விருத்தாசலம்:
              விருத்தாசலத்தில் இரண்டாவது நாளாக காலாவதி உணவுப் பொருள்களை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். விருத்தாசலம் கடைவீதி முல்லாத்தோட்டம் பகுதியில் உள்ள கடை ஒன்றில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பரமசிவம் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில், தகுதி நாள் முடிந்த மற்றும் தேதி, முத்திரையிடப்படாத 20 மூட்டை குடிநீர் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தேதி மற்றும் முத்திரையில்லாத உலர் பழங்களும் கைப்பற்றப்பட்டன. இனி காலாவதியான பொருள்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என துப்புரவு அலுவலர் பரமசிவம் எச்சரித்தார். ஆய்வின்போது துப்புரவு ஆய்வாளர்கள் சிவப்பிரகாசம், ராஜ்குமார், பாலமுருகன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் முத்தமிழன், ஆறுமுகம், செல்வம், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக