பண்ருட்டி: 
            முன்விரோதம் காரணமாக வாலிபரைத் தாக்கிய 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
             பண்ருட்டி அடுத்த வல்லம் கிராமத்தில் கடந்த மே 22ம் தேதி நடந்த வாலிபால் போட்டி நிறைவு விழாவில் இதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் பரிசு வழங்கினார். அப்போது  ஊராட்சி  தலைவர் எழுமலையின் ஆதரவாளர் வெற்றிச்செல்வன் அவரை கிண்டல் செய்தார். இதனால் கார்த்திகேயன் ஆதரவாளர்களுக்கும், ஊராட்சி தலைவர் எழுமலையின் ஆதரவாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருதரப்பு புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார்  பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து சமாதானமாகச் சென்றனர்.
                   இந்நிலையில் கடந்த மாதம் 30ம்தேதி மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் இரு தரப்பிலும் 35 பேர் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.  நேற்றுமுன்தினம் இரவு  கார்த்திகேயன் ஆதரவாளர்கள் ஊராட்சி தலைவர் எழுமலை வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர் இல்லாததால் வெற்றிச்செல்வனை (29) தாக்கினர். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வெற்றிச்செல்வன் கொடுத்த புகாரின்பேரில் முருகன், கார்த்திகேயன், ஆடலரசன், விவேக்,  பூவராகமூர்த்தி, ராஜன் உட்பட 15 பேர் மீது கொலை மிரட் டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர். 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக