விருத்தாசலம் :
                   பழையபட்டினம் கிராமத்தில் பிரச்னைக்குரிய இடத்தில் இருந்த அம்பேத்கர் சிலையை, அதிகாரிகள் நள்ளிரவில் வேறு இடத்தில் மாற்றினர்.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பழையபட்டினம் கிராமத்தில் நூலகம் அருகில் அரசு அனுமதியின்றி அம்பேத்கர் சிலை கடந்த ஆண்டு நிறுவப்பட்டது.  இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் இருந்ததால் இரு தரப்பினர் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. 
                  வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூக தீர்வு ஏற்படவில்லை. கடந்த 25ம் தேதி வெண்மணி தியாகிகள் தினத்தன்று தடையை மீறி சிலைக்கு மாலை அணிவிக்க முயன்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். அப்போது சிலையை வேறு இடத்தில் மாற்றி நிறுவப்படும் என அதிகாரிகள்  உறுதியளித்தனர்.  இதை அறிந்த ஒரு தரப்பினர், சிலையை வேறு இடத்திற்கு மாற்ற தடை விதிக்கக்கோரி ஐகோர்ட் டில் மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வருவாய் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அம்பேத்கர் சிலையை எடுத்து, அதே பகுதியில் வேறு இடத்தில் நிறுவினர். பிரச்னை ஏற்படாமல் இருக்க கூடுதல் எஸ்.பி., சக்திவேல், டி.எஸ்.பி.,கள் ராஜசேகரன், இளங் கோவன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக