கடலூர் :
       தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது.
 
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
 
        தமிழ்நாடு  ஆசிரியர் தேர்வு வாரியம் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி  ஆசிரியர், ஓவிய ஆசிரியர், தையல் ஆசிரியர், இசை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப  உள்ளது. மாநில உத்தேச பதிவு மூப்பு பட்டியல் மாவட்ட வேலைவாய்ப்பு  அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மனுதாரர்கள் தங்கள் விவரங்களை  சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பதிவு மூப்பில்  திருத்தம் அல்லது விடுபட்டு இருந்தால் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டை  மற்றும் அசல் கல்வி சான்றுகளுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தை 10.2.2012க்குள்  அணுக வேண்டும். 10ம் தேதிக்கு பின் வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது.  இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக