நெய்வேலி,  நவ. 19:
வெகு தொலைவில் இருந்து நெய்வேலியில் உள்ள பள்ளிகளுக்கு வேன் மூலம் வரும் இளம் சிறார்கள் சொல்லி மாளாத் துயரத்துக்கு ஆளாகின்றனர். கடலூர் மாவட்டத்தில் நெய்வேலியில் உள்ள சில பள்ளிகள் சிறந்து விளங்குவதால் அப்பள்ளிகளில் நெய்வேலியைச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் படித்துவருகின்றனர். இவர்கள் பலர் தனியார் வேன் மூலமே வருவதால் 35-க்கும் மேற்பட்ட வேன்கள் தினந்தோறும் நெய்வேலி வந்து செல்கின்றன. மேலும் பல மாணவர்கள் பஸ்கள் மூலம் வந்து செல்கின்றனர். இந்த வேன்களில் குறைந்தபட்சம் 25 மாணவர்கள் முதல் 30 மாணவர்கள் வரை திணிக்கப்பட்டு அழைத்து வரப்படுகின்றனர். இவர்களின் புத்தகப் பைகள் வேனில் இடமில்லாமல் சரக்கு மூட்டைகள் போல் வேனின் கூரையில் அடுக்கி வைக்கப்பட்டு கொண்டு வரப்படுகின்றன. பள்ளி வந்தவுடன் மாணவர்கள் அவசர அவசரமாக இறக்கப்பட்டு,அவர்களின் புத்தகப் பைகளும் தூக்கி வீசப்படுவது வாடிக்கையாகி வருகிறது. மாணவர்கள் வீட்டிலிருந்து கிளம்பும் போது அவசரமாக புறப்பட்டு, வேன்களில் போதிய இடமில்லாமல்,ஒருவர் மீது ஒருவர் அமர்ந்துகொண்டு பள்ளிக்கு வருகின்றனர். இதனால் அவர்களுக்கு கவனச் சிதறல் ஏற்படுகிறது.  பெற்றோர்களும் பிள்ளைகளை கிளப்பிவிட்டால் போதும் என்ற மனோபாவத்துடன் செயல்படுவதால் பிள்ளைகள் பள்ளிக்கு குறித்த நேரத்தில் சென்றார்களா என்பதைக் கூட அவர்கள் உறுதி செய்து கொள்வது கிடையாது  மற்றொரு பிரச்னையையும் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளாதது பெரும் ஆச்சரியம் அளிக்கக்கூடியதாக உள்ளது. தங்கள் பிள்ளைகளை ஏற்றிச் செல்லும் வாகனத்துக்கு முறையான ஓட்டுநர் இருக்கிறாரா, வேனுக்குரிய ஆவணங்கள் உள்ளதா என்பதைப் பற்றியெல்லாம் விசாரிக்காமலேயே பிள்ளைகளை அனுப்பிவிடுகின்றனர். வேன் ஓட்டுநரும், தனது வருமானத்தை மனதில் கொண்டு, கணக்கிலடங்கா மாணவ, மாணவியர்களை ஏற்றிக்கொண்டு, வேகமாக வேனை ஓட்டிச் செல்வதன் விளைவு, விபத்தில் முடிவடைகிறது. அண்மையில் விருத்தாசலத்தில் இருந்து மாணவர்களை ஏற்றிவந்த வேன் மந்தாரக்குப்பம் அருகே கவிழ்ந்ததில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.  மாணவர்கள் குறித்த நேரத்தில் வீட்டிலிருந்து கிளம்பியும், வேன் ஓட்டுநர்கள் தாமதத்தால், குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு வந்து சேரமுடியாமல்  பள்ளி நிர்வாகத்தின் தண்டனைக்கு ஆளாக நேரிடுகிறது. தங்கள் பிள்ளைகள் சிறந்த பள்ளிக்கு சென்று வந்துவிட்டால் போதும். அவன் தானாகவே படித்துவிடுவான் என்ற மனோபாவம் பெரும்பாலான பெற்றோர்களிடம் நிலவுகிறது. இந்த விபரீத மனோபாவம் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாழாக்கிவிடும் என்பதை ஏனோ பெற்றோர்கள் உணருவதில்லை. பெற்றோர்கள் முடிந்தவரையில் சிறார்களை தங்கள் குடியிருப்புகளுக்கு அருகாமையில் உள்ள கல்வி நிறுவனங்களில் பயிலச் செய்து அவர்கள் ஓரளவு வளந்த பின்னர் அவர்களை சற்று தூரத்தில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்புவது மாணவர்களின் எதிர்காலத்துக்கு சிறந்ததாக அமையும்.
சிந்திப்பார்களா பெற்றோர்கள்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக