பண்ருட்டி : 
          அண்ணாகிராமத்திற்கு மட்டும் வறட்சி நிதி கிடைக்கவில்லை என ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில் துணை சேர்மன் பேசினார்.
 
              அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களின் இயல்புகூட்டம்  நடந்தது. சேர்மன் கவுரி தலைமை தாங்கினார்.  பி.டி.ஓ.,க்கள் தமிழரசி, மனோகரன், ஒன்றிய துணை சேர்மன் சம்மந்தம் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: 
அன்பழகன் (அ.தி.மு.க.,):
             ஒவ்வொரு ஊராட்சிக்கும் அமரர் ஊர்தி வண்டி வழங்குவது கிடப்பில் உள்ளது.
 
பி.டி.ஓ., மனோகரன்: 
             42 ஊராட்சிக்கும் வண்டி வாங்குவதற்கு ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது. முடிந்தவுடன் அனுமதி பெற்று வாங் கப்படும்.
 
வீரமணி (அ.தி.மு.க.,): 
            பூண்டி ஏரிப் பகுதியில் இருந்து கள்ளிப் பட்டு குச்சிப்பாளையம் வரையிலான சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலை சீரமைக்கப்படாமல் அப்படியே உள்ளது.
 
துணை சேர்மன் சம்மந்தம்: 
              மாவட்டத்தில் எல்லா ஒன்றியத்திற்கும் வறட்சி நிதி உள்ளது. ஆனால் அண்ணாகிராம ஒன்றியத்திற்கு மட்டும்  நிதி கிடைக்கவில்லை. கூட்ட அரங்கில் மைக் வசதி ஏற்படுத்தித்  தரவேண்டும்.
 
சிவகாமி (அ.தி.மு.க.,): 
            ஏ.பி.குப்பம் பகுதியில் குடிநீர் போர் வெல் இல்லாமல் குடிநீருக்கு பொதுமக்கள் அல்லாடி வருகின்றனர்.
 
பி.டி.ஓ., தமிழரசி: 
                 போர்வெல் போட பணிகள் துவங்கப்பட உள்ளது. இவ்வாறு கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதம் நடந்தது. கூட்டத்தில் வேளாண்மை அலுவலர் சந்திராசு, தோட்டக்கலை உதவி அலுவலர் ராமசந்திரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக