விருத்தாசலம் : 
             விருத்தாசலம் பீங்கான் தொழில் நுட்பக் கல்லூரியில் கூடுதலாக  பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என முத்துகுமார் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர்  தொழில் வணிகத்துறை ஆணையர் மற்றும் இயக்குனர் அபூர்வவர்மா ஆகியோருக்கு  அனுப்பியுள்ள மனு:
               விருத்தாசலத்தில் அமைந்துள்ள அரசு பீங்கான் தொழில்நுட்பக்  கல்லூரி போதுமான அடிப்படை வசதி இல்லாமல் உள்ளது. இந்தக் கல்லூரியை  நவீனப்படுத்தி பேராசிரியர்கள் மற்றும் அனைத்து அலுவலர்களின் காலி  பணியிடத்தை பூர்த்தி செய்தும், புதிய கட்டிடம், விடுதி அமைத்துத்  தரவேண்டும் எனவும் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தேன்.அதன்படி புதிய மாணவர்  விடுதி கட்ட ரூபாய் 64 லட்சம் ரூபாய், கல்லூரியில் சுற்றுச் சுவர் அமைக்க  ரூபாய் 5 லட்சம் ரூபாய் தேவை எனவும், மாணவர்கள் அறை, ஆய்வகம், கழிப்பறை  சீரமைக்க பட வேண்டும். நான்கு விரிவுரையாளர்கள் நியமிக்க வேண்டும்.  அலுவலகம் தொடர்பான பணிகள் செய்ய கணக்கர், மேலாளர், இளநிலை உதவியாளர்  நியமிக்கப்பட வேண்டும் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
              இந்த  பணிகளுக்குத் தேவையான கருத்துரு கல்லூரி முதல்வரால் சென்னை தொழில் வணிகத்  துறை இணை இயக்குனருக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் விருத்தாசலத்தில்  மட்டும் இக்கல்லூரி இயங்கி வருவதால், இக்கல்லூரியை நவீனப்படுத்த வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக