கடலூர் : 
          நாளை (30ம் தேதி) நடக்கும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வில் கடலூர் மாவட்டத்தில் 20,038 பேர் எழுதுகின்றனர்.
இது குறித்து டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 
              தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், (டி.என்.பி.எஸ்.சி.) உதவி பிரிவு  அலுவலர், கருவூல கணக்கர், ஊரக வளர்ச்சி உதவியாளர், உதவி வணிக வரி அலுவலர்,  தொழிலாளர் நல ஆய்வாளர், சார் பதிவாளர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட 6,695  காலி பணியிடங்களுக்கான தேர்வை சென்னை உட்பட 104 தேர்வு மையங்களில்  நடத்துகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் நாளை (30ம் தேதி) நடக்கும்  குரூப் 2 தேர்வில் கடலூர், சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம் ஆகிய  மையங்களில் 30 பள்ளி மற்றும் கல்லூரிகளில் 20,038 பேர் தேர்வு எழுத  உள்ளனர்.
               தேர்வர்கள் அச்சமின்றி தேர்வு எழுத அனைத்து மையங்களுக்கும் போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் மின்சாரம்  தடையின்றி வினியோகம் செய்வதற்கும், தேர்வுக் கூடங்களுக்கு எளிதில் சென்றடைய  சிறப்பு பஸ் வசதியும் செய்யப்பட்டுள்ளன. தேர்வுக் கூடங்களில் முறைகேடு  நடப்பதை தடுக்க ஒன்பது நபர்கள் அடங்கிய நான்கு பறக்கும் படைகள் அமைத்து  கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு  கிடைக்கப்பெறாதவர்கள் நகல் நுழைவுச் சீட்டினை பெற கலெக்டர் அலுவலகத்தில்  உள்ள "எம்' பிரிவினை போதிய ஆதாரங்களுடன் அனுகவும். இவ்வாறு  செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக