கடலூர் : 
           கடலூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்  விற்பனை துவங்கியது. பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 9ம் தேதி  வெளியிடப்பட்டது. 
           தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து பொறியியல்  மற்றும் கலைக் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வினியோகம்  செய்யப்படுகிறது. கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரியில்  சேருவதற்கான விண்ணப்பங்கள் விற்பனை நேற்று முன்தினம் முதல் துவங்கியது.  ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுவதுடன், பூர்த்தி  செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அன்றைய தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். 
 விண்ணப்பக் கட்டணம் 
 எம்.காம்., - எம்.எஸ்சி., பாடப்பிரிவுக்கான விண்ணப்பம் 43 ரூபாயும், 
பி.ஏ.,  - பி.எஸ்சி., -  பி.காம்., பாடப் பிரிவுக்கான விண்ணப்பம் 27 ரூபாய்க்கும்  விற்பனை செய்யப்படுகிறது.   
0 கருத்துகள்:
கருத்துரையிடுக