உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, பிப்ரவரி 18, 2012

கடலூர் மாவட்டத்திற்கு களப்பணி பயிற்சிக்கு 39 எஸ்.ஐ.,க்கள் வருகை

கடலூர் :

        சென்னையில் பயிற்சி முடித்த 39 சப் இன்ஸ்பெக்டர்கள் களப்பணி பயிற்சிக்கு கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். 

         சென்னை ஊனமாஞ்சேரியில் உள்ள போலீஸ் அகாடமியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 1,061 சப் இன்ஸ்பெக்டர்கள் கடந்ததாண்டு பிப்ரவரி 1ம் தேதி முதல், கடந்த 16ம் தேதி வரை பயிற்சி முடித்தனர். பயிற்சி முடித்தவர்களில் 39 சப் இன்ஸ்பெக்டர்கள் களப்பணி பயிற்சி பெற கடலூர் மாவட்டத்திற்கு அனுப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பெண்கள் உட்பட 32 பேர் கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களிலும், 2 பெண்கள் உட்பட 7 பேர் ஆயுதப்படை பிரிவிலும் ஆறு மாதம் களப்பணி பயிற்சி பெற உள்ளனர்.
 
       அவர்கள் போலீஸ்காரர்களின் அன்றாட பணிகளான சம்மன் சர்வீஸ், கோர்ட்டுக்கு சம்மன் செய்வது, எஸ்கார்டு, நிலைய பொறுப்பு அதிகாரி உள்ளிட்ட பயிற்சிகளை பெறுவர். பயிற்சி முடித்த பின் சப் இன்ஸ்பெக்டர்களுக்கு முறையான பணி வழங்கப்படும்.














Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

விருத்தாசலம் : 

        விருத்தாசலம் அரசு கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதி கோரி வகுப்புகளை புறக்கணித்து ஆர்.டி.ஓ., விடம் மனு கொடுத்தனர். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வகுப்புகளை புறக்கணித்தனர். கல்லூரியில் இருந்து ஊர்வலமாகச் சென்ற மாணவ - மாணவிகள் கல்லூரியில் குடிநீர், கழிப்பிடவசதி செய்து தரக் கோரியும், மூடப்பட்டுள்ள நூலகத்தைத் திறக்கவும், லேப்டாப், கல்வி ஊக்கத் தொகை வழங்கக் கோரி இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளும் சென்று ஆர்.டி.ஓ., ஆனந்தகுமாரிடம் மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்.டி.ஓ., கூறியதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். 






Read more »

வெள்ளி, பிப்ரவரி 17, 2012

திட்டக்குடி அருகே கழுத்தை நெரித்து 8ம் வகுப்பு மாணவன் கொலை

 http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/ff064ba1-1793-4fe5-93bc-a865a3eeadb3_S_secvpf.gif
 
திட்டக்குடி:
 
       திட்டக்குடி அருகே உள்ள எழுத்தூர் காலனியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் சிவனேசன் (வயது 13). எழுத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். தந்தை அன்பழகன் சென்னை கோயம்பேட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். சிவனேசன் கடந்த 12-ந்தேதி காலை வீட்டை விட்டு வெளியேறினான். அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
 
       அன்று மாலை செல்வராசு என்பவரின் வீட்டில் சிவனேசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தான். இதையடுத்து சிவனேசனின் தந்தை அன்பழகன் ராமநத்தம் போலீசில் புகார் செய்தார். புகாரில் சிவனேசனை யாரோ கழுத்தை நெரித்து கொன்றிருக்கலாம் என சந்தேகப்படுவதாக கூறி இருந்தார். இதைத்தொடர்ந்து திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வனிதா மேற்பார்வையில் ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவரின் மகன் ராஜகுமார் (13) நான்தான் சிவனேசனை கழுத்தை நெரித்து கொன்றேன் என்று கூறி கிராம நிர்வாக அலுவலர் ராஜமாணிக்கத் திடம் சரண் அடைந்தான். சிவனேசனை, ராமநத்தம் போலீசில் ராஜமாணிக்கம் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து ராஜகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். 
 
விசாரணையில் சிவனேசனை கொன்றது ஏன் என்பது குறித்து அவன் கூறியது:- 
 
          நானும், சிவனேசனும் நண்பர்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊரில் சிலரது வீடுகளில் புகுந்து பித்தளை உள்ளிட்ட பாத்திரங்களை இருவரும் சேர்ந்து திருடினோம். திருடி வந்த பொருட்களை விற்று ஆடம்பராக செலவு செய்து வந்தோம். திருட்டு மூலம் பணம் அதிகளவில் புழங்கியதால் மது குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டோம். இந்த விஷயம் சிவனேசனின் தாய் அம்புஜத்துக்கு தெரியவந்ததால் அவர் என்னை அழைத்து கண்டித்தார். மேலும் இனிமேல் சிவனேசனை எங்கும் அழைத்து செல்லக்கூடாது, பழகக்கூடாது எனக்கூறி என்னை திட்டினார். அதுபோல் அன்றில் இருந்து என்னிடம் சிவனேசன் பேசுவதில்லை.   இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
 
          சில நாட்களுக்கு முன்பு சிவனேசனை எங்கள் ஊர் பள்ளிக்கூடத்துக்கு பின்புறம் அழைத்து சென்றேன். அங்கு அவனை கட்டி வைத்து வாயில் துணியை திணித்து அடித்து உதைத்தேன். மேலும் தொடர்ந்து என்னிடம் பழக வேண்டும் என்று சிவனேசனை மிரட்டினேன். இதனை அறிந்த சிவனேசனின் உறவினர்கள் விரைந்து வந்து அவனை மீட்டு சென்றனர். ஆனாலும் சிவனேசன் என்னுடன் பேசுவதை தவிர்த்து வந்தான். கடந்த 12-ந்தேதி சிவனேசன் எழுத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள சிறிய பாலத்தில் தனியாக அமர்ந்து இருந்தான். அப்போது அவனிடம் மது வாங்கி குடிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறினேன். இதற்கு சிவனேசன் சம்மதித்தான். இதைத்தொடர்ந்து நான் வைத்திருந்த ரூ.200ஐ சிவனேசனிடம் கொடுத்து மதுவாங்கி வரும்படி கூறினேன்.
 
           சிவனேசன் மதுபாட்டில் வாங்கி வந்தான். இருவரும் சேர்ந்து மது குடித்தோம். அப்போது எங்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டது.   திருட்டு தொழிலுக்கு என்னுடன் தொடர்ந்து வர வேண்டும் என்று சிவனேசனிடம் கூறினேன். அப்படி வரமறுத்தால் முன்னர் எங்கெங்கு திருடினோம் என்பதை போலீசாரிடம் கூறி விடுவேன் என்று மிரட்டினேன். ஆனாலும் சிவனேசன் இதற்கு பயப்படவில்லை. இனிமேல் திருட வரமாட்டேன் என்று சிவனேசன் தொடர்ந்து கூறினான். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவனை கன்னத்தில் ஓங்கி அறைந்தேன். இதில் சிவனேசன் மயங்கி விழுந்து விட்டான். உடனே அவனை செல்வராசு என்பவரது வீட்டுக்கு தூக்கி சென்றேன். அங்கு சிவனேசனை கழுத்தை நெரித்து கொன்றேன்.
 
             பின்னர் கழுத்தில் சேலையால் தூக்கு மாட்டி விட்டு விட்டத்தில் தொங்கவிட முயன்றேன். அதற்குள் செல்வராசுவின் மகன் வெண்மணிராஜா வரவே உடலை அங்கேயே போட்டு விட்டு ஓடிவிட்டேன். போலீசார் இந்த சம்பவத்தில் தீவிரமாக துப்பு துலக்கி வந்ததால் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்துவிட்டேன். இவ்வாறு ராஜகுமார் வாக்குமூலத்தில் கூறினான். அவனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior