உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கடலூர் வெள்ளிக் கடற்கரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடலூர் வெள்ளிக் கடற்கரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மார்ச் 08, 2012

கடலூர் வெள்ளிக் கடற்கரையில் (சில்வர் பீச்) மாசி மகத் திருவிழா



மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு பல்வேறு கோயில்களில் இருந்து பல்லக்குகளில் கொண்டு வரப்பட்ட உற்சவ மூர்த்திகளுக்கு நடந
கடலூர்:
 
         கடலூரில் புதன்கிழமை மாசி மகம் திருவிழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் தேவனாம்பட்டினம் கடற்கரையில் திண்டனர்.  மாசி மாத பெளர்ணமியை முன்னிட்டு, மாசிமகம் திருவிழா ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. 
 
           கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் புதன்கிழமை காலை மாசி மகம் திருவிழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.  கடலூரை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கோயில்களில் இருந்து உற்சவர்களை அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் மேளதாளம் முழங்க தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு எடுத்து வந்தனர். அங்கு சாமி சிலைகளுக்கு தீர்த்தவாரியும் சிறப்பு அலங்காரம், பூஜைகளும் செய்யப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  விழாவை முன்னிட்டு கடற்கரையில் சிறு சிறு கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டு இருந்தன. மாசிமகம் பெüர்ணமியை முன்னிட்டு சில்வர் பீச்சில் ஏராளமானோர் தங்களின் மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் சிறப்பு பூஜைகளும் நடந்தன. 
 
            கடலூர் போலீஸ் துணை கண்காணிப்பாளர் வனிதா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாசி மகத்தை முன்னிட்டு திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், புதுப்பாளையம் ராஜகோபாலசாமி கோயில், வண்டிப்பாளையம் சுப்பிரமணியர் கோயில் உள்ளிட்ட நூற்றுக் கணக்கான கோயில்களில் இருந்து உற்சவர்கள் இன்று (வியாழக்கிழமை) தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு தீர்த்தவாரிக்காக எடுத்து வருகிறார்கள்.  மாசி மகம் தீர்த்தவாரிக்காக திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோயிலில் இருந்து உற்சவ மூர்த்தியின் பல்லக்கு ஊர்வலம் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. 40 க்கும் மேற்பட்டோர் பல்லக்கைத் தூக்கி வருகின்றனர். அங்காங்கே மண்டகப் படிகளில் தங்கி வரும் உலகளந்த பெருமாள், புதன்கிழமை திருவந்திபரத்தில் தங்கி உள்ளார். இன்று (வியாழக்கிழமை) தீர்த்தவாரிக்காக தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு பக்தர்கள் பலக்கில் தூக்கி வருகிறார்கள். 
 
             கடலூர் முதுநகர் உப்பனாற்றில் மாசிமகம் திருவிழா கோலாகலமாக இன்று இரவு 9 மணிக்கு நடக்கிறது. கடற்கரையோரக் கோயில்களில் இருந்து சாமி சிலைகளை மீனவர்கள் எடுத்து வந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட படகுகளில் வைத்து தீர்த்தவாரியும் சிறப்பு பூஜைகளும் செய்கிறார்கள். 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

கடலூர் வெள்ளிக் கடற்கரையில் (சில்வர் பீச்) தடுப்பு வேலி

கடலூர் : 

              கடலூர் சில்வர் பீச்சில் குளிப்பவர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழக்கும் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தடுப்பு வேலி அமைக்க வேண்டும்.

                கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் மாலை நேரத்தில் ஏராளமான பொது மக்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களில் வாலிபர்கள், சிறுவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் குளித்து மகிழ்வது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. சுனாமிக்குப்பிறகு கடல் அலையில் பெரிதும் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அடிக்கடி சீற்றம் ஏற்படுவதுடன் திடீரென அலையில் சிக்கியவர்களை உள்ளிழுக்கவும் செய்கிறது. இந்நிலையில் உள்ளூர் மக்கள் அல்லாமல் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் குளிப்பதற்காக கடலில் இறங்குகின்றனர். 

               ஆழமில்லை என கருதி கடலில் சிறிது தூரம் சென்று விடுகின்றனர். அப்போது நீச்சல் தெரியாதவர்கள் திடீரென வரும் அலையில் சிக்கி இறக்க நேரிடுகிறது. எங்கிருந்தோ வருபவர்களெல்லாம் முகவரி தெரியாமல் மடிந்து விடுகின்றனர். இதைத் தடுப்பதற்காக பரந்த கடற்கரையில் போலீசார் காவல் பணியில் காத்திருந்தும் பலனில்லை. இருப்பினும் ஏதாவது ஒரு மூளையில் இச்சம்பவம் நடந்து விடுகிறது. எனவே இதுபோன்ற உயிரிழப்பு சம்பவங்கள் நடக்காத வண்ணம் கடற்கரையில் குறிப்பிட்ட பகுதியில் தடுப்பு வேலி அமைத்து விட்டால் குளிப்பவர்களுக்கு இடையூறு இல்லாமலும், உயிரிழப்பு இல்லாமலும் தடுக்க முடியும். எனவே பல லட்ச ரூபாய் செலவில் சில்வர் பீச்சை அழகுபடுத்தும் அரசு தடுப்பு வேலி அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.







Read more »

சனி, ஜூலை 09, 2011

கடலூரில் 15 நாள்களாக மீன்பிடித் தொழில் முடக்கம்


மீன் பிடிக்கச் செல்லாததால் கடலூர் துறைமுகம் உப்பனாற்றில், முடங்கிக் கிடக்கும் விசைப் படகுகள்.
கடலூர்:

         டலூரில் கடந்த 15 தினங்களாக மீன்பிடித் தொழில் முடங்கிக் கிடக்கிறது.  70 கி.மீ. நீளம் உள்ள கடற்கரையைக் கொண்ட கடலூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 1 லட்சம் மக்கள், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். 

              இவர்களில் பலர் மிகப்பெரிய விசைப் படகுகளில், கூலிக்கு மீன்பிடித் தொழில் செய்பவர்கள். பலர் மீன் பதப்படுத்தும் தொழில் செய்வோர். 5 ஆயிரம் கண்ணாடி இழைப் படகுகளும், கட்டுமரங்களும் உள்ளன.  ÷டலூரில் நாளொன்றுக்கு 100 டன் மீன்கள் சர்வ சாதாரணமாகக் கிடைத்து வந்தது. ஆனால் கடலூர் கடற்கரையை, பன்னாட்டு ரசாயனத் தொழிற்சாலைகள் ஆக்கிரமிக்கத் தொடங்கிய பிறகும், சுனாமி கடற்சீற்றத்தைத் தொடர்ந்தும், கடலூர் மாவட்டத்தில் மீன் பிடித் தொழில் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.  

              ரூ. 25 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்ட எஃப்.டி.பி. படகு ஒன்றில், (கடலூரில் இத்தகைய படகுகள் 100 உள்ளன), ஆழ்கடலில் 6 தொழிலாளர்களுடன் 7 நாள்கள் தங்கி மீன்பிடிக்க, டீசல், ஆள்கூலி உள்ளிட்ட செலவினங்களுக்காக ரூ. 75 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை செலவாகிறது.  ÷இதில் குறைந்தபட்சம் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான மீன்கள் கிடைத்தால்தான் கட்டுபடியாகும்.  ஆனால் பல நேரங்களில் அவர்களுக்குச் செலவுத் தொகைக்கான மீன்கள்கூட கிடைப்பது இல்லை என்கிறார்கள் மீனர்கள்.  ÷கடலூரில் கடந்த 15 தினங்களாக மீன்பிடித் தொழில் பெரும்பாலும் முடங்கிக் கிடக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் கடலில் மீன்பிடிக்கச் சென்ற பல பெரிய விசைப் படகுகள், வெறுங்கையாகத் திரும்பின.  

              தொடர்ந்து ரூ. 75 ஆயிரம் செலவு செய்து, கடலுக்குள் சென்று நஷ்டம் அடைவதைவிட, தொழிலுக்குச் செல்லாமல் இருந்து விடுவதே மேல் என்ற எண்ணத்தில், பல படகுகள் கடந்த 15 தினங்களாக மீன்பிடிக்கச் செல்லாமல் உப்பனாற்றில் முடங்கிக் கிடக்கின்றன என்கிறார்கள் மீனவர்கள்.  ÷ஏனைய சிறிய விசைப் படகுகள், கண்ணாடி இழைப் படகுகள் மற்றும் கட்டுமரங்களின் நிலையும் இதுதான் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.  கடந்த 15 நாள்களாகவே வங்கக் கடலில் மாறிமாறி வரும் நீரோட்டம், மீன்பிடித் தொழிலுக்குச் சாதகமாக இல்லை என்றும் மீனவர்கள் கூறுகிறார்கள்.  

இது குறித்து மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் கூறியது: 

               கடலூர் கடலில் கடந்த 15 நாள்களாக மீன்கள் கிடைப்பது அரிதாகி விட்டது. பல படகுகள் பெரும் தொகையை செலவிட்டு கடலுக்குள் சென்று, மீன்கள் கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பும் நிலை நீடித்து வருகிறது.  வியாழக்கிழமை 10 சதவீதம் படகுகள் மட்டுமே மீன் பிடிக்கச் சென்றன. அவற்றிலும் சரியாக மீன்கள் கிடைக்க வில்லை. இதனால் மீன்பிடித் தொழிலில் கூலிகளாகப் பணிபுரிவோர் வறுமைக்குத் தள்ளப்படும் நிலை உருவாகி விட்டது. மாறி மாறிவரும் கடல் நீரோட்டத்தால் மீன்கள் கிடைக்க வில்லை.  

              பல ஆண்டுகளுக்கு முன், வங்கக் கடலில் எந்தெந்த இடங்களில், எவ்வளவு தூரத்தில் மீன்கள் அதிகம் கிடைக்கும், நீரோட்டம் சாதகமாக உள்ளதா? கடல் அலைகள் எந்த அளவுக்கு உள்ளன? என்றெல்லாம், மீன் வளத்துறை முன் அறிவிப்பு அளித்து வந்தது.  ஆனால் இந்தத் தகவல்கள் எல்லாம் தற்போது கிடைப்பது இல்லை. தனியார் பொதுநல அமைப்பு ஒன்று, இத்தகைய தகவல்களை சில ஆண்டுகள் தெரிவித்து வந்தன. அதுவும் தற்போது இல்லை என்றாகிவிட்டது.  

            மீனவர்கள் அவர்களின் அனுபவம் மற்றும் அனுமானத்தின் பேரில் கடலுக்குள் செல்வதும், மீன்கள் கிடைத்தால் லாபம் இல்லையெனில் நஷ்டம் என்ற சூதாட்டம் போன்ற நிலையில்தான் கடலூர் மாவட்ட மீனவர்களின் வாழ்க்கை உள்ளது.  பருவநிலை மாற்றங்களும், கடலில் கலக்கப்படும் ரசாயனத் தொழிற்சாலைகளின் கழிவுகளும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகிறது என்றார் சுப்புராயன்.  மீன்பிடித் தொழில் பாதிப்பு காரணமாக, கடலூரில் மீன்களின் விலை உயர்வு, மக்களின் வாங்கும் சக்திக்கு மீறியதாக மாறி விட்டது.  



 

Read more »

செவ்வாய், ஜூன் 28, 2011

கடலூர் வெள்ளிக் கடற்கரை (சில்வர் பீச்) ரூ.1 கோடியில் அழகுபடுத்த திட்டம்

கடலூர்:
 
            டலூர் சில்வர் பீச்சை அழகுபடுத்த ரூ. 1 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு சுற்றுலாத் துறையிடம் இருந்து நிதிபெற அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி திங்கள்கிழமை தெரிவித்தார்.  

கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி   கூறியது:  

              கடலூர் மாவட்டத்தில் அனைத்து துறைகளும் ஆய்வு செய்யப்பட்டு நடைமுறையில் உள்ள திட்டங்களை விரைவுப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் மக்களுக்கு விரைந்து கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.  

             கடலூர் ஜவான்ஸ் பவன்- கம்மியம்பேட்டை சாலைத் திட்டத்துக்கான தடையில்லாச் சான்று, பொதுப் பணித் துறையில் இருந்து, நெடுஞ்சாலைத் துறையால் பெறப்பட்டு உள்ளது. ரூ. 1.3 கோடியில் இச்சாலை விரைவில் போடப்படும்.  இத்திட்டத்துக்கு 3 நிதி ஆதாரங்களில் இருந்து நிதி பெற, முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 

                 வண்டிப்பாளையம் சாலை சரவணன் நகர் இணைப்புச் சாலை திட்டம், இறுதி ஒப்புதலுக்காக நகராட்சிகளின் ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  கல்விக் கட்டணம் தொடர்பாக அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்ய, முதன்மைக் கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. முதியோர் உதவித் தொகை கோரி அதிக அளவில், விண்ணப்பங்கள் வரத் தொடங்கி இருக்கின்றன.  இந்த விண்ணப்பங்களை 100 சதவீதம் ஆய்வு செய்ய, அரசு வழிகாட்டுதல் எதிர்பார்க்கப்படுகிறது.  

              கடலூர் சில்வர் பீச்சை அழகுபடுத்த ரூ. 1 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு சுற்றுலாத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிச்சாவரம் சுற்றுலா தலத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த திட்டம் தயாரித்து அனுப்பி இருக்கிறோம்.  கடலூர் பாதாளச் சாக்கடைத்தில் தோண்டப்படும் சாலைகள் சீரமைப்புப் பணிகள், வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குமுன் முடிக்கப்படும் என்றார் ஆட்சியர்.







Read more »

வெள்ளி, ஜூன் 17, 2011

கடலூர் வெள்ளிக் கடற்கரை (சில்வர் பீச்) வனப்பகுதியில் திடீர் தீ

கடலூர்:
 
            கடலூர் கடற்கரை வனப் பகுதியில் வியாழக்கிழமை திடீரென தீப்பற்றி பரவியது.  

            கடலூர் கடற்கரையில் தேவனாம்பட்டினம் முதல் அக்கரை கோரி வரை, வனத்துறைக்குச் சொந்தமான வனப்பகுதி உள்ளது. இங்கு சவுக்கு மரங்கள் அதிக அளவில் உள்ளன.  தேவனாம்பட்டினம் அருகில் உள்ள சவுக்குத் தோப்பில், வியாழக்கிழமை திடீரெனத் தீப்பற்றிக் கொண்டது. சவுக்கு மரங்களில் இருந்து உதிர்ந்து கிடக்கும் இலைகள், சருகுகளில் தீப்பற்றி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. 

              சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் உதிர்ந்து கிடக்கும் சருகுகளில் தீப்பற்றி, மரங்களுக்கும் பரவி வருகிறது.  சவுக்குத் தோப்புக்குள் தீயணைப்பு வண்டிகளும் செல்ல முடியவில்லை. எனவே வனத்துறை ஊழியர்கள், தோப்புக்குள் புகுந்து, கடற்கரை மணலைத் தூவி தீயணை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மற்ற பகுதிகளுக்கு தீ பரவாதவாறு தடுத்து நிறுத்தும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டனர்.



Read more »

திங்கள், ஜூன் 06, 2011

கடலூர் வெள்ளிக் கடற்கரைக்கு (சில்வர் பீச்) சுற்றுலா வந்த இளைஞர் கடலில் மூழ்கி சாவு

கடலூர்:

      கடலூர் சில்வர் பீச்சுக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வந்த இளைஞர், கடலில் மூழ்கி இறந்தார்.
 
        பெங்களூர் நாராயணபுரத்தைச் சேர்ந்த சேகரின் மகன் பாரத் (23). பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.பாரத்தும் அவரது நண்பர்கள் சிலரும், தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களுக்குச் சுற்றுலா சென்றனர். ஞாயிற்றுக்கிழமை கடலூர் வந்த அவர்கள், தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் குளிக்கச் சென்றனர். கடலில் குளித்துக் கொண்டு இருந்தபோது பாரத், அலைகளில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். உடன் வந்தவர்கள் முயன்றும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. சிறிது நேரத்தில் பாரத் உடல் கரை ஒதுங்கியது. சடலத்தை தேவனாம்பட்டினம் போலீசார் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior