பு வழங்க முன்பு முடித்த மாணவர்களின் பட்ட மேற்படிப்பை பதிவு செய்த அதே ஆண்டுக்கு இளங்கலையையும் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த சிதம்பரம் கோட்டாட்சியர் எம்.இந்துமதி, வட்டாட்சியர் ரங்கராஜன் (பொறுப்பு), பல்கலைக்கழக மக்கள்-தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் உள்ளிட்டோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் துணை வேந்தர் எம்.ராமநாதன், சென்று மாணவர் சங்க பிரிதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

         அப்போது அண்ணாமலைப் பல்கலையில் ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்புக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், வேலைவாய்ப்பு உள்ளதாகவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 ஆண்டுகள் முடித்த மாணவர்களுக்கு இளங்கலைப் பட்டச்சான்று வழங்குவது குறித்து அரசை அணுகி விரைவில் பதில் தெரிவிப்பதாக துணை வேந்தர் தெரிவித்ததை அடுத்த போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டனர்.

பணி வழங்க இயலாது-ஆசிரியர் தேர்வு வாரியம்:

         கடலூர் மாவட்டம் பூண்டியாங்குப்பம் கிராமத்தைச் மாணவி ஆர்.விஜி என்பவர் கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்த உதவி தொடக்கநிலை கல்வி அலுவலர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்காக, ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு (5 ஆண்டு) எம்.ஏ. வரலாறு பாடத்துடன் பி.எட். படித்தவர்களுக்கு முதுகலை ஆசிரியர் பணி வழங்கப்படுமா? பட்டதாரி ஆசிரியர் பணியிடம் வழங்கப்படுமா? என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மனு அனுப்பினார். 

        அதற்கு பொது தகவல் அதிகாரி பதில் தெரிவித்ததில், பணி வழங்க இயலாது என தெரிவித்துள்ளார்.  இதனால் ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு பயிலும் எங்களது எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என முற்போக்கு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர் கூட்டமைப்பு தலைவர் வினோத் வேதனை தெரிவித்தார்.














Read more »

கடலூர் மாவட்டத்தில் தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி

 http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/6b576a00-aa1b-42bb-927f-547ccadfd448_S_secvpf.gif
 
குறிஞ்சிப்பாடி:
 
          குறிஞ்சிப்பாடி வட்டம் பெரியகாட்டு சாகை தி.மு.க. செயலாளர் விவேகானந்தன் சகோதரர் பாலமுருகனுக்கும், வசனாங்குப்பம் கனகசெல்வராசு மகள் சுதா ஆகியோருக்கு, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஆயிரவைசியர் திருமண மண்டபத்தில் திருமணம் அண்மையில்  நடைபெற்றது.
 
        தே.மு.தி.க. அவைதலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பிரமுகர்கள் மணமக்களை வாழ்த்தி பேசினார்கள்.  
 
எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வாழ்த்தி பேசியது:-
 
         இந்த திருமணம் தே.மு.தி.க.வும், தி.மு.க.வும் சம்பந்தம் கொள்கிற திருமணம். மணமகள் தே.மு.தி.க. சட்டமன்ற துணைதலைவர், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனின் தாய் மாமன் பேத்தி ஆவார். மணமகன் தி.மு.க. கிளை கழக செயலாளர் விவேகானந்தன் சகோதரர் ஆவார். ஆகவே, கடலூர் மாவட்டத்தில் இன்றைய தினம் தே.மு.தி.க.வும், தி.மு.க.வும் இணைகிறது.
 
         இன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்கள் முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே சட்டசபை மரபை மீறி சஸ்பெண்டு செய்து தூக்கி வீசப்பட்டுள்ளார். இந்த அவையிலே கூடியிருக்கின்ற தாய்மார்களும், பெரியோர்களும், குறிஞ்சிப்பாடி தொகுதியை சேர்ந்தவர்கள். உங்கள் முகங்களை பார்க்கும்போது சட்டமன்ற தேர்தலில் நீங்கள் செய்த தவறை உணர்ந்து வருத்தப்படுவதாக தெரிகிறது. தர்மம் வெல்லும், என்னதான் தானே தாக்கியிருந்தாலும், நம்மை நாமே காத்துகொள்ளும் காலம் வெகு விரைவில் மலரும். இவ்வாறு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார்.
 
பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியது 
 
          தனக்கே உரிய பாணியில் அரசியலை தவிர்த்துவிட்டு, தனது உறவினர்களான மணமக்களை வாழ்த்தி மட்டும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
             மணவிழாவில் தி.மு.க. மாவட்ட அவைதலைவர் தங்கராசு, ஒன்றிய செயலாளர் சிவகுமார், மாவட்ட இலக்கிய அணி அகரம் நாராயணசாமி, நகர இளைஞரணி ராஜா, சின்னதானங்குப்பம் ஊராட்சி தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். குள்ளஞ்சாவடி தி.மு.க. செயலாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

முயல் பட பூஜை மற்றும் இசை குறுந்தகடு வெளியீட்டு விழா

 http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/b937c062-a0ac-4afb-908b-9a83cb5dd680_S_secvpf.gif
 
கடலூர்:
 
             சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் போட்டோ மற்றும் வீடியோ கிராபர்ஸின் பி அன்ட் வி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் முயல் பட பூஜை மற்றும் இசை குறுந்தகடு வெளியிட்டு விழா நடைபெற்றது.
 
          இதில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன் கலந்து கொண்டு இசை குறுந்தகடினை வெளியிட்டார். இதனை தொடர்ந்து பட பூஜை ஸ்டூடியோவில் நடந்தது. சிறப்பு விருந்தினராக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் செயலாளர் சிவா, தலைவர் ராமதுரை, சங்க மாநில தலைவர் மோகன்ராஜ், பொதுச்செயலாளர் பிரசன்னா, விநியோகஸ்தர்கள் சங்க செயலாளர் கலைப்புலி சேகரன், கலைமாமணி யோக ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.   இதில் கடலூரை சேர்ந்த முத்து கலர் லேப் உரிமையாளர் முத்து, சிவக்குமார், கணேஷ், பழனிகுமார், ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
          இப்படத்தில் கதாநாயகனாக புழல், கண்டுபிடி, கண்டுபிடி படத்தில் நடித்த முரளி, கதாநாயகியாக பேராண்மை படத்தில் நடித்த சரண்யா ஆகியோர் நடிக்க உள்ளனர். இவர்களுடன் ராஜ்குமார், பிரபு, ஷிவானி, ஐஸ்வர்யா, மீராகிருஷ்ணன், நெல்லை சிவா, முத்துக்காளை, ரஞ்சினி மற்றும் பலர் நடிக்கின்றனர். இதன் திரைக்கதை மற்றும் வசனம் எஸ்.பி.எஸ். குகன் மேற்கொள்கிறார்.
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior