விருத்தாசலம் : 
             விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் இருந்து இலவச வேட்டி  சேலைகள் அந்தந்தப் பகுதி வி.ஏ.ஓ., அலுவலகங்கள் மற்றும் ரேஷன் கடைகளுக்கு  அனுப்பி வைக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையொட்டி ஆண்டுதோறும் ஏழை  எளியோர்களுக்கு அரசு இலவச வேட்டி, சேலைகளை வழங்கி வருகிறது. 
            விருத்தாசலம்  தாலுகாவிற்குட்பட்ட விருத்தாசலம், கம்மாபுரம், ஊமங்கலம், நல்லூர், வேப்பூர்  உள்ளிட்ட வருவாய் கோட்டங்களுக்கான ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 240  வேட்டிகளும் அதே எண்ணிக்கையில் சேலைக ளும் விருத்தாசலம் தாலுகா  அலுவலகத்திற்கு வந்துள்ளன. இவ்வேட்டி, சேலைகளை தாலுகா அலுவலத்தில் இருந்து  கிராமப் பகுதிகளில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகங்கள் மற்றும் ரேஷன் கடைகளுக்கு  அனுப்பி வைக்கும் பணி நேற்று தொடங்கியது. தாசில்தார் சரவணன் தலைமையில் துணை  தாசில்தார் ராமமூர்த்தி, ராஜா, ஆர்.ஐ.,க்கள் ராஜ்குமார், செல்வி, கமலம்  ஆகியோர் கணக்கீட்டின்படி அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக