உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 27, 2010

பகுதி நேர பி.இ.​ படிப்பில் சேருவதற்கு ஏப்ரல் 5 முதல் விண்ணப்பம் விநியோகம்

              பொறியியல் கல்லூரிகளில் பகுதி நேர பி.இ.​ படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளன. பாலிடெக்னிக் பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்று,​​ 2 ஆண்டு பணி அனுபவம் இருப்பவர்கள் இந்த படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வித் துறை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், 
 

                     2010-11 ஆண்டில் பகுதி நேர பி.இ.,​​ பி.டெக்.,​​ பொறியியல் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.​ பாலிடெக்னிக் பட்டயப் படிப்புகளில் தேர்ச்சி பெற்று,​​ 2 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் பணிகளில் இருப்பவர்கள் இந்த படிப்புகளில் சேரலாம்.

                              அதற்கான விண்ணப்பங்கள்,​​ சென்னையில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம்,​​ கோவை,​​ சேலம்,​​ திருநெல்வேலி,​​ காரைக்குடி,​​ வேலூர்,​​ பர்கூர் ஆகிய இடங்களில் அரசு பொறியில் கல்லூரிகள்,​​ கோவை பி.எஸ்.ஜி.​ பொறியியல் கல்லூரி,​​ கோவை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி,​​ மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் ஏப்ரல் 26ஆம் தேதி வரை அலுவலக வேலை நாள்களில் வழங்கப்பட உள்ளன.

                       விண்ணப்பக் கட்டணம் ரூ.300 ​(எஸ்.சி.,​​ எஸ்.டி.​ பிரிவினருக்கு ரூ.150). கட்டணத்தை "செயலர்,​​ பகுதிநேர பி.இ.​ மாணவர் சேர்க்கை,​​ கோவை'' என்ற பெயரில் கோவையில் செல்லத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை தபால் மூலமாகவும் பெறலாம்.​ விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதற்கு ஏப்ரல் 26ஆம் தேதி கடைசி நாள் ஆகு‌ம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior