சிதம்பரம்:
                     கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆறு, ஏரிகளை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என காட்டுமன்னார்கோவிலில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாய சங்க 10-வது மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாவட்டத் தலைவர் கே.எஸ்.செல்வராசு தலைமை வகித்தார். விவசாய சங்க வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் எம்.ஜி.ராமச்சந்திரன் படித்தார். தமிழ்நாடு விவசாய சங்க மாநிலக் குழு உறுப்பினர் பி.எஸ்.மாசிலாமணி சிறப்புரையாற்றினார்.
                 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் டி.மணிவாசகம், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரையாற்றினர். மாநாட்டில் புதிய மாவட்டக்குழு உறுப்பினர்கள் 23 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதன் பின்னர் தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. 
தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள்: 
             மாவட்டத் தலைவர்- ரங்கசாமி  சிறப்புத்தலைவர்- எம்.ஜி.ராமச்சந்திரன்  செயலாளர்-வி.எம்.சேகர்  பொருளாளர்- எஸ்.பி.கோவிந்தசாமி.
தீர் மானங்கள்: 
downlaod this page as pdf