பண்ருட்டி : 
          பண்ருட்டி பஸ் நிலையத்தில் கடை உரிமையாளரை  தரக்குறைவாக பேசிய நகராட்சி ஊழியரைக் கண்டித்து வியாபாரிகள் நேற்று கடையடைப்பு செய்தனர். பண்ருட்டி பஸ் நிலைய நகராட்சி கட்டடத்தில் வாடகைக்கு கடை நடத்தி வருபவர்கள் குணசேகரன், ராஜா. இவர்களது  கடைகளில் துப்புரவு பணியாளர் கள் இருவர்  கடை முன் ஆக்கிரமிப்பு செய்தது குறித்து கடை உரிமையாளரை  தரக்குறைவாக பேசியதுடன்  கொலைமிரட்டல் விடுத்தனர். இதனை கண்டித்து நேற்று பிற்பகல் 3 மணிக்கு பஸ்நிலைய பகுதி கடை உரிமையாளர்கள் 100 பேர் தீடீரென  கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
 
                    இதுகுறித்து மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் சண்முகம்,  அதிகாரிகளுடன்  பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் 4.30 மணிவரை நகராட்சி கமிஷனர் வராததால் வியாபாரிகள் பஸ்நிலையம் முன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு வந்த  இன்ஸ் பெக் டர் செல்வம்,  நகராட்சி கமிஷனர் உமாமகேஸ்வரி வியாபாரிகளை பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர்.  அதில் வியாபாரிகள் குறிப்பிட்ட இடத்திற்கு மேல் ஆக்கிரமிப்புகள் செய்யக்கூடாது எனவும், தரக்குறைவாக பேசிய நகராட்சி ஊழியர் ள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார சீர்கேடுகள் விரைவில் சீரமைப்பதாக கமிஷனர் உமாமகேஸ்வரி உறுதி கூறினார்.  இதனையடுத்து கடையடைப்பு போராட்டத்தை வியாபாரிகள் கை விட்டு 5.30க்கு கடையை திறந்தனர்.
 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக