கடலூர்:
        மாணவ, மாணவிகளுக்கு பழைய தபால் தலைகள் அன்பளிப்பாக  வழங்கப்படுகிறது.
             தேசிய அஞ்சலக வார விழாவையொட்டி கடலூர் மாவட்ட பாரதிதாசன்  இலக்கிய மன்றம் சார்பில் தபால் தலைகள் சேகரிக்கும் ஆர்வமுள்ள 30 மாணவ,  மாணவிகளுக்கு உபயோகித்த பழைய தபால் தலைகள், உள் நாட்டு கடிதங்கள்,  விதவிதமான அஞ்சல் அட்டைகள் ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்படுகிறது.
ஆர்வமுள்ள  மாணவ, மாணவிகள் 50 பைசா அஞ்சல் அட்டையில் 
தங்களின் பெயர், 
படிக்கும்  வகுப்பு, 
மொபைல் எண், 
வீட்டு முகவரி
        உள்ளிட்ட விவரங்களை 
மாவட்ட பாரதிதாசன்  நற்பணி மன்றம், 
எண் 41, காமராஜர் நகர்,
ஆல்பேட்டை, 
கடலூர் 
                   என்ற முகவரிக்கு  நாளை (18ம் தேதி) க்குள் அனுப்ப வேண்டும். இத்தகவலை பாரதிதாசன் மன்றத்  தலைவர் கடல் நாகராசன் தெரிவித்துள்ளார். 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக