கடலூர் : 
               உபகரணங்கள் வழங்குவதற்காக மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
  கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
                கடலூர் மாவட்டத்தில் எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குறிஞ்சிப்பாடி, மங்களூர் மற்றும் திட்டக்குடி ஆகிய சட்டசபை தொகுதிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு கருவிகள் மற்றும் உபகரணங்கள் வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, மடக்கு வசதி சக்கர நாற்காலிகள், நடை உபகரணங்கள் (ஊன்று கோல்), பிளாஸ்டிக் மற்றும் உலோகத்தால் ஆன ஊன்றுகோல், விபத்து அல்லது நோயினால் பாதிக்கப்பட்டு கை, கால் இழந்தவர்களுக்கு செயற்கை கால், மடக்கு ஊன்றுகோல், ஆண், பெண் இருபாலருக்கும் பிரெய்லி கை கடிகாரம், பேசும் மின்னணு கடிகாரம், காதுகேளாதோருக்கு காதொலிக்கருவிகள் மற்றும் எல்க்ட்ரிக் ரீசார்ச் பேட்டரிகள் வழங்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்கள் 
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம்,
எண். 37, ராமதாஸ் தெரு,
புதுப்பாளையம்,
கடலூர்
என்ற முகவரியில் வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தில் மாற்றுத் திறனாளியின் தேசிய அடையாள அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகலை 1ம் தேதிக்குள் இணைத்து ஒப்படைக்க வேண்டும். மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி போன்ற உபகரணங்களை மூன்று ஆண்டுகளுக்கு முன் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். எனவே, மாற்றுத் திறனாளிகள் இடைத் தரகரிடம் அணுகாமல் உரிய அலுவலகத்தை அணுக வேண்டும். அடையாள அட்டை இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக