உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 20, 2012

"இக்னைட் 2012' போட்டி: பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு

கடலூர்:

தேசிய புத்தாக்கத் திறன் நிறுவனம் நடத்தும் தொழில் நுட்ப யோசனைகளுக்கான போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ள பள்ளி மாணவர்கள் தங்கள் படைப்புகளை வரும் 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:


மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சியுடன் செயல்படும் அகமதாபாத் தேசிய புத்தாக்கத் திறன் நிறுவனம், பள்ளி மாணவர்களின் சுயமான தொழில் நுட்ப யோசனைகளுக்கான போட்டியை நடத்துகிறது.


இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் பிளஸ் 2 வரை படிக்கும் பள்ளி மாணவர்கள் தங்கள் படைப்புகளை வரும் 31ம் தேதிக்குள்

தேசிய புத்தாக்க நிறுவனம்,
 ஸ்டேட்டி லைட் காம்ப்ளக்ஸ்,
அகமதாபாத்-380 015.
குஜராத் மாநிலம்

      என்ற முகவரிக்குஅனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பத்தில் வயது, பயிலும் வகுப்பு, பள்ளியின் பெயர் மற்றும் முகவரி, வீட்டு முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும். போட்டி முடிவுகள் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாளான அக்டோபர் 15ம் தேதி வெளியிடப்படும். விருதுகள் பின்னர் வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.




Read more »

சனி, ஆகஸ்ட் 18, 2012

வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடம் செல்போன் பறிமுதல்:

கடலூர்:


வண்டிப்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் அலைபேசிகளை பறிமுதல் செய்ததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மின் விளக்குகளை உடைத்து சேதப்படுத்தினர். கடலூர், வண்டிப்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 595 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். மாணவர்கள் பள்ளிக்கு அலைபேசி கொண்டு வருவதை தடுக்கவும்,மாணவர்களின் நடவடிக்கையை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தலைமையாசிரியர் தலைமையில் 10 பேர் கொண்ட ஓழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. இத்தகவலை தலைமையாசிரியர் சுந்தரமூர்த்தி
      
          நேற்று காலை இறை வணக்கத்தின் போது அறிவித்தார்.அதனைத் தொடர்ந்து ஒழுங்கு  நடவடிக்கை குழுவினர், மாணவர்கள் அலைபேசி வைத்துள்ளார்களா என சோதனை செய்து இரண்டு மாணவர்களிடம் அலைபேசிகளை பறிமுதல் செய்தனர். சற்று நேரத்தில் மாணவர்கள் சிலர் பள்ளி வளாகத்தில் இருந்த இரண்டு சோடியம் விளக்குகளை  கல்வீசி உடைத்தனர். உதவி தலைமையாசிரியர் கோமதி கொடுத்த தகவலின் பேரில், முதுநகர் சப் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் பள்ளியில் விசாரணை  நடத்தினர்.

அப்போது ஆசிரியர்கள் கூறுகையில்,


மாணவர்கள் தொடர்ந்து அராஜகப் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். கண்டிக்கும் ஆசிரியர்களுக்கு மிரட்டல்  விடுக்கின்றனர். வகுப்பறையில் உள்ள கரும்பலகையில் கட்சி பெயர், கட்சி  தலைவர்களின் பெயர்களை எழுதி வைக்கின்றனர் என புகார் கூறினர். மாணவர்களோ, ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு சரியாக வருவதில்லை, பாடம் நடத்துவதில்லை என்றனர்.


சரியும் மாணவர் சதவீதம்

வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நான்கு  ஆண்டிற்கு முன் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்தனர். மாணவர்களில் ஒரு தரப்பினர் தொடர்ந்து ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதால் பல மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாறிவிட்டனர். இதனால் தற்போது இப்பள்ளியில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 595 ஆக குறைந்துள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் இப்பள்ளி மீது தனிக்கவனம் செலுத்தி அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை  எடுக்க முன் வர வேண்டும்.

...

Read more »

செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012

கடலூரில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 வினாத்தாள் வெளியானது: ஆர்.டி.ஓ. விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கடலூர்:

  டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 எழுத்துத் தேர்வு வினாத்தாள் கடலூரில் வெளியானது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 எழுத்து தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. தமிழகத்தில் சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் இத்தேர்வை எழுதினர்.

          ஈரோடு, தருமபுரி ஆகிய பகுதிகளில் கேள்வித்தாள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் கடலூரிலும் கேள்வித்தாள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி ஆகிய பகுதியில் 49 தேர்வு மையங்களில் 29 ஆயிரத்து 52 பேர் தேர்வு எழுதினர்.


       கடலூர் புனித வளனார் கல்லூரி தேர்வு மையத்தில், நெல்லிக்குப்பம் வாழப்பட்டு கம்பன் நகரைச் சேர்ந்த ராஜாகண்ணு என்பவர் தேர்வு எழுதினார்.
 தேர்வு எழுதி முடிந்ததும் வெளியே வந்த அவர் ஆட்சியர் அலுவலகம் எதிரே மஞ்சக்குப்பம் மைதானத்தின் வழியாக நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது டி.என்.பி.எஸ்.சி. குரூப் தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாள் போன்று கையால் எழுதப்பட்ட 15 பக்கங்கள் கொண்ட ஜெராக்ஸ் நகல் கிடந்ததை பார்த்து எடுத்தார். அதில் அனைத்து கேள்விகளுக்கும் உரிய பதில்கள் சரியாக குறிப்பிட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.


இதுகுறித்து ராஜாகண்ணு கூறியது:


       எம்.காம். பட்டதாரியான நான் டி.என்.பி.எஸ்.சி. தேர்வை 2-வது முறையாக எழுதுகிறேன். மஞ்சக்குப்பம் மைதானத்தில் விடைகள் அடங்கிய வினாத்தாளை கண்டெடுத்தேன். இதை வைத்து தேர்வு எழுதியவர்கள் எளிதில் தேர்ச்சிப் பெற்று வேலைக்குச் சென்று விடுவார்கள். ஆனால் என்னைபோன்று கஷ்டப்பட்டு படித்து தேர்வு எழுதியவர்களுக்கு அரசு வேலை கிடைக்காமல் போய்விடும். முறைகேடு நடந்துள்ள இந்த தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றார்.


         கடலூரில் கேள்வித்தாள் வெளியானது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, விசாரணை முடிந்தால்தான் உண்மை நிலை தெரியும் என்றார் ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ.








Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior