உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூலை 23, 2012

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர்:

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவித் தொகை பெறுவதற்கான  விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து வேலைவாய்ப்பு அலுவலக செய்திக்குறிப்பு:

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மனுதாரர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை பெற எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி., பிளஸ் 2, பட்டப்படிப்பு  படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த ஜூன் 30 அன்று ஐந்து ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும்.


எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு 45 வயதும் மற்றவர்களுக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.  பதிவை தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் துறையில்பணிபுரிபவராக இருக்கக் கூடாது. ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் படித்துக்  கொண்டிருக்கக் கூடாது. அஞ்சல் வழிக் கல்வி அல்லது தொலைதூரக் கல்வி  பயில்வோர் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் 50 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் . மனுதாரர்கள்கல்விச் சான்றிதழ்களின் அசல் மற்றும் வேலைவாய்ப்பக அசல் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக  விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.  ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை. விண்ணப்பம் தினமும் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை வழங்கப்படுகிறது. இந்த காலாண்டுக்குரிய விண்ணப்பம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறுசெய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

புதன், பிப்ரவரி 08, 2012

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்ய முடிவு

கடலூர் :
 
       தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது.
 
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
 
 
        தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், தையல் ஆசிரியர், இசை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உள்ளது. மாநில உத்தேச பதிவு மூப்பு பட்டியல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மனுதாரர்கள் தங்கள் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பதிவு மூப்பில் திருத்தம் அல்லது விடுபட்டு இருந்தால் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் அசல் கல்வி சான்றுகளுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தை 10.2.2012க்குள் அணுக வேண்டும். 10ம் தேதிக்கு பின் வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 

Read more »

வியாழன், பிப்ரவரி 02, 2012

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

கடலூர் :

         கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 4ம் தேதி காலை 10 மணிக்கு தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
 

           தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 4ம் தேதி நடக்கிறது. இதில் டி.வி.எஸ்., அப்பலோ பார்மசி, செக்யூரிட்டி சர்வீஸ், ஓஷன் ஸ்பிரே ஓட்டல், ஸ்டார் ஹெல்த் நிறுவனங்களில் பணி புரிய ஆர்முள்ளவர்கள் முகாமில் பங்கேற்கலாம். 

               எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி, ஐ.டி.ஐ., டிகிரி படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் இவ்வாறு கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.









Read more »

வியாழன், செப்டம்பர் 22, 2011

கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் செப்டெம்பர் 25ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கடலூர்:

          கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 25ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

        தமிழகத்தில் தனியார் முன்னணி நிறுவனங்களுக்குத் தேவையான பணியாளர்கள் நிரப்பப்படவுள்ளனர். அதையொட்டி வரும் 25ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. 

பங்கேற்கும் நிறுவனங்களும், ஊதிய விவரமும்:

ஜெ.கே., டயர் - 
சிவில் மற்றும் கம்ப்யூட்டர் தவிர அனைத்து டிப்ளமோ இன் இன்ஜினியரிங், வயது 18 முதல் 22 வரை இருக்க வேண்டும். 
மாத ஊதியம் 7,500 ரூபாய்.

செயின்ட் கோபைன் கண்ணாடி தொழிற்சாலை, 

10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி
வயது 18 - 20, 
உதவித்தொகை மாதம் 5,000 ரூபாய். 

டாடா நிறுவனம்

12ம் வகுப்பு தேர்ச்சி,
வயது 18 - 20 வரை, 
மாதம் 6,900 ரூபாய். 

ஏர்டெல் நிறுவனத்தில் 

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, டிகிரி, ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக், 
வயது 18 - 35,
கல்வித் தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கப்படும். 
குறைந்த பட்சம் மாதம் 7,000 ரூபாய்.

ஐ.எஸ்.எஸ்.எஸ்.டி.பி., 

செக்யூரிட்டி சர்வீஸ்,
அனைத்து கல்வித் தகுதிகளும்,
வயது வரம்பு இல்லை. 
கல்வித்தகுதிக் கேற்ற ஊதியம். 
குறைந்தபட்சம் 7,195 ரூபாய்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.














Read more »

செவ்வாய், ஜூலை 19, 2011

கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சியுடன் வேலை வாய்ப்பு: 23ம் தேதி சிறப்பு முகாம்

கடலூர் : 

          கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 23ம் தேதி தனியார் துறைக்கான வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. 

இதுகுறித்து கலெக்டர் அமுதவல்லி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

           சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் "செயின் கோபெயின்' நிறுவனம் உற்பத்தி தொழில் நுட்பம் என்ற ஐந்தாண்டு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு அளிக்க முன் வந்துள்ளது. இதில் சேர 10ம் வகுப்பு அல்லது பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சியின் போது மாதம் 5,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சி முடித்த பின் இதே நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவர். 

            தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 23ம் தேதி காலை கடலூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



For More Details










Read more »

திங்கள், ஜூலை 18, 2011

கடலூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு உதவித்தொகை விண்ணப்பம் வினியோகம்

கடலூர் : 

         வேலை வாய்ப்பற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

            மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பம் கடந்த 1ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 300 ரூபாய், பிளஸ் 2 விற்கு 375 ரூபாய், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 450 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.

             இத்திட்டத்தில் உதவித் தொகை பெற உடல் ஊனமுற்றவர் அல்லது செவித் திறன் குறைந்தவராகவும், தங்கள் கல்வித் தகுதியை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்த, 40 வயதிற்கு (ஆதிதிராவிடர்கள் 46 வயது) உட்பட்டவராக இருக்க வேண்டும்.தகுதி உடையவர்கள் வேலை நாட்களில் கடலூரில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 





Read more »

சனி, ஜூலை 09, 2011

கடலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் : 

         வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
 
இது பற்றி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

              மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மனுதாரர்களுக்கு 1.7.2011 முதல் 30.09.2011 வரை முடியும் காலாண்டுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதனை பெற எஸ்.எஸ்.எல்.சி.,-எஸ். எஸ்.எல்.சி., தவறியவர் (பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தவறியவர்கள் மட்டும்) பி.யு.சி, மேல்நிலை வகுப்பு, பட்டப் படிப்பை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 30.06.2011ல் ஐந்து ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியிருக்கு வயது 45, மற்றவர்களுக்கு 40க்குள் இருக்க வேண்டும். பதிவை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். 

             அரசு அல்லது தனியார் துறையில் வேலையில் இருக்கக் கூடாது. ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் தற்போது சேர்ந்து படித்துக் கொண்டிருக்கக் கூடாது. ஆனால் அஞ்சல் வழிக்கல்வி அதாவது தொலைதூரக் கல்வி பயில்வோர் விண்ணப்பிக்கலாம். மனுதாரர் தமிழகத்தில் படித்தவராக இருக்க வேண்டும். அல்லது அவரது பெற்றோர், பாதுகாவலர் தமிழகத்தில் 15 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 50 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
 
             இத்தகைய விவரங்களின் அடிப்படையில் தகுதி உள்ளவராக இருப்பவர்கள் தங்களது கல்விச் சான்றுகளின் அசல் மற்றும் வேலைவாய்ப்பக அசல் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வேலை வாய்ப்பு அலுவலகம் வந்து இலவசமாக விண்ணப்பம் பெறலாம். ஏற்கனவே விண்ணப்பம் செய்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 




Read more »

செவ்வாய், ஜூன் 14, 2011

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இணைய தளம் மூலமாக வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு

கடலூர் : 

          பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் வேலை வாய்ப்பு பதிவை இணைய தளம் மூலமாக பள்ளியில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக செய்திக்குறிப்பு: 

                 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இணைய தளம் மூலம் அவர்கள் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் கடலூரில் நடந்தது. கலெக்டர் அமுதவல்லி தலைமை தாங்கினார். சி.இ.ஓ., அமுதவல்லி, டி.இ.ஓ.,க்கள் பாரதமணி, பத்ரூ, மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அருள்மொழிதேவி, வேலைவாய்ப்பு அலுவலர் பங்கேற்றனர். இணையதளத்தில் வேலைவாய்ப்பு பதிவை வரும் 20ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம். 

               தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்களின் பெயர், தந்தை மற்றும் தாய் பெயர், வீட்டு முகவரி (ரேஷன் கார்டில் உள்ளபடி) மொபைல் எண், ரேஷன் கார்டு ஜெராக்ஸ் ஆகியவற்றை தாங்கள் படித்த பள்ளித் தலைமை ஆசிரியரிடம் வரும் 19ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். பதிவிற்காக வேலை வாய்ப்பு அலுவலகம் செல்லத் தேவையில்லை. தேர்ச்சி பெறாதவர்கள் தற்போது பதிவு செய்ய இயலாது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 




Read more »

செவ்வாய், மே 31, 2011

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சார்நிலை பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

கடலூர் : 

           சார்நிலை பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது. 

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

           தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த சார்நிலை பணிகள் தேர்வு 1 மற்றும் தொகுதி 1 முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி நடைபெற்று வருகிறது. விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம் என தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டங்களில் உள்ள புத்தகங்களை படித்து பயனடையலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 



Read more »

புதன், பிப்ரவரி 09, 2011

கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூர்:

           மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலைக்குக் காத்து இருக்கும் மாற்றுத்திறனாளிகள், மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடையும் காலாண்டுக்கு உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்துள்ளார்.

ஆட்சியர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

              உதவித்தொகை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுக்கு மேல், பதிவேட்டில்  காத்திருப்போராக இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு வயது வரம்பு 45. மற்றவர்களுக்கு 40. தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண்டும்.அரசு அல்லது தனியார் துறையில் வேலையில் இருத்தல் கூடாது. கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படித்துக்கொண்டு இருக்கக்கூடாது. ஆனால் அஞ்சல் வழியாக அல்லது தொலைதூரக் கல்வி பயில்வோராக இருக்கலாம்.

             தமிழ்நாட்டில் கல்வி பயின்றவராக இருக்க வேண்டும். பெற்றோர், பாதுகாவலர் தமிழ்நாட்டில் தொடர்ந்து 15 ஆண்டுகள் வசிப்பவராகவும், ஆண்டு வருவாய் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.வேலைவாய்ப்பு அலுவலக அசல் அட்டை மற்றும் கல்விச் சான்றுகளுடன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நேரில் விண்ணப்பப்படிவத்தை இலவசமாகப் பெற்று பூர்த்தி செய்து, அதே அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம்.

                  விண்ணப்பித்த அனைவருக்கும் தகுதி அடிப்டையில் 10 ஆண்டுகளுக்கு அரசால் உதவித் தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்கக் கடைசி தேதி 28-2-2011.கல்வித் தகுதி எஸ்.எஸ்.எல்.சி.க்கு மாதம் ரூ.300, எச்.எஸ்.சி.க்கு மாதம் ரூ.375. பட்டப் படிப்புக்கு மாதம் ரூ.450 வழங்கப்படும் என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

திங்கள், ஜனவரி 24, 2011

கடலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பட்டியல் வெளியீடு

கடலூர் : 

           பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் மற்றும் துப்புரவு ஆய்வாளர் முடித்து பதிவு செய்துள்ள மனுதாரர்களின் பட்டியல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மனுதாரர்கள் தங்கள் விவரங்களை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். பெயர் விடுபட்டவர்கள் வரும் 25ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலரை நேரில் அணுக வேண்டும். அதற்குப் பிறகு வரும் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
 

Read more »

வெள்ளி, டிசம்பர் 24, 2010

கடலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர்:

         வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள அனைத்து பள்ளியிறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை வழங்குவதற்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

                கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள அனைத்து பள்ளியிறுதித் தேர்வு தேர்ச்சி பெறாதவர்களுக்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

              மனுதாரர் முறையாகப் பள்ளியில் 9ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, பின்னர் 10வது பள்ளியிறுதித் தேர்வில் பங்கேற்று தோல்வியடைந்தவர்களாக இருந்து, தமது கல்வி தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகளுக்கு மேல், உயிர்ப் பதிவேட்டில் காத்திருப்பவராக இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயனாளிகள் 45வயதிற்குள்ளும், இதரவகை பயனாளிகள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 50 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு நிறுவனங்களிலோ அல்லது எந்தவொரு தனியார் நிறுவனத்திலோ பணிபுரிபவராக இருக்கக் கூடாது. சுய தொழிலிலும் ஈடுபடக்கூடாது.

                 பள்ளி அல்லது கல்லூரியில் பயிலும் முழுநேர மாணவர்களாக இருக்கக் கூடாது. குறைந்தபட்சம் 15 ஆண்டுகளாவது தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். இந்த விவரங்கள் அடிப்படையில் தகுதி உள்ளவராக இருக்கும் மனுதாரர்கள் தங்களின் கல்விச் சான்றுகளின் அசல் மற்றும் வேலைவாய்ப்பக அசல் அடை யாள அட்டை ஆகியவற்றுடன் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பம் செய்த அனைவருக்கும் தகுதி அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு உதவித் தொகை அரசால் வழங்கப்படும்.

Read more »

புதன், டிசம்பர் 08, 2010

கடலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சில் பணிபுரிய வரும் 11ம் தேதி நேர்காணல்

கடலூர் : 

             108 ஆம்புலன்சில் பணிபுரிவதற்கான நேர் காணல் வரும் 11ம் தேதி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. 

              தமிழ்நாடு அரசின் இ.எம்.ஆர்.ஐ., நிறுவனத்தின் 108 ஆம்புலன்ஸ் சேவையும், கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும் இணைந்து நடத்தும் நேர்காணல் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 11ம் தேதி நடக்கிறது. இந்த நேர்காணலில் 108 ஆம்புலன்சில் பணிபுரிவதற்கான அவசர சிகிச்சை டெக்னிஷியன், டிரைவர் பதவிக்கும் தேர்வு நடக்கிறது. பி.எஸ்சி., தாவரவியல், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி, உயிர் வேதியியல் பாடப் பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள். 20 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் அசல் கல்வி, அனுபவ சான்றுடன் வர வேண்டும்.

                     அதேப்போன்று 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 5 ஆண்டு முன் அனுபவம் உள்ள 25 வயது முதல் 38 வயது வரை உள்ள டிரைவர்கள் தங்களது கல்வி, அனுபவ சான்றுடன் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட்டு நியமனம் வழங்கப்படும். இவ்வாறு வேலைவாய்ப்பு அலுவலர் வைத்தியநாதன் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.

Read more »

புதன், ஜூலை 28, 2010

கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலையற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது


கடலூர்:

              வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மனுதாரர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான விண்ணப்பங் கள் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பு:

               வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மனுதாரர்களுக்கு உதவித் தொகை பெறுவதற்கு எஸ்.எஸ்.எல்.சி., பி.யூ.சி., பிளஸ் 2, பட் டப்படிப்பு படித்து பதிவு செய்து 30-6-2009 அன்று ஐந்து வருடங்கள் கடந்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 45 வயதும் மற்றவர்களுக்கு 40க்குள்ளும் இருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் துறையில் பணியில் இருத்தல் கூடாது.அஞ்சல் வழிக் கல்வி அல்லது தொலைதூரக் கல்வி பயில்வோர் விண் ணப்பிக்கலாம். 

              குடும்ப ஆண்டு வருமானம் 50 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.தகுதியுள்ளவர்கள் கல்விச்சான் றுகளின் அசல் மற்றும் வேலைவாய்ப்பக அசல் அடை யாள அட்டை முதலியவற்றுடன் நேரில் வந்து விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை. விண்ணப்பித்த அனைவருக்கும் தகுதியின் அடிப்படையில் மூன்று வருடங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். விண்ணப்பம் 1-7-2010 முதல் தினமும் காலை 10 மணி முதல் 1 மணி வரை வழங்கப்படுகிறது.இந்த காலாண்டுக்குரிய விண்ணப்பம் திருப்பி ஒப்படைக்க கடைசி நாள் 31-8-2010 ஆகும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

சனி, மே 29, 2010

வேலை வாய்ப்பு பதிவு சிறப்பு முகாமில் நெரிசலில் சிக்கி மாணவியர் மயக்கம்


சிதம்பரம் : 

                     சிதம்பரம் வேலைவாய்ப்பு பதிவு முகாமில் பிளஸ் 2 முடிந்த மாணவ, மாணவியர் ஆயிரக்கணக்கில் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல் சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஒரே நேரத்தில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய மாணவ, மாணவியர் கூடுவதை தவிர்க்க சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம் ஆகிய இடங்களில் இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

                        சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகா பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவியர், அரசு பெண்கள் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வேலை வாய்ப்பு பதிவு முகாமில் பதிவு செய்தனர். இரண்டாம் நாளான நேற்று அதிகாலை முதல் அதிக அளவில் கூட்டம் கூடியது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால், போலீசார் வரவழைக்கப்பட்டனர். குறுகிய இடத்தில் முகாம் நடத்தப்பட்டதாலும், பதிவு செய்யும் அதிகாரிகள் நான்கு பேர் மட்டுமே இருந்ததாலும் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் மாணவ, மாணவியர் அவதியடைந்தனர். மேலும் மாணவ, மாணவியர் காலை முதல் சாப்பிடாமல் இருந்ததாலும் வெயில் கொடுமையாலும் ஒரு சில மாணவியர் மயங்கி விழுந்தனர். முறையான ஏற்பாடுகள் செய்யாததால் மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Read more »

வெள்ளி, மே 28, 2010

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேற்று ஒரே நாளில் 5000 பேர் பதிவு

கடலூர் : 

                  கடலூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதற்கா நேற்று பிளஸ் 2 மாணவர்கள் ஏராளமானோர் குவிந்தனர். கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வில் கடலூர் மாவட்டத்தில்  25 ஆயிரத்து 272 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த 14ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 9 ஆயிரத்து 226 மாணவர்களும், 10 ஆயிரத்து 686 மாணவிகள் என மொத்தம் 19 ஆயிரத்து 912 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் நேற்று பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் மூலம் வழங்கப்பட்டன.

                         மதிப்பெண் சான்றிதழ் பெற்ற பெரும் பான்மையான மாணவர்கள் உயர் கல்வி படிப்பில் சேர்வதற்கு முன் வேலை வாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்வது வழக்கம். இதற்காக கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் மாணவ, மாணவிகள் சிரமமின்றி பதிவு செய்ய வசதியாக இந்தாண்டு கடலூர், சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம் என நான்கு மையங்களில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை முதல் நான்கு மையங்களிலும் பதிவு செய்வதற்காக பிளஸ் 2 மாணவ,மாணவிகள் ஏராளமானோர் தங்கள் பெற்றோர்களுடன் பதிவு மையத் தில் குவிந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் தள்ளுமுள்ளு இல்லாமல் இரவு வரை பதிவு செய்யப் பட்டது. நேற்று கடலூர் மாவட்டத்தில் நான்கு பதிவு மையங்களிலும் 5 ஆயிரம் பேர் பதிவு செய்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior