உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 27, 2010

இ‌ன்று ஒரு மணி நேரம் விளக்குகளை அணைக்க மக்களுக்கு வே‌ண்டுகோ‌ள்

                   பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் வகையில் ஒரு மணி நேரம் அத்தியாவசியமற்ற விளக்குகளை அணைக்க மின்சார வாரியம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

                      "
டபிள்யு.டபிள்யு.எப்.​- இந்தியா'' என்ற அரசு சாரா நிறுவனமும்,​​ தமிழக அரசும் இணைந்து பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.​ ​ இதன் ஒரு பகுதியாக இ‌‌ன்று இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை வீடுகளில் அத்தியாவசியமற்ற விளக்குகளை அணைக்குமாறு,​​ பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
 இது குறித்து தமிழ்நாடு மின் வாரிய தலைவர் சி.பி.​ சிங்,​​ எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் டேவிதார் ஆகியோர் கூறுகை‌யி‌ல், 
 
                  தமிழகத்தில் 2004ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3,800 கோடி மெகாவாட்டாக இருந்த மின் பயன்பாடு,​​ 2009ஆம் ஆண்டு மார்ச்சில் 5,300 கோடி மெகா வாட்டாக உயர்ந்துள்ளது.
                 தேவையைக் கருத்தில் கொண்டு,​​ மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும்.​ உலக வெப்பமயமாதலைத் தடுக்கும் வகையில்,​​ 27ஆ‌ம் தே‌தி மேற்கொள்ளவுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அனைத்து மக்களும் பங்கேற்ற ஒரு மணி நேரம் தேவையற்ற விளக்குகளை அணைக்க முன்வரவேண்டும்.​ இதன் மூலம் 60 மெகா வாட் மின்சாரம் சேமிக்கப்படும்.
                     தமிழகத்தில் இப்போது 1,100 மெகா வாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது.​ இந்த பற்றாக்குறை காரணமாக சில பகுதிகளில் 2 மணி நேரத்துக்கு மேல் மின்தடை ஏற்படுவது உண்மைதான். இப்போது நடைமுறையில் இருக்கும் மின்வெட்டு,​​ கோடை காலத்தில் உயர்த்தப்படாது.​ இதே அளவில்தான் மின்வெட்டு இருக்கும்.​ மே 15ஆம் தேதிக்குப் பின் காற்றாலை மின் உற்பத்தி தொடங்கிவிடும்.​ அதன்பிறகு மின் பற்றாக்குறை ஒரளவு குறையும்.
                     பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் வகையில் வனத்துறை சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசிய வன கொள்கையின் படி நிலப்பரப்பில் 33 சதவீதம் வனப் பகுதி இருக்க வேண்டும்.​ இந்த இலக்கை எட்ட தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
                        கடந்த இரண்டரை ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிகள் மூலம்,​​ கூடுதலாக 24 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு வனப் பரப்பு அதிகரித்துள்ளது. இதன்படி இப்போது தமிழகத்தில் 22 சதவீத நிலப்பரப்பு,​​ வனப் பகுதியாக உள்ளது.​ இதை 33 சதவீதமாக உயர்த்த,​​ 2010-11 நிதியாண்டில் ரூ.​ 25 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது என்றன‌ர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior