உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




மீனவர் நல வாரியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீனவர் நல வாரியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், நவம்பர் 30, 2011

சிதம்பரம் புதுச்சத்திரத்திரம் அருகே படகு கவிழ்ந்து மீனவர் பலி

சிதம்பரம்:

           சிதம்பரம் அருகே புதுச்சத்திரத்தை அடுத்த போட்டோடை பகுதியை சேர்ந்தவர் வடிவேலு (வயது 52). மீனவர். இவரும் அதே பகுதியை சேர்ந்த ராஜலிங்கம் (43) என்பவரும் திங்கட்கிழமை  காலை கடலில் படகில் மீன் பிடிக்க சென்றனர். மீன்பிடித்துக் கொண்டு மாலையில் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

             நடுக்கடலில் வந்தபோது பலத்த காற்றினால் படகு கவிழ்ந்தது. இதில் வடிவேலு படகின் அடியில் சிக்கிக் கொண்டார்.   வடிவேலுவை ராஜலிங்கம் காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. இதையடுத்து ராஜலிங்கம் கரைக்கு நீந்தி வந்து வடிவேலுவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் மற்றொரு படகில் சென்று படகின் அடியில் சிக்கிக் கொண்ட வடிவேலுவை மீட்டனர். ஆனால் அவரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Read more »

செவ்வாய், நவம்பர் 15, 2011

கிராம நிர்வாக அதிகாரிகளுக்கும் பிரிண்டருடன் கூடிய மடிக்கணினி

சென்னையில் நேற்று  நடந்த கலெக்டர்கள் 2ம் நாள் மாநாட்டில் முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

* எப்போதெல்லாம் கடலில் மீனவர்கள் காணாமல் போகிறார்களோ, அப்போதெல்லாம் தேவைக்கேற்ப வாடகைக்கு ஹெலிகாப்டர் எடுத்து, மீனவர்களை தேடி, மீட்கும் பணி மேற்கொள்ளப்படும்.

* மீனவர்களை தேடி, மீட்கும் பணிக்காக கடலோர காவல்படைக்கும், கடலோர போலீசாருக்கும் நவீன அதிவிரைவு படகுகள் வழங்கப்படும்.

* புதிய அரசு ஆஸ்பத்திரிகளில் சூரியஒளி மூலம் மின்சார உற்பத்தி செய்யப்படும்.

* மாற்றுத் திறனாளிகள் ஒய்வூதியம் பெறுவதற்கு குறைந்தபட்ச வயது வரம்பு 45 என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது, 18 வயதாக குறைக்கப்படுகிறது.

* அனைத்து மாவட்டங்களிலும் சட்ட விஷயங்களை மேற்கொள்வதற்காக கலெக்டரின் நேர்முக உதவியாளர் என்ற புதிய பணியிடம் உருவாக்கப்படும்.

* பொதுமக்களுக்கு சிறந்த சேவை அளிப்பதற்காக அனைத்து கிராம நிர்வாக அதிகாரிகளுக்கும் பிரிண்டருடன் கூடிய லேப-டாப் வழங்கப்படும் - என்பன உள்பட 32 மாவட்டங்களுக்கு 43 வளர்ச்சி திட்டங்களை அறிவித்தார் 













Read more »

செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

தமிழகக் கடலோர மீனவர்களுக்கு ஹெல்ப்லைன் சேவை அறிமுகம்

கடலூர்:

            தமிழகக் கடலோர மீனவர்களுக்கு உதவும் வகையில், ஹெல்ப்லைன் சேவை தொடங்கப்பட்டு இருப்பதாக, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்து உள்ளது.

இந்த நிறுவனம் சார்பில், சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: 

              கடலோர மீனவர்களுக்கு ஒலி வடிவில் செல்போன் குறுஞ்செய்திகள், காலநிலை, முன் எச்சரிக்கை, மீன்களை சிறப்பாகக் கையாளுதல், மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மீனை மாற்றி வாழ்வாதாரத்தை உயர்த்துதல், கடல் வளங்களைப் பாதுகாத்தல், மீனவர் நண்பர் தொலைபேசிச் சேவை உள்ளிட்ட சேவைகளை கிராம வள மையங்கள், கிராம அறிவு மையங்கள் வாயிலாக, எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கி வருகிறது. தற்போது இந்தியாவில் முதல்முறையாக, இந்தியக் கடல் தகவல் சேவை மையத்துடன் இணைந்து, மீனவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ஹெல்ப்லைன் சேவையை, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கி இருக்கிறது.

                 இதன் மூலம் மீனவர்களுக்குத் தேவையான காலநிலைத் தகவல்களும், பயிற்சி மற்றும் மேம்பாடு சார்ந்த கேள்விகளுக்கும் தொலைபேசி வாயிலாக பதில் அளிக்கும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக பல்வேறு நிபுணர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

             மீனவர்கள் தங்கள் சந்தேகங்களுக்கு 92824- 42312 மற்றும் 98424- 42311 என்ற ஹெல்ப்லைன் எண்களில் தொடர்பு கொண்டு, உரையாடலாம் தகவல்களைப் பெறலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.





Read more »

வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010

மீன்பிடிக்கச் சென்ற ஐந்து மீனவர்கள் மாயம்:ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தீவிரம்

கடலூர்:

              கடலூரிலிருந்து விசைப்படகில் மீன் பிடிக்க சென்று காணாமல் போன ஐந்து மீனவர்களை, ஹெலிகாப்டர் மற்றும் கப்பல் மூலம் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

              கடலூர் அடுத்த தம்னாம்பேட்டையைச் சேர்ந்தவர் அஞ்சாபுலி (47). இவருக்கு சொந்தமான விசை படகில், கடந்த 19ம் தேதி அதிகாலை கடலூர் முதுநகர் நஞ்சம்பேட்டை சங்கரன்(50), ஏழுமலை (53),பெரியக்குப்பம் கருப்பர்(55), சித்திரைப்பேட்டை சேகர்(55) உள்ளிட்ட 5 பேர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். படகின் உரிமையாளர் அஞ்சாபுலி கடந்த 20ம் தேதி மாலை மொபைல் போன்மூலம் தொடர்பு கொண்டு பேசியபோது, வீராம்பட்டினத்திற்கு கிழக்கே மீன் பிடித்துக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

                    இந்நிலையில் கடந்த 23ம் தேதி திரும்ப வேண்டிய படகு நேற்று மாலை வரை கரைக்கு திரும்பவில்லை. மீன் பிடிக்க சென்றபோது, படகில் 1,500 லிட்டர் டீசல் இருந்துள்ளது. இதனால் 23ம் தேதி வரையில் மட்டுமே டீசல் இருப்பு இருந்திருக்கும். தற்போதைய நிலையில் படகில் டீசலும் இருக்க வாய்ப்பில்லை என மீனவர்கள் சந்தேகிக்கின்றனர்.இதைத்தொடர்ந்து நேற்று முன் தினம் காலை அஞ்சாபுலி மற்றும் தம்னாம்பேட்டை ஆறுமுகம் ஆகியோர் தனித்தனியே இரண்டு படகுகளில் சென்று காணாமல் போன மீனவர்களை கடலுக்குள் தேடினர். 

                     ஆனால் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. நேற்று காலை கடலூர் மீனவர்கள் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள், ஊர்பிரமுகர்கள் என, 50க்கும் மேற்பட்டோர் கலெக்டர் சீத்தாராமனை சந்தித்து காணாமல் போன மீனவர்களை தேடித் தருமாறு மனு கொடுத்தனர். மேலும், தற்போதுள்ள நீரோட்டத்தில் படகு இலங் கையை நோக்கி காற்றில் அடித்து சென்றிருக்கும் என்பதால், இலங்கை கடல் பகுதியில் மீனவர்களை தேடவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கடலூர் கலெக்டர் சீத்தாராமன் கூறுகையில்,

            "காணாமல் போன மீனவர்கள் குறித்து அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. கோஸ்டல் கார்டு ஹெலி காப்டர் ஒன்றும், ரோந்து கப்பல் ஒன்றும் மீனவர்களை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது' என்றார்.

Read more »

திங்கள், மார்ச் 29, 2010

கிள்ளையில் தென்னிந்திய மீனவர்கள் கூட்டமைப்பு சம்மேளன சங்கம் துவக்கம்

கிள்ளை :

                சிதம்பரம் அருகே கிள்ளை கலைஞர் நகர் இருளர் குடியிருப்பில் தென்னிந்திய மீனவர்கள் கூட்டமைப்பு சம்மேளன சங்க  துவக்க விழா நடந்தது.
பேரூராட்சி கவுன்சிலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சங்க பொருளாளர் ரவி வரவேற்றார். மண்டல அலுவலர் பில்ஜின் மொரைஸ், ஊக்க அலுவலர் பட்சிராஜன், புதுச்சேரி கள அலுவலக பொறுப்பாளர் கார்த்திகேயன் முன் னிலை வகித்தனர். 'ஐபாடு' திட்டத்தின் மூலம் சுனாமியால் பாதித்த மீனவர்கள் மற்றும் இருளர்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் 'சிஸ்' அமைப்பில் துவக்கப்பட்ட தென்னிந்திய மீனவர்கள் கூட்டமைப்பின் சம்மேளன சங்கத்தை தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் சத்தயமூர்த்தி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கிள்ளை சென்ட்ரல் பாங்க் மேலாளர் லியாகத் அலி, திட்ட அலுவலர் பாஸ்கர் பேசினர். சங்க தலைவர் பாண்டியன் மற்றும் கிராம நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். சங்க செயலாளர் தங்கராசு நன்றி கூறினார்.

Read more »

புதன், பிப்ரவரி 17, 2010

ஆழ்கடலில் மீன் பிடிக்க மீனவர்களுக்கு யோசனை

கடலூர்:
 
                    100 மீட்டர் ஆழம் வரையிலான கடலில் மீன் வளம் குறைந்து வருகிறது. எனவே ஆழ்கடலில் மீன் பிடிக்கும் முயற்சிகளில் மீனவர்கள் ஈடுபட வேண்டும் என்று, இந்திய மீன் வள ஆய்வு நிறுவன சென்னை மண்டல இயக்குநர் ஆன்ட்ரோஸ் யோசனை தெரிவித்தார்.
 
                        தமிழ்நாடு கடல் மீன் வளம் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கு கடலூரில் செவ்வாய்க்கிழமை நடந்தது. 
 
கருத்தரங்கில் கலந்து கொண்டு ஆன்ட்ரோஸ் பேசியது:
 
                     இந்தியாவில் மீன் உற்பத்தி 1950-51-ல் 0.5 மில்லியன் டன்னாக இருந்தது. 2008-09-ல் இது 3 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. மீன் ஏற்றுமதி மூலம் இந்தியாவுக்கு 1950-51-ல் ரூ. 2.49 கோடி வருவாய் கிடைத்தது.தற்போது அது ரூ. 8607.9 கோடியாக உயர்ந்து இருக்கிறது. இந்திய எல்லைக்கு உள்பட்ட கடல் பகுதியில், 3.92 மில்லியன் டன் மீன்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.இதில் 3.01 மில்லியன் டன் மீன்கள் மட்டுமே தற்போது பிடிக்கப்படுகின்றன. மீன் உற்பத்தியில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது.தற்போது 50 முதல் 100 மீட்டர் ஆழம் வரையிலான கடலில் மட்டுமே மீன் பிடிக்கப்படுகிறது. இதனால் இப் பகுதியில் மீன் வளம் குறைந்து வருகிறது.எனவே இது வரை மீன் பிடிக்காத ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்கும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட வேண்டும். வெகுதூரத்தில் கிடைக்கும் சுறா மீன்கள் போன்றவற்றைப் பிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.தமிழ்நாட்டில் 1,076 கி.மீ. நீளக் கடற்கரை உள்ளது. தமிழக கடற்பரப்பளவு 41,412 சதுர கிலோ மீட்டர் ஆகும். ஆழ்கடலில் மீன் பிடிக்கும் வகையில் மாற்று மீன் பிடிப்பு முறைகளை மீனவர்கள் கையாள வேண்டும். இதற்கு படகுகளில் சிறிய மாற்றம் செய்தாலே போதும்.மாமல்லபுரம், கோவளம், புதுவை கடல் பகுதிகளில் 150 மீட்டர் ஆழம் உள்ள இடங்களில் மீன்கள் அதிகம் கிடைக்கின்றன. கடலூர், நாகை புதுவை கடல் பகுதிகளில் 240 முதல் 420 மீட்டர் ஆழம் உள்ள இடங்களில் கணிசமாக இறால் மீன்கள் இருப்பது, ஆய்வில் கண்டறியப்பட்டு இருக்கிறது. ஓடுகயிறு மீன்பிடிக்கும் முறை, சூறை மட்டு வைத்து மீன்பிடிக்கும் முறை, கணவாய் தூண்டில் முறை ஆகியவற்றைக் கடைப்பிடித்து, ஆழ்கடல் மீன்களைப் பிடித்து கூடுதல் வருவாய் பெறலாம். எரிபொருள் செலவும் மிச்சப்படும் என்றார் ஆன்ட்ரோஸ். தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி, கடலூர் மீன் வளத்துறை உதவி இயக்குநர் இளம்பரிதி, தனி அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior