கடலூர்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் வருகிற 30-ந் தேதி டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடத்தப்பட உள்ளது.
              இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள் விடை  பண்ருட்டி அருகே பத்திரக்கோட்டை, கிருஷ்ணங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு  இடங்களில் ரூ.5 லட்சத்துக்கு ரகசியமாக விற்க்கப்படுவதாக தகவல் பரவியது.  முன்  பணமாக ரூ.2 லட்சம் பெற்றுக் கொண்டு கேள்வித்தாளில் அடங்கிய 200  கேள்விகளில் 190-க்கு பதில் தரப்படுவதாகவும் அதிர்ச்சி தகவல் பரவியது. இந்த  விடைத்தாளை பெற கடலூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் பலர்  முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.   
 
இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன்  கூறியது:
          டி.என்.பி.எஸ்.சி.  வினாத்தாள் விடை அவுட் ஆனது குறித்து எந்த புகாரும் வரவில்லை. எனினும்  கலெக்டர் அமுதவல்லி உத்தரவின் பேரில் இன்று விசாரணை நடத்தி வருகிறோம்.  இவ்வாறு அவர் கூறினார். 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக