சென்னைப் பல்கலைக்கழத்தின் ஆங்கிலம் - தமிழ் அகராதி மறுபதிப்பு  செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது.  
              ஆங்கிலம் - தமிழ் அகராதிகளில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் அகராதிக்குச்  சிறப்பான இடம் உண்டு. டாக்டர் ஏ.சிதம்பரநாதன் செட்டியார் தலைமையிலான ஆசிரியர்  குழுவால் இந்த அகராதி 1963 - ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. முதலில் மூன்று  தொகுதிகளாக வெளியாகி, பின்னர் 1965, 1977,1981,1992-ஆம் ஆண்டுகளில் மறுபதிப்பு  செய்யப்பட்டபோது ஒரே தொகுதியாக வெளியானது.   இந்நிலையில் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜி.திருவாசகத்தின்  முயற்சியால் இப்போது மீண்டும் மறுபதிப்பு செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. 
             கெட்டியான அட்டையுடன் தயாரிக்கப்பட்ட அகராதியின் விலை ரூ.400, சாதாரண அட்டையுடன்  கூடிய அகராதியின் விலை ரூ.350 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  அறிமுகச் சலுகையாக 25 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அகராதியை வாங்க  விரும்புவோர் சென்னைப் பல்கலைக்கழக பதிப்பு பிரிவில் பெற்றுக்கொள்ளலாம். 
மேலும்  விவரங்களுக்கு... 
044-25399520
0 கருத்துகள்:
கருத்துரையிடுக