உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 27, 2010

மே 2-ல் குரூப் 1 முதல் நிலைத் தேர்வு

 சென்னை:

            தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 முதல் நிலைத் தேர்வு மே 2-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வு சென்னையில் உள்ள தேர்வு மையங்கள் உள்பட 33 மையங்களில் நடைபெறுகிறது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுத வேண்டும் மற்றும் ஏன் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை என்பது குறித்த விவரங்கள் www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய வலையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவதற்கான நுழைவுச்சீட்டு மற்றும் நிராகரிப்பு குறிப்பாணைகள் அஞ்சலில் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்து புதன்கிழமைக்குள் (ஏப்ரல் 28) எந்த தகவலும் பெறாதவர்கள் ஏப்ரல் 29 முதல் மே 1-ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பழைய சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியில் செயல்படும் தேர்வாணைய அலுவலகத்தில் நேரில் வந்து தெரிந்து கொள்ளலாம். மேலும் 044-3245 2050, 044-3245 2051 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். சென்னை தவிர மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாவட்ட வருவாய் அலுவலகத்தில் அதிகாரிகளை மேற்கண்ட நாள்களில் அணுகி தற்காலிக நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு தற்காலிக நுழைவுச்சீட்டு அல்லது மாற்று நுழைவுச்சீட்டு பெற விரும்புபவர்கள் இது தொடர்பாக ஒரு கடிதத்துடன், மற்றொரு வெள்ளைத்தாளில் விண்ணப்பதாரரின் சமீபத்திய புகைப்படத்தை ஒட்டி அதில் குரூப்-ஏ, குரூப்-பி பிரிவில் அடங்கிய அரசு அலுவலரின் சான்றொப்பம் பெற்று தேர்வாணையத்தையோ அல்லது அந்தந்த மாவட்ட வருவாய் அலுவலகங்களையோ தேர்வுக்கு முன்பு நேரில் அணுகலாம்.அத்தகைய விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு குறிப்பிட்ட இறுதி நாளுக்கு முன்னதாக தங்களால் விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டதற்குரிய சரியான ஆதாரங்களை கொண்டுவர வேண்டும்.விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட ஆணையை மறுபரிசீலனை செய்யவோ, தேர்வு மைய மாற்றம் குறித்த எவ்விதக் கோரிக்கையும் ஏற்க இயலாது என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior