கிள்ளை : 
          சிதம்பரம் சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் புதிய மாணவர்கள்  சேர்க்கைக்கான விண்ணப்பம் விற்பனை துவங்கியது. 
இதுகுறித்து கல்லூரி  முதல்வர் (பொறுப்பு) சேரமான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 
             சிதம்பரம் சி.முட்லூர் அரசு கல்லூரியில் இளங்கலை பாடப் பிரிவுகளான பி.ஏ.,  தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், பி.காம்., பி.எஸ்சி., வேதியியல்,   இயற்பியல், தாவரவியல், விலங்கியல், பி.பி.ஏ., உள்ளிட்ட பாடப்பிரிவுகளில்  புதிய மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. எஸ்.சி., -  எஸ்.டி., மாணவ,மாணவியர்கள் ஜாதிச் சான்று நகலைக் கொடுத்து இலவசமாகவும்,  மற்றவர்கள் 27 ரூபாய் நேரில் கல்லூரியில் செலுத்தி கல்லூரி வேலை நாட்களில்  காலை 10 மணி முதல் மாலை 5 வரை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்று நகல்களுடன் ஜூன் 5ம் தேதி  மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ கல்லூரியில் வந்து  சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு கல்லூரி முதல்வர் (பொறுப்பு)  சேரமான் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.  
0 கருத்துகள்:
கருத்துரையிடுக