விருத்தாசலம்:
            புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 60 லட்சம்  மரக்கன்றுகள் தேவை என வேளாண்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்தார்.  விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் முந்திரி, பலா, நெல் உள்ளிட்ட  பயிர்கள் பாதிப்பு சேத மதிப்பை அறியவும், புதிய நடவு குறித்தும் ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. டில்லி வேளாண் விரிவாக்க பொது துணை இயக்குநர் கோகடே தலைமை வகித்தார்.  விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார். 
இதில்,  தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் முருகேசபூபதி தெரிவித்தது:  
            புயலால் கடலூர் மாவட்டத்தில் முந்திரி, பலா, தென்னை உள்ளிட்ட மரங்கள் பலத்த  சேதமடைந்துள்ளது. இவைகளைக் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இதன்பிறகு விவசாயிகள்  குறுகிய ரக பயிர் விளைவிப்பது குறித்து ஆய்வு செய்யப்படும். முந்திரி விவசாயம் 30  ஆயிரம் ஹெக்டேர் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் முந்திரி கன்றுகளை நடவு  செய்ய 60 லட்சம் கன்றுகள் தேவை. இதற்குக் குறுகிய கால பயிரான வி.ஆர்.ஐ. 3 ரக  முந்திரி கன்றுகளை விருத்தாசலம் ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்வது குறித்து  விஞ்ஞானிகளுடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும், 1 லட்சம் பலா கன்றுகளை பாலூர்  ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்வது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது  என்றார்.  பேராசிரியர் கலைச்செல்வன், ஜெயராஜ், ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக