உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




இலவச வேட்டி சேலைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலவச வேட்டி சேலைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜனவரி 22, 2012

கடலூரில் பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலை விநியோகிக்கவில்லை

கடலூர்:
          தமிழக அரசால் பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலை இன்னமும் கடலூர் மாவட்டத்தில் வழங்கப்படவில்லை. அதுகுறித்து அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவும் இல்லை. இதனால்,பயனாளிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.  
            கடலூர் மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள், நிலம் இல்லாத விவசாயத் தொழிலாளிகள், முதியோர் உதவித் தொகை பெறுவோர் உள்ளிட்ட சுமார் 6 லட்சம் பேருக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டு வருகிறது.  ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு முன்னரே இவை வழங்கப்பட்டு விடும். ஆனால் கடலூர் மாவட்டத்தில் பொங்கலுக்கான இலவச வேட்டி, சேலை இன்னமும் வழங்கப்படவில்லை. அதுகுறித்து மாவட்ட நிர்வாகம் இதுவரை அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. 
          ஆனால் தேவையில் 50 சதவீத அளவுக்கு வேட்டி, சேலைகள் வந்து இருப்பதாகவே அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.  புயலில் வீடுகள் சேதம் அடைந்தவர்களுக்கு நிவாரணத் தொகையுடன் இலவச வேட்டி,சேலைக்கான டோக்கனும் வழங்கப்படுகிறது. இந்த டோக்கன்களை நியாயவிலைக் கடைகளில் கொடுத்து இலவச வேட்டி, சேலைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் இதுவரை புயல் சேதத்துக்கான நிவாரணமாக வழங்கப்படும் இலவச வேட்டி சேலைகள் கூட இன்னமும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திடம் இருந்து, நியாயவிலைக் கடைகளுக்கு வந்து சேரவில்லையாம்.  
              இந்நிலையில் முதியோர் உதவித் தொகை பெறுவோருக்கு மட்டும் பொங்கலுக்கான இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டு வருவதாக வருவாய்த் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  ஆனால் மற்றவர்களுக்கு பொங்கலுக்கு வழங்கப்படும் வேட்டி-சேலை குறித்து எந்தத் தகவலும் இல்லை என்கிறார்கள் அதிகாரிகள்.

Read more »

வியாழன், டிசம்பர் 23, 2010

கடலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 6.38 லட்சம் குடும்பங்களுக்கு இலவச வேட்டி சேலை

கடலூர்:

           கடலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 6 லட்சத்து 38 ஆயிரத்து 298 குடும்பங்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட உள்ளது.

           பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தமிழக அரசு இலவச வேட்டி, சேலைகள் வழங்கி வருகிறது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 6 லட்சத்து 38 ஆயிரத்து 39 பெண்களுக்கும், 6 லட்சத்து 38 ஆயிரத்து 298 ஆண்களுக்கும் இலவச வேட்டி சேலை வழங்கப்பட உள்ளது.
 
               கடலூர்  தாலுகாக்களில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 37 பெண்களுக்கும், 

        குறிஞ்சிப்பாடி தாலுகாவில்  ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 296 ஆண்களுக்கும், 

            பண்ருட்டி தாலுகாவில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 49 நபர்களுக்கும், 

           சிதம்பரம் தாலுகாவில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 435 நபர்களுக்கும், 

         காட்டுமன்னார்கோவிலில் 72 ஆயிரத்து 377 நபர்களுக்கும், 

          விருத்தாசலத்தில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 240 நபர்களுக்கும், 

            திட்டக்குடி தாலுகாவில் 72 ஆயிரத்து 951 நபர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட உள்ளது.

             இதற்கான வேட்டி, சேலைகள் கடலூர் கோ-ஆப்டெக்ஸ் மண்டல குடோனில் இருந்து அந்தந்த தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது தாலுகா அலு வலகங்களில் இருந்து கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

Read more »

செவ்வாய், டிசம்பர் 21, 2010

விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் அரசின் பொங்கல் இலவச வேட்டி சேலை தயார்

விருத்தாசலம் : 

             விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் இருந்து இலவச வேட்டி சேலைகள் அந்தந்தப் பகுதி வி.ஏ.ஓ., அலுவலகங்கள் மற்றும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையொட்டி ஆண்டுதோறும் ஏழை எளியோர்களுக்கு அரசு இலவச வேட்டி, சேலைகளை வழங்கி வருகிறது. 

            விருத்தாசலம் தாலுகாவிற்குட்பட்ட விருத்தாசலம், கம்மாபுரம், ஊமங்கலம், நல்லூர், வேப்பூர் உள்ளிட்ட வருவாய் கோட்டங்களுக்கான ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 240 வேட்டிகளும் அதே எண்ணிக்கையில் சேலைக ளும் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்திற்கு வந்துள்ளன. இவ்வேட்டி, சேலைகளை தாலுகா அலுவலத்தில் இருந்து கிராமப் பகுதிகளில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகங்கள் மற்றும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று தொடங்கியது. தாசில்தார் சரவணன் தலைமையில் துணை தாசில்தார் ராமமூர்த்தி, ராஜா, ஆர்.ஐ.,க்கள் ராஜ்குமார், செல்வி, கமலம் ஆகியோர் கணக்கீட்டின்படி அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior