உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




விருத்தாசலம் தாலுகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருத்தாசலம் தாலுகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், அக்டோபர் 18, 2011

விருத்தாசலம் அருகே உள்ளாட்சி தேர்தலைப் புறக்கணித்த கண்டப்பங்குறிச்சி கிராமம்

நெய்வேலி:

          விருத்தாசலம் தாலுக்காவுக்குட்பட்ட கண்டப்பங்குறிச்சி கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வலியுறுத்தி, கிராம மக்கள் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணித்தனர்.

             விருத்தாசலம் தாலுக்காவுக்குட்பட்ட கண்டப்பங்குறிச்சி கிராமம் கோ.கொத்தனூர் எனும் ஊராட்சியோடு இணைக்கப்பட்டுள்ளது. தங்களது கிராம மக்கள்தொகை 1700 பேர் உள்ளனர் என்றும், மொத்த வாக்காளர்கள் 599 பேர் உள்ளதாகவும், இதில் 200 வாக்காளர்கள் பெயர் விடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டும் கிராம மக்கள், கண்டப்பங்குறிச்சியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்று விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், கிராம மக்கள் திங்கள்கிழமை நடந்த உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் தெரிவித்தார்.

            இக்கிராம மக்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது. வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தாலும், கிராம மக்கள் யாரும் வாக்களிக்க வரவில்லை. வாக்குச்சாவடியில் இருந்த அலுவலர்கள் மாலை 5 மணி வரை காத்திருந்து, காலி வாக்குப் பெட்டியை சீல் வைத்து எடுத்துச் சென்றனர்.








Read more »

வியாழன், ஜூன் 23, 2011

விருத்தாசலத்தில் எரிசாராய ஆலை கழிவுநீரால் விளைநிலங்கள் பாதிப்பு

விருத்தாசலம்:
        
            விருத்தாசலம் தாலுக்கா கானாடுகாத்தான் கிராமத்தில் உள்ள தனியார் எரிசாராய ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் விளைநிலங்கள் பாதிப்பதாகவும், அப்பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல் ஏற்படுவதாகவும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.  
               இந்த தனியார் எரிசாராய ஆலையிலிருந்து மதுபானத்துக்கு தேவையான மூலப்பொருள் தயாரிக்கப்பட்டு மதுபான ஆலைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் இந்த ஆலையில் தயாரிக்கப்படும் எரிசாராயத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரை அருகிலுள்ள முந்திரிக் காடுகளில் ஊற்றிவிடுவதால், முந்திரி விவசாயம் பாதிப்பதாகவும், கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.  இதுகுறித்து கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தபோது, இது கழிவுநீரல்ல உர வடிநீர். இதனால் பாதிப்பு எதுவும் ஏற்படாது என விளக்கமளித்துள்ளனர்.  
              ஆனால் கிராம மக்களோ இந்த ஆலை வந்த பிறகுதான் முந்திரி விளைச்சல் குறைந்து விட்டதாகவும், இந்த கழிவுநீரிலிந்து உற்பத்தியாகும் ஒருவித ஈக்கள், கால்நடைகளை தாக்கி நோய்க்கு ஆளாக்குகிறது என்கின்றனர். மேலும் இந்த கழிவுநீரை விளைநிலங்களில் ஊற்றுவதால், மழைக்காலங்களில் மழைநீருடன் இந்த கழிவுநீரும் மண்ணில் கலந்து, குளங்களையும், ஆழ்துளைக் கிணறுகளையும் பாதித்து வருவதாகக் கூறுகின்றனர்.  இந்த ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுக்காற்றால் சுமார் 20 கி.மீ தொலைவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சுவாசப் பிரச்னைகள் ஏற்படுவதோடு, கண் எரிச்சல், மழைக் காலங்களில் மர்ம காய்ச்சல் ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.  
              இந்த கழிவுநீரை லாரிகள் மூலமாக எடுத்துச் செல்லப்படும் போது, கழிவுநீர் கசிந்து சாலையில் ஊற்றிக்கொண்டே செல்வதால் சாலை சேதமடைவதோடு, இரு சக்கர வாகனங்களில் செல்வோர், வழுக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். மேலும் இந்த கழிவுநீரை பொது வடிகால்களில் ஊற்றிவிடுவதால் சாலையோரத்தில் துர்நாற்றம் வீசுகிறது.  இதனால், பொதுமக்கள் வசிக்குமிடத்தில் சுகாதார சீர்கேட்டை உருவாக்குவதோடு, விளைநிலங்களையும் பாழாக்கும் தனியார் ஆலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் ஆய்வு நடத்தி, உரிய முறையில் கழிவு நீரை அகற்றிடவும், துர்நாற்றத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு இப்பகுதி மக்கள் சுகாதாரமான முறையில் வாழ வழிவகை செய்ய வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Read more »

செவ்வாய், மே 24, 2011

சாதி மற்றும் வருமான சான்றிதழ் பெற விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் குவிந்த மாணவர்கள்

விருத்தாசலம் : 

            பள்ளி, கல்லூரிகள் துவங்க உள்ள நிலையில் ஜாதி, வருமானச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்க ஏராளமான மாணவ, மாணவிகள் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் குவிந்தனர். பிளஸ் 2 தேர்தல் முடிவுகள் கடந்த 9ம் தேதி வெளியானது. 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் விரைவில் வெளிவர உள்ளது. மேலும் கோடை விடுமுறை முடிந்து வரும் 15ம் தேதி முதல் பள்ளிகள் துவங்க உள்ளன.
             இந்நிலையில் மேற்படிப்பிற்காக ஜாதி, வருமானம் உள்ளிட்ட சான்றிதழ்களை பெற விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் குவிந்திருந்தனர். இதனால் விருத்தாசலம் தாலுகா அலுவலகம் எப்போது மில்லாத அளவிற்கு பரபரப்பாக காணப்பட்டது.



Read more »

செவ்வாய், டிசம்பர் 21, 2010

விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் அரசின் பொங்கல் இலவச வேட்டி சேலை தயார்

விருத்தாசலம் : 

             விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் இருந்து இலவச வேட்டி சேலைகள் அந்தந்தப் பகுதி வி.ஏ.ஓ., அலுவலகங்கள் மற்றும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையொட்டி ஆண்டுதோறும் ஏழை எளியோர்களுக்கு அரசு இலவச வேட்டி, சேலைகளை வழங்கி வருகிறது. 

            விருத்தாசலம் தாலுகாவிற்குட்பட்ட விருத்தாசலம், கம்மாபுரம், ஊமங்கலம், நல்லூர், வேப்பூர் உள்ளிட்ட வருவாய் கோட்டங்களுக்கான ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 240 வேட்டிகளும் அதே எண்ணிக்கையில் சேலைக ளும் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்திற்கு வந்துள்ளன. இவ்வேட்டி, சேலைகளை தாலுகா அலுவலத்தில் இருந்து கிராமப் பகுதிகளில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகங்கள் மற்றும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று தொடங்கியது. தாசில்தார் சரவணன் தலைமையில் துணை தாசில்தார் ராமமூர்த்தி, ராஜா, ஆர்.ஐ.,க்கள் ராஜ்குமார், செல்வி, கமலம் ஆகியோர் கணக்கீட்டின்படி அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Read more »

திங்கள், ஜூன் 28, 2010

கடலூர் கலெக்டருக்கு பெற்றோர் நன்றி

கடலூர் : 

              நல்லூர் நகர் ஏழை சிறுவனுக்கு கண் நீர்பை அடைப்பு நீக்கும் சிகிச்சைக்கு உதவிய கலெக்டருக்கு அவரது பெற்றோர் நன்றி தெரிவித்தனர். விருத்தாசலம் தாலுகா நல்லூர் ஒன்றியம் நகர் பஞ்சாயத்தில் இலவச தொலைக் காட்சி வழங்கும் விழாவில் கூலித் தொழிலாளி மகன் 5ம் வகுப்பு படிக்கும் பாலகிருஷ்ணன் கலெக்டர் சீத்தாராமனிடம் கண்ணில் நீர் வடிவதாக மனு கொடுத்தான். உடனே கலெக்டர் கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். அதையொட்டி சிறுவனுக்கு நலப்பணிகள் இணை இயக்குனர் ஜெயவீரக்குமார் முன்னிலையில் கண் மருத்துவர் அசோக் பாஸ்கர் மூக்கில் அறுவை சிகிச்சை செய்து அடைப்பை நீக்கினார்.அதனால் மகிழ்ச்சியடைந்த மாணவனின் பெற் றோர் கடந்த 21ம் தேதி நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட ஒருங்கிணைப் பாளர் ஞானஸ்கந்தன் செய்திருந்தார்.

Read more »

செவ்வாய், ஏப்ரல் 27, 2010

அரிசி கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது: மாவட்ட வழங்கல் அலுவலர் உறுதி

 திட்டக்குடி : 

                   மாவட்டம் முழுவதும் அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் கடத்தல் தடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்தார். 

இது குறித்து திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் அவர்  கூறுகையில் '

                  கடலூர் மாவட்டத்தில் மாதந்தோறும் ஒவ்வொரு தாலுகாவாக 'காஸ்' பயன்படுத்தும் நுகர்வோர் குறைகேட்பு நாள் கூட்டம் நடத்தப்படுகிறது. டி.ஆர்.ஓ., தலைமையில் பண்ருட்டி, விருத்தாசலம் தாலுகாவில் முடிந்துள்ளது. போலி ரேஷன் கார்டு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு சம்பந்தமான மேல் முறையீட்டு மனுக்கள் இரண்டு கட்டமாக முடிந்துள்ளது. மாவட்டம் முழுவதும் அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் கடத்தல் கண்காணிக்கப்பட்டு தடுக்கப்பட்டு வருகிறது. கடத்தல் சம்பந்தமான புகார்களை உடனடியாக தெரிவிக்கலாம்' என கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior