உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 08, 2010

மளிகை, ஓட்டல்களில் ஆய்வு 9 கடைகளுக்கு நோட்டீஸ்

கடலூர் : 

             கடலூர் நகராட்சி பகுதியில் உள்ள மளிகை, ஓட்டல்கள், நடை பாதை கடைகளில் நகராட்சி கமிஷனர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

           கடலூர் நகராட்சி பகுதியில் நேற்று மாலை கமிஷனர் குமார், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் தேவராஜ் மற்றும் அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மஞ்சக்குப்பம் பகுதியிலிருந்த மளிகை கடைகள், ஓட்டல்கள், சாலையோர தள்ளு வண்டி உணவு கடைகள் என 45க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை செய்தனர்.

            இதில் காலாவதியான டால்டா, நூடுல்ஸ் பாக்கெட், வனஸ்பதி, ஊறுகாய், பேரிச்சம் பழம், கான்பிளக்ஸ் மாவு, கடலை மாவு, சாலையோர உணவு விடுதிகளில் சிக்கன், மட்டன் போன்றவைகளை கைப்பற்றினர். இவற்றின் மதிப்பு 50 ஆயிரம் ரூபாயாகும். மேலும் கடைகளில் பயன்படுத்திய மூன்று வீட்டு காஸ் சிலிண்டர்களை கைப் பற்றினர். மேலும் நான்கு மருந்து கடைகளில் உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களும் ஆய்வு செய்யப்பட்டது. பின் ஆய்வு செய்யப்பட்ட 9 கடைகளுக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

பொது அறிவிற்கு:
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர்கள் சிலையை செய்தவர் - டி பி ராய்

Read more »

கடலூரில் மென்பொருள் பூங்கா எம்.எல்.ஏ., அய்யப்பன் வேண்டுகோள்

கடலூர் : 

            கடலூரில் மென்பொருள் பூங்கா அமைத்தர வேண்டும் என எம்.எல்.ஏ., அய்யப்பன் சட்ட சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சட்ட சபையில் மின் துறை மானிய கோரிக்கையின் போது எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசியதாவது: 

              தி.மு.க., ஆட்சியில் 1998ம் ஆண்டு 8 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் கீழ்பவானி புனல் மின் திட்டமும், 1999ம் ஆண்டு 196 மெகாவாட் பேசின் பாலம் டீசல் எஞ்சின் மின் திட்டமும் துவங்கப்பட்டது. அதே ஆண்டு 5.5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக் கூடிய சாத்தனூர் புனல் மின் திட்டமும், 2000ம் ஆண்டு 700 மெகாவாட் முக்குருத்தி சிறு புனல் மின் திட்டம் என 942 கோடி ரூபாய் மதிப்பில் 244 மெகாவாட் திறன்கொண்ட 6 மின் உற்பத்தி திட்டங்கள் துவக்கப்பட்டன. கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்கும் போதெல்லாம் மின் உற்பத்தி செய்வதற்கான அடித்தளங்களை அமைக்கிறார். கடலூர் தொகுதி மிகவும் பிற்பட்ட தொகுதியாகும். எந்த தொழிற்சாலைகளும் இல்லை. முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் கடலூரில் மென்பெருள் பூங்கா அமைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். கடலூர் பகுதியில் மேலும் ஒரு புதிய பஸ் ஸ்டாண்டை உருவாக்க வேண்டும்.

               கடலூர் புறவழிச் சாலைகளுக்கு திட்ட மதிப்பீடுகள் செய்யப்பட்டு ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் அறிவித்தார். இதற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு, அந்த பணியை விரைந்து முடிந்து கடலூர் மக்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார்.

பொது அறிவிற்கு:
ஹான்ட் பிளானெட் என்பது - வெள்ளி

Read more »

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 2 ஜெனரேட்டர்கள்

நெல்லிக்குப்பம் : 

             நெல்லிக்குப்பம் நகராட்சியில் குடிநீர் தட்டுப் பாடு ஏற்படாமல் இருக்க 12 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு ஜெனரேட்டர்கள் வாங்கப்பட்டுள்ளது.

              நெல்லிக்குப்பம் நகராட்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகராட்சி வளாகம், ஆலை ரோடு ஆகிய இரண்டு இடங்களில் பிரதான மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளன. இதன் மூலம் காலை, மாலை இரு வேளைகளிலும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் வீடுகளில் கிணறு, ஆழ்துளை கிணறு பயன்பாட்டை மக்கள் மறந்தனர். கடந்த சில மாதங்களாக மூன்று மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. மேலும் மழைக் காலங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதாலும் குடிநீர் சப்ளை தொடர்ந்து வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்களுக்கு தொடர்ந்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய நகராட்சிக்கு ஜெனரேட்டர் வாங்க முடிவு செய்தனர். ஒவ்வொரு இடத்துக் கும் தலா 6 லட்சம் ரூபாய் மதிப்பில் 2 ஜெனரேட்டர்கள் வாங்கப்பட்டுள்ளது. இனி மின் சப்ளை இல்லா விட்டாலும் ஜெனரேட்டர்கள் மூலம் குடிநீர் சப்ளை சீராக இருக்கும்.

பொது அறிவிற்கு:
பெரிய பாதை கொண்ட கிரகம்  - புளுட்டோ

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior