உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




தியாகவல்லி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தியாகவல்லி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஆகஸ்ட் 18, 2011

சிதம்பரம் தியாகவல்லியில் காதலனை கைபிடிக்க தர்ணா செய்யும் பெண்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/0f5b73c9-7748-4759-9faa-e56294e843ba_S_secvpf.gif
சிதம்பரம்:

              சிதம்பரத்தை அடுத்த தியாகவல்லியை சேர்ந்தவர் மோகன், கட்டிட மேஸ்திரி. இவரது மகள் தமிழரசி (வயது 19). என்ஜினீயரிங் கல்லூரி மாணவி. இவருக்கும் திருச்சோபுரம் பகுதியை சேர்ந்த சந்துரு (25) என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

               தமிழரசி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சந்துருவிடம் கேட்ட போது அவர் திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.   இதனால் ஆத்திரமடைந்த தமிழரசி நேற்று காலை திருச்சோபுரத்தில் உள்ள சந்துரு வீட்டு முன்பு தரையில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.  இதனை கண்ட பொது மக்கள் அங்கு திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் விரைந்து சென்று தமிழரசியிடம் விசாரணை நடத்தினர்.

Read more »

வியாழன், ஜூன் 02, 2011

அடிப்படை வசதிகள் இன்றி சிதைந்துக் கிடக்கும் கடலூர் துறைமுகம்

கடலூர்:

             அடிப்படை வசதிகள் இன்றி சிதைந்துக் கிடக்கும் கடலூர் துறைமுக மீன் இறங்கு தளத்தைச் சீரமைக்க வேண்டும் என்று, தமிழ்நாடு மீனவர் பேரவை கோரிக்கை விடுத்தது.

              தமிழ்நாடு மீனவர் பேரவையின் கடலூர் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கூட்டம் கடலூரில் திங்கள்கிழமை நடந்தது. ஆண்டுதோறும் கடல் நீரோட்டங்களால் தூர்ந்து கொண்டு இருக்கும் கடலூர் துறைமுகத்தை, மணல்வாரி கப்பல்கள் மூலம் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். ஆண்டுக்கு ரூ. 100 கோடிக்கு மேல் மீன் வர்த்தகம் நடைபெறும் கடலூர் துறைமுக மீன் இறங்குதளம், பராமரிப்பு இன்றிக் கிடக்கிறது.


             மீன் இறங்கு தளத்தைச் சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் துறைமுக நுழைவாயிலில் மின் விளக்குகள் பொருத்த வேண்டும். பரங்கிப்பேட்டை, அன்னங்கோயில் துறைமுகங்களையும் ஆழப்படுத்த வேண்டும். சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு, அக்கரை கோரி சுனாமி நகர் பகுதிகளில் இருந்து சுடுகாட்டுக்கு 6 கி.மீ. தூரம், சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியது இருப்பதால், பல சமூகப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. பல நேரங்களில் படகுகள் மூலமாகவும் சடலங்கள் எடுத்துச் செல்ல நேரிடுகிறது. 

               இப்பிரச்னைக்குத் தீர்வு காண, சுனாமி குடியிருப்புப் பகுதியில் உப்பனாற்றில் பாலம் அமைக்க வேண்டும். சுனாமிக் குடியிருப்புப் பகுதியில் இருந்து மாணவர்கள் சிரமமின்றி பள்ளிகளுக்குச் செல்ல, உப்பனாற்றில் சிறிய பாலம் அமைக்க வேண்டும். முழுமைப் பெறாமல் இருக்கும் சொத்திக்குப்பம்- கிள்ளை கடற்கரைச் சாலைப்பணியை நிறைவேற்ற வேண்டும்.÷தூர்ந்துக் கிடக்கும் கடலூர் துறைமுகம் கோரிவாய்க்காலை படகுகள் நிறுத்துவதற்கு வசதியாக ஆழப்படுத்த வேண்டும்.

              தியாகவல்லி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே.சுப்புராயன் முன்னிலை வகித்தார். மாவட்டப் பொருளர் கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.




Read more »

வெள்ளி, மே 06, 2011

கடலூர் அருகே உப்பங்கழிப் பகுதிகளில் உருவாக்கப்படும் சதுப்பு நிலக் காடுகள்


ஆலமரம் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் உருவாக்கப்பட்ட தில்லஞ்செடி காடுகள். (உள்படம்) ஆலமரம் அமைப்பினரால் நடப்படும் சுரபுன்னை விதைகள்.
 
கடலூர்:

            கடலூர் அருகே ஆலமரம் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் சார்பில், தில்லஞ்செடி என்ற மரங்களை பெருமளவில் வளர்த்து சதுப்பு நிலக் காடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 

                தமிழகத்தில் சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரத்தில், சதுப்பு நிலங்களில் மாங்குரோவ் காடுகள் அதிகளவில் உள்ளன. அலையாத்தி காடுகள் என்றும் அழைக்கப்படும், இக்காடுகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடல் அரிப்பு, மீன் வளம் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் சதுப்பு நிலக்காடுகளால் விளைகின்றன. கடலூர் மாவட்டத்தில் உப்பங்கழிப் பகுதிகளில் சதுப்பு நிலக் காடுகள் பெருமளவில் இருந்ததாகக் கூறப்படுகிறது. எனினும் பராமரிப்பு இன்மை, ஆடு, மாடுகளால் சேதம், இயற்கை மாற்றங்கள், ரசாயனத் தொழிற்சாலைகளின் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சதுப்பு நிலக் காடுகள் அழிந்து கொண்டு வருகின்றன. 

               எனவே கடலூர், சுற்றியுள்ள பகுதிகளில் சதுப்பு நிலக்காடுகளை வளர்ப்பதில் ஆலமரம் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு ஆர்வமுடன் செயல்பட்டு வருகிறது. சதுப்பு நிலக் காட்டு மரங்களில் 100-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. கடலூர் அருகே நொச்சிக்காடு, தியாகவல்லி, நடுத்திட்டு, குடிகாடு, ஈச்சங்காடு, ராசாப்பேட்டை, சொத்திக்குப்பம் பகுதிகளில் சதுப்பு நிலக் காடுகளில் வளரும் தில்லஞ்செடி என்ற வகை மரங்கள் பெருமளவில் இருந்தன. அவைகள் தற்போது பெரும்பாலும் அழிந்து கொண்டு இருக்கின்றன. உப்பனாற்றங்கரைகளில், உப்பங்கழிகளில் தில்லஞ்சடிகள் அதிகம் இருந்தால், அவற்றின் வேர் பகுதிகளில் கிலோ ரூ. 400 வரை விலை போகும் கல்நண்டு வகைகள், உயர் ரக இறால்கள், உப்பங்கழிப் பகுதி மீன்கள் பெருமளவில் உற்பத்தியாகும் என்றும், மற்ற மரங்கள், செடிகளைவிட தில்லஞ்செடிகள், 3 மடங்கு அதிகமாகக் காற்றில் உள்ள கார்பன் வாயுக்களை உருஞ்சும் தன்மை கொண்டவை என்று ஆய்வில் கண்டறியப்பட்டு இருப்பதாகவும் ஆலமரம் அமைப்பின் நிர்வாகியும், சமூக சேவகருமான தியாகவல்லி இளையராஜா தெரிவித்தார்.

                உப்பனாற்றில் சிப்காட் ரசாயன ஆலைக் கழிவுகள் கலப்பதாலும், ஆடு-மாடுகள் மேய்ச்சல், விறகுக்காக காடுகளை அழித்தல் போன்ற செயல்களால், தில்லஞ் செடிகள் பெருமளவு அழிவைச் சந்தித்து உள்ளன.இதனால் தில்லஞ்செடிகளை விதை போட்டு வளர்க்கும் முயற்சியில், சில ஆண்டுகளாக ஆலமரம் அமைப்பின் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் விளைவாக தியாகவல்லி, தோணித்துறை பழத்தோட்டம் பகுதிகளில் அதிகளவில் தில்லஞ்செடிகள் வளர்ந்து இருப்பதாக இளையராஜா தெரிவித்தார். மேலும் இச்செடிகளை யாரும் அழித்து விடாதவாறு பாதுகாக்கும் முயற்சியிலும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இப் பகுதிகளில் தற்போது கல் நண்டு, இறால்கள், மீன்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், மேலும் எண்ணிக்கை பெருகிய பிறகு மீன்கள், இறால்கள் மற்றும் கல்நண்டுகளை பிடிக்க, உப்பனாற்று மீனவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஆலமரம் அமைப்பை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். 

            மேலும் தியாகவல்லி, நொச்சிக்காடு பகுதிகளில் உள்ள உப்பங்கழிகளை அடுத்துள்ள கரைகளில், சுரபுன்னை மரங்களின் பல்வேறு வகைகளின் விதைகளை நட்டு, பாதுகாக்கும் பணியிலும் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது.

Read more »

வெள்ளி, டிசம்பர் 31, 2010

கடலூர் அருகே 15 ஆண்டுகளுக்கு முன் கட்டிய பயன்பாட்டுக்கு வராத பாலம்!


கடலூர் அருகே 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இன்னமும் பயன்பாட்டுக்கு வராத திருச்சோபுரம் பாலம்.
 
கடலூர்:
 
                     கடலூர் அருகே 15 ஆண்டுகளுக்கு முன் கட்டிய பாலம், ஏனோ இன்னமும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
 
               - சிதம்பரம் சாலையில் இருந்து திருச்சோபுரம் செல்லும் சாலை மிகவும் குறுகலானது. இந்தச் சாலை வழியாக உப்பனாற்றைக் கடந்துதான், சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள சில தனியார் தொழிற்சாலைகள், மற்றொரு தனியார் தொழிற்சாலைக்கான சிறிய துறைமுகம், ஆலப்பாக்கம் ரயில் நிலையம் ஆகியவற்றுக்குச் செல்ல வேண்டும். மேலும் கம்பளிமேடு, தியாகவல்லி, பெரிக்குப்பம், நடுத்திட்டு, நொச்சிக்காடு, சித்திரைப்பேட்டை, தம்பணாம்பேட்டை உள்ளிட்ட பல கிராமங்களுக்கும் இச்சாலையில் உள்ள உப்பானாற்றின் குறுக்கே அமைந்துள்ள தரைப்பாலம் வழியாகத்தான் செல்ல வேண்டும்.
 
            உப்பனாற்றைக் கடந்து செல்லும் இவ்வழியில் சீனிவாசபுரத்தில் உள்ள இந்தத் தரப்பாலம் மிகப் பழையது. வடகிழக்குப் பருவமழை காலத்தில், தரைப்பாலத்தில் நீர் மட்டம் உயர்வதால், முந்தைய ஆண்டுகளில் 5 நாள்களுக்கு மேலும் போக்குவரத்து தடைபட்டது  உண்டு.இந்த ஆண்டு 3 நாள்கள் இப்பாலத்தில் போக்குவரத்து நடைபெற வில்லை. குறுகிய தரைப்பாலம் வழியாகச் செல்வதில் உள்ள சிரமங்களைப் போக்க, 15 ஆண்டுகளுக்கு முன், 100 மீட்டர் நீளம் கொண்ட உயர்மட்டப் பாலம் கட்டப்பட்டது. இப்பாலம் இன்று வரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இப்பாலத்தின் இரு முனைகளும் அணுகு சாலைகளால் இணைக்கப்படாமல் பாலம் துண்டாக நிற்கிறது.
 
.இது குறித்து திருசோபுரத்தைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் சாமி கச்சிராயர் கூறுகையில், 
 
                "உப்பனாற்றில் நீர் மட்டம் அதிகரிக்கும்போது தரைப் பாலத்தில் போக்குவரத்து தடைபட்டு விடும். பொதுமக்களுக்கும் தொழிற்சாலைகளுக்குச் செல்வோருக்கும் வசதியாக உயர்மட்டப் பாலம் தேவை என்று கோரியதால் நெடுஞ்சாலைத் துறை இப்பாலத்தைக் கட்டியது.நிலம் கையகப்படுத்துவதில் எழுந்த பிரச்னை காரணமாக, உயர்மட்டப் பாலத்துக்கு அணுகுசாலை அமைக்கும் பணி தடைபட்டது.தற்போது தொழிற்சாலைகளுக்கு தினமும் ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் தரைப்பாலம் வழியாகச் சென்று வருகிற நிலையில், உப்பனாற்றில் உயர் மட்டப் பாலத்தின் தேவை அதிகரித்து உள்ளது' என்றார்.
 
குறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் 
 
                 நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னை எழுந்ததால் பாலம் கட்டும் பணி நிறைவு அடைய வில்லை. மேலும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணிகள் அப்போது தடைபட்டு நின்றுவிட்டது. அதனால் பாலம் பற்றி அப்போது யாரும் கவலைப்படவில்லை' என்று தெரிவித்தார்.
 
                    ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள், அரசின் உதவியுடன் எளிதாக கையகப்படுத்தப்படுகிறது.ஆனால் ஒரு பாலத்துக்கான சிறிய அளவு நிலத்தை கையகப்படுத்துவதில் எழுந்த பிரச்னையை, அரசால் ஏன் தீர்த்து வைக்க முடியவில்லை என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

Read more »

செவ்வாய், ஏப்ரல் 06, 2010

கடலூர் மார்க்கெட் கமிட்டியில் வேர்க்கடலைக்கு கூடுதல் விலை: விவசாயிகள் மகிழ்ச்சி

 கடலூர்: 

                கடலூர் முதுநகர் மார்க்கெட் கமிட்டியில் நேற்று வேர்க்கடலைக்கு கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். கடலூர் முதுநகர் மார்க்கெட் கமிட்டியில் கடலூர், திருவந்திபுரம், நாணமேடு, உச்சிமேடு, தியாகவல்லி, காரைக்காடு, கண்டக்காடு, சில்லாங்குப்பம், சான்றோர் பாளையம், பில்லாலி தொட்டி உட்பட கடலூர் நகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் விளையும் விவசாய பொருட்களை கொண்டு வந்து விற் பனை செய்கின்றனர். தற்போது கடலூர் பகுதியில் வேர்க்கடலை சீசன் என்பதால் மார்க் கெட் கமிட்டிக்கு வேர்க் கடலை அதிகளவில் வரத் துவங்கியுள்ளது. 12க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று காலை வேர்க் கடலை மூட்டைகளுடன் விற்பனைக்கு வந்தனர். 91 லாட்டுகள் 400 மூட்டை வேர்க்கடலை விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்தது. வேர்க்கட லையை வாங்க விருதுநகர், பண்ருட்டி, விழுப்புரம், புவனகிரி, பரங்கிப் பேட்டை, திருக்கோவிலூர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் வியாபார பிரதிநிதிகள் 12 பேர் வேர்க்கடலை மூட்டைகளை ஆய்வு செய்து விலை நிர்ணயம் செய்தனர். இதில் குறைந்தபட்சமாக 3,000 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 3,229 ரூபாய் வரை விலை போனது. இந்த ஆண்டில் நேற்று மட்டும் அதிகபட்சமாக 400 மூட்டைகள் வேர்க் கடலை வரத்து இருந்தது குறிப்பிடத்தக்கதது.


downlaod this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior